// பெண்கள் பொறியியல் படிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் //

      ...... என்று நான் கருத்து பதிவு செய்துவிட்டு 

ஒரு பெண்கள் கல்வி நிகழ்ச்சிக்கு சென்று வருவதற்குள் 
எங்களுடைய கல்விப்பணி அதன் நோக்கம் இலக்கு
இவைப்பற்றிய புரிதல் இல்லாமல் குற்றச்சாட்டுகளும் 
அவதூறுகளும் முகநூலில் அள்ளி வீசப்பட்டுள்ளன.

" இஸ்லாத்தின் நிழலில் முஸ்லிம்

சமூக முன்னேற்றம்" 
என்ற இலக்கை நோக்கி பயணிப்பதில் ஆக்கப்பூர்வமான கருத்துப்பரிமாற்றங்கள் நமது பாதையை நெறிப்படுத்தும்
என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

எங்களுடைய வழிகாட்டுதலில் ஏதாவது தவறு இருந்து 
அதை சரியான விளக்கங்களுடன் சுட்டிக்காட்டும்போது 
திருத்திக் கொண்டுள்ளோம்.

அதே நேரத்தில் பெண்கள் தொடர்பாக எதைச்சொன்னாலும் 
அதை ஆணாதிக்கத்தின் அடையாளமாக அல்லது 
அடிப்படை வாதத்தின் வெளிப்பாடாக பார்க்கும் 
சிகப்பு ( மார்க்சிய) ஊதாரித்தன (முதலாளித்துவ)
சிந்தனையுடைய சில முஸ்லிம் எழுத்தாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகளின் புலம்பல்களை நாங்கள் எப்போதும் 
கவனத்தில் கொள்வது கிடையாது.

முஸ்லிம் சமூகத்தில் அவர்களுக்கு 
எந்த அங்கீகாரமும் இல்லை

பொறியியல் கல்விக்கு வருவோம்:

MECH / CIVIL / ECE / EEE / AUTO / AERO / 
CHEMICAL / INDUSTRIAL / MARINE....etc....

போன்ற பொறியியல் கல்வி அதன் பாடத்திட்டங்கள் 
செயல் முறை வகுப்புகள் அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தது. தொழிற்சாலையோடு தொடர்புடையது.

தொழில்துறைக்கு தகுதியான பொறியாளர்களை உருவாக்கி அவர்களை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ( சில இடங்களில் கூடுதலாக) கசக்கிப்பிழிந்து மாத ஊதியம் வழங்குவது இதன் இலக்கு. ( விதி விலக்குகள் பொது விதியாகாது )

இது உழைத்துப் பொருளீட்டுவதை இஸ்லாமிய கடமையாக கொண்டுள்ள ஆண்களுக்குப் பொருந்தும்.

( பெருவாரியான தமிழக முஸ்லிம் சமூகம் 
வரலாறு முழுவதும் வியாபார சமூகமாகத்தான் 
வாழ்ந்துள்ளது. மாத ஊதியத்திற்கு பணியாற்றும் 
அடிமைபோக்கு வளைகுடா நாடுகளின் 
தொடர்பிற்கு பிறகும் தொழில்துறையின் 
வளர்ச்சிக்குப் பிறகும் என்பதை தமிழக 
முஸ்லிம்களின் வரலாற்றைப் படித்தவர்களுக்குத் 
தெரியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் )

பெண்களுக்கு பொருளீட்டுவதை இஸ்லாம் 
அனுமதியாக கொடுத்துள்ளது.(இது குறித்து இன்னும் விரிவாக உலமாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் )

பெண்களின் இயல்பிற்கும் உடல் அமைப்பிற்கும் 
காலை முதல் மாலை வரை வாழ்நாள் முழுவதும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவது இயலாத காரியம் 
என்பது முட்டாளுக்குக் கூட தெரியும்.சில மூளைச் சலவை செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு தெரியவில்லை.

தமிழக முஸ்லிம் சமூகத்தில் கல்வி ரீதியான
எங்களுடைய இலக்கு தெளிவானது

ஆண்களை அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் 
அதிகாரமுள்ள சமூகமாக மாற்றுவது

பெண்களை ஞானமிக்கவர்களாக இஸ்லாமிய கலாசாரத்தை 
உலகின் ஒப்பற்ற கலாசாரமாக உயர்த்திப் பிடிப்பவர்களாக உருவாக்குவது.

இந்த இலக்கை அடைவதற்கு உயர் கல்வியில் 
யார் எதை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பதை 
எங்களது சிறிய அறிவின் சிந்தனையில் உதித்ததைக் கொண்டு வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் களத்தில் இறங்கி பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்....!

இதில் உடன்பாடு கொண்டவர்களை எங்களோடு 
இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம்.

முரண்பாடு கொண்டவர்களின் விமர்சனங்களால் 
எங்கள் கல்விப்பணியின் வேகம் அதிகரிக்கும்.

பொறாமையிலும் காழ்ப்புணர்ச்சியிலும் அவதூறுகளை
அள்ளி வீசுபவர்களுக்கு பதில் சொல்வதற்கு 
எங்களுக்கு நேரமில்லை. அவர்களை அல்லாஹ்விடம் முறையிடுவோம்.

67