மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இதற்குப்பெயர் தான் கல்வி

   இந்திய மருத்துவ முறைகளிலும் 
இறைவன் படைத்துள்ள தாவரங்களின்
மருத்துவத் தன்மைகளை ஆய்வு செய்வதிலும் 
முஸ்லிம்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் 
என்று எங்களுடைய எல்லா கல்வி வழிகாட்டி


நிகழ்ச்சியிலும் வலியுறுத்தி வருகின்றோம்

பெருகிவரும் புற்று நோய்க்கு
" சிரியா நங்கை " என்ற மூலிகையை ஆய்வு செய்து 
தனது முதுகலை உயிரி தொழில்நுட்பம் ( Msc Bio-Tech)
படிப்பை பூர்த்தி செய்துள்ள ஒரு பெண்மணி 
தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது Ph.D ஆய்வு 
குறித்து சில விளக்கங்கள் கேட்டார்.

கடலில் கொட்டப்படும் எண்ணைக் கழிவுகளை அகற்றும் ஆற்றலுடைய மூலிகைகளில் M.Phil ஆய்வு படிப்பை 
முடிக்க இருப்பதாகவும் கூறினார்.

தனது கணவர் தன்னுடைய ஆய்விற்கு 
துணை நிற்பதாகவும் கூறினார்

மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருந்தது. 
இதற்குப்பெயர் தான் கல்வி

" புற்று நோய் போக்கும் மூலிகைகள் " என்ற 
தலைப்பிலேய ஆய்வு செய்யுமாறு கூறினேன்.

அல்லாஹ் அந்த அறிவை உங்களுக்கு வழங்கினால்......
முதலாளித்துவ வாதிகள் செய்வது போல 
அதை அறிவு சார் சொத்துரிமை என்று 
உரிமை கொண்டாடி...... பணம் பார்க்கும் ஆயுதமாக அதை மாற்றிவிடாதீர்கள் என்றும் கூறினேன்.

முஸ்லிம்கள் ஆய்வு செய்து ஒரு நுட்பத்தை கண்டுபிடித்தால் 
அதை உலக மக்களுக்கு இலவசமாக வழங்குவது தான் 
இஸ்லாமிய மரபு.

5