சிறுபான்மை மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித்தொகை

    மவுலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டம் என்ற பெயரில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை மேற்கொள்ள, அவர்களுக்கு ஒருங்கிணைந்த 5 ஆண்டு உதவித்தொகை திட்டம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறுவோர், மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அறிஞர்(scholar) என்று அழைக்கப்படுவர்.

தகுதிகள்

இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை சமூகம் ஒன்றை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், ரெகுலர் மற்றும் முழுநேர எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிப்பில், ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், சேர்க்கைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை திட்டத்திற்கு ஒரு சிறுபான்மை மாணவர் ஒரு தடவை தகுதிபெற்றுவிட்டால், அவர் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் வேறெந்த உதவித்தொகை திட்டத்திலும் பயனடைய முடியாது.

இந்த உதவித்தொகையைப் பெற, NET/SLET ஆகிய தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
எம்.பில்., படிப்பிற்கு 2 ஆண்டுகளும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., இணைந்த ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கு 5 ஆண்டுகளும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்தேதி - ஆகஸ்ட் 30.

அனைத்து விரிவான விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.ugc.ac.in/manf/default.aspx