சீனக் களிமண் சிற்பி Ceramic Technology

corr1செராமிக் எனும் சீனக் களிமண் பற்றித் தெரிந்து வைத்திருப்பவர்கள் அதன் இன்னொரு பக்கத்தை தெரிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. பெரும்பாலான கருவிகளையும் சிற்பங்களையும் செராமிக்கைக் கொண்டு படைக்கலாம்.
இந்த மண்ணில் சிற்பங்களை உருவாக்குவது என்பது மிகச் சிறந்த கலை. பிரபலங்கள் பலர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நயனிகா சட்டர்ஜி என்பவர்புகழ் பெற்ற மாடல் கலைஞர். இவரது இன்னொரு தொழில் செராமிக்கில் சிற்பங்களை வடிப்பது. நீங்களும் முயற்சிக்கலாமே!
இதைக் கற்பது எப்படி?
சிற்பம் தயாரிப்பது என்பதற்குப் படித்துதான் ஆக வேண்டுமா என்று நினைப்பீர்கள். இயற்கையான கற்பனைத் திறன் இருந்தால் போதாதா என்று தோன்றும். செராமிக்கை எப்படி தயார் செய்வது, கையாள்வது, உலையிடுவது என்பது போன்ற தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டாக வேண்டும். அதற்குத்தான் முறைப்படியான பயிற்சி தேவைப்படுகிறது.
இந்தத் துறையில் சிறப்பான தேர்ச்சி பெற்ற கலைஞராக வேண்டுமானால் நீங்கள் 10, +2வில் இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்திருக்க வேண்டும்.
பட்ட மேற்படிப்பு படிப்பதற்கும் முயற்சிக்கலாம். இயற்பியல், வேதியல், கணிதம், சமூக அறிவியலில் வலுவான பின்னணி இருந்தால் சிறப்பான தகுதிகளை எட்டலாம். ஆராய்ச்சிகளைத் தொடரலாம்.
வேலை வாய்ப்பு:
உங்கள் விருப்பப்படியான சூழ்நிலையை அமைத்துக் கொள்ள செராமிக்கும் ஒரு வகையில் களிமண் போன்றதுதான். பச்சையாக இருக்கும் போது கையாலோ இயந்திரத்தாலோ பிசைய வேண்டும். இதற்குத் தயங்காமல் பொறுமையாகவும் கற்பனை வளத்தோடும் கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டும். அதன் பின் அவற்றை உலையில் இட்டுச் சுட வேண்டும். செய்து முடித்த பொருட்களைப் பத்திரமாக எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.
விற்பனைக்கான முயற்சிகளில் விவரமாக ஈடுபட வேண்டும். கண்காட்சிகளை நடத்த வேண்டும். வெளி ஊர்கள், வெளி நாடுகளுக்குச் செல்லவும் தயங்கக் கூடாது. நீங்கள் உங்கள் திறமையை உலகறியச் செய்ய வேண்டும்.
செராமிக் தொழில் நுட்பம் கற்றுக் கொண்டால் பூச்சாடியும், பொழுது போக்குப் பொருட்களும்தான் செய்து கொண்டிருக்க வேண்டும் போல் இருக்கிறது என்று முடிவு செய்து விடாதீர்கள். இது நீங்கள் பெறும் திறமையின் அடையாளம்.
செராமிக்கால் செய்யப்படும் மின்னணுப் பொருட்கள் இருக்கின்றன. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வெப்பக் கருவிகளில் செராமிக் பாகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விண் வெளியில் செலுத்தப்படும் ராக்கெட்களின் கூர் முனைப் பகுதியிலும் செராமிக் பகுதிகள் வேண்டியதாக இருக்கின்றது. ஆகவே இந்தத் துறையில் பயிற்சி பெற்ற உங்களுக்கு எங்கெல்லாம் வேலை வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் மனதுக்குப் பிடித்த சிற்பங்களைச் செய்து கொள்கிறேன். மற்றபடி மாதச் சம்பள வேலைக்குத் தான் போவேன் என்கிறீர்களா? கண்ணாடி, சிமென்ட், உலைக்கள் ஓடுகள், இரும்பு, மின் சாதனங்கள், அணுவிசைக் கருவிகள் போன்ற பல்வேறு உற்பத்தித் துறைகளில் நீங்கள் வேலை வாய்ப்பைப் பெற முடியும்.
வடிவமைப்பு என்பது இதில் முக்கியமான பகுதி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க வாய்ப்புகளும் அதிகம். எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். இன்னொரு விசயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
உங்கள் சிற்ப வடிப்புத் திறன் சிறப்பாக இருக்குமானால் உங்களது ஒரே ஒரு சிற்பம் உங்கள் வாழ்நாள் முழுவதும் வாங்கும் சம்பளத்திற்கு சமமாக விற்றுப் போகக் கூடும். எனவே இன்னும் ஆழமாகச் சிந்தியுங்கள்.
இப்படியும் வாய்ப்பு இருக்கிறது:
நீங்கள் இந்தக் கலையை அஞ்சல் வழியிலும் கற்றுத் தேறலாம். வீட்டில் இருந்து கொண்டே படித்து வெற்றி பெறலாம். இந்தத் துறையில் நீங்கள் உங்கள் தேர்ச்சியை எந்த வகையிலும் அமைத்துக் கொள்ளலாம்.
பட்டப் படிப்பும் படிக்கலாம். தொழில் நுட்ப படிப்பை நான்கு ஆண்டுகள் படிக்கலாம். அதற்கு மேல் ஒன்றரை ஆண்டு படித்து பட்ட மேற்படிப்புத் தகுதியையும் பெறலாம். கூடவே உற்பத்தியையும் பார்த்துக் கொள்ளலாம். பி.எஸ்.சி. (டெக்) பி.எஸ்.சி., பி.இ., என்ற விருப்பமான பட்டம் பெற படிக்கலாம். வசதிப்பட்ட இட்த்தில் படிப்பை முடிக்கலாம்.
நீங்கள் செராமிக் சிற்பியாகத் தொடரலாம். செராமிக், களிமண், ஓடுகள் தொடர்பான தொழிற்சாலைகளுக்கு ஆலோசனைகள் வழங்கலாம். வடிவமைப்புக் கலைஞராகவும் வாழ்க்கை நடத்தலாம்.
சொந்த உலை, ஆலையை அமைக்கலாம். மற்றவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும் உற்பத்தி செய்து கொடுக்கலாம். இப்படி நீங்கள் எந்த வழியை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். கலை, அறிவியல், தொழில் நுட்பம் என அனைத்தும் கலந்த விசித்திரத் திறமை இது. அதில் விந்தைகளைப் படையுங்கள். செராமிக் சிற்பம் பற்றியப் படிப்புகள், விவரங்கள், குறிப்புகள், முகவரிகள்:
The Government College of Engineering and Ceramic Technology, formerly known as College of Ceramic Technology, is a government funded institute, affiliated to the West Bengal University of Technology in Kolkata, India.
ceramic sculpture b.sc.(tech) 4 years
Administrative information
Mr. T.K. Chakraborty
Administrative Officer (I)
Central Glass & Ceramic Research Institute
196 Raja S C Mullick Road, Kolkata-700032 (INDIA)
Phone : 00 91-033-2473-3469/76/77/96 Extn.: 3510
Email : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். .i

Indian Institute of Technology, Bombay
Powai, Mumbai - 400076, INDIA TEL: +91-22-2572-2545
FAX: +91-22-2572-3480
….
Alagappa College of Technology
Higher educational institution in Chennai, India
DirectionsWrite a review
Alagappa College of Technology is an educational institution that offers higher education in Engineering, Technology and allied Sciences. Wikipedia
Address: Sardar Patel Rd, Guindy, Chennai, Tamil Nadu 600025
Phone: 044 2235 9101
Founded: 1944
ceramic sculpture b.tech

PDA College of Engineering
College in Gulbarga, India
DirectionsWrite a review
The PDA College of Engineering or Poojya Dodappa Appa College of Engineering is located at Gulbarga in the state of Karnataka, India. The college was established in 1958 by the Hyderabad Karnataka Education Society. Wikipedia
Address: Shambhognlli, Kalaburagi, Karnataka 585102
Phone: 084722 20172
Founded: 1958