மின்னுலை பொறியியல் நுட்பம்

Big Bend Power Station
நீங்கள் இந்தத் துறையில் தனிப்பட்ட தகுதியை வளர்த்துக் கொண்டால் வேலை வாய்ப்பு பெறுவது எளிது. பொதுவான தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு இருப்பவர்களை விட நீங்கள் முன்னுரிமை பெற முடியும்.
மின் உற்பத்தித் துறையில் ‘தெர்மல் பவர் பிளாண்ட் இஞ்சீனியரிங்’ என்பது முக்கியமான படிப்பு. பட்டயப் படிப்பிற்கு பிந்தைய படிப்பாக இதைப் படிக்கலாம். இந்திய மின் விசைச் சட்ட விதிகள் 1956 மற்றும் 1981 இன் படி இந்தத் தகுதியைப் பெற்றிருப்பது கட்டாயமாகிறது. திறமை பெற்ற மின் உற்பத்தி வல்லுனர்களை உருவாக்கும் நோக்கில் இந்தப் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அடிப்படைத் தகுதி :
இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு நீங்கள் மூன்றாண்டு பட்டயப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் அல்லது அதற்குச் சமமான படிப்பில் தேறி இருப்பது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சித் துறை:
ஒரு ஆண்டு காலத்திற்கான பயிற்சி இது. இரண்டு செமஸ்டர்கள் படிக்க வேண்டும். அனல் மின் நிலையங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்துப் பயிற்சிகளையும் இந்த ஒரே பயிற்சியின் மூலம் பெற்று விடலாம்.
இந்தியாவிலேயே நான்கு இடங்களில்தான் இந்தப் பயிற்சியை அளிக்கிறார்கள். அருகில் உள்ள மின் நிலையத்தில் வேலையின் போதே பயிற்சியாகக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
தேர்வு முறைகள்:
மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு பயிற்சி நிலையத்திலும் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கிறார்கள். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடுக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு:
இங்கு 100 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையம் ஒன்றை நிர்வகிப்பதற்கான தொழில் நுட்பம் கற்றுத் தரப்படுகிறது. சட்டப்படி இந்தத் தகுதி கொண்டவர்களைத் தான் இந்தப் பணியில் அமர்த்த முடியும்.
பயிற்சி அளிக்கும் அமைப்பிற்குப் பல அனல் மின் உற்பத்தி நிலையங்களுடன் நல்ல தொடர்பு இருக்கிறது. இதனால் அங்கு பயிலும் பொறியாளர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதில் எந்தவித சிரமும் இருக்காது.
மின் உற்பத்தியையும் தனியார் வசம் விடும் நிலை இருப்பதால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலும் வேலை வாய்ப்பு கணிசமாக ஏற்படும். தனித் தகுதி என்பதால் தேடிப்பிடித்துத் தேர்வு செய்து கொள்வார்கள்.
இதர விவரங்கள்:
இந்தப் பயிற்சியில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 27 தான். இது பொதுவான விண்ணப்பதாரர்களுக்குப் பொருந்தும். நீங்கள் ஏதேனும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கலாம். அந்த நிறுவனம் உங்களை இந்தப் பயிற்சிக்குப் பரிந்துரைக்கலாம். அவ்வாறாயின் உங்களுக்கு வயது வரம்பு ஒரு தடையாக இருக்காது.
பயிற்சிக் கட்டணம்:
எந்த நிறுவனமும் பரிந்துரை அளிக்காத வகையில் பொதுப் பயிற்சியாளராகச் சேர்பவர்களுக்குத்தான் குறைந்தபட்சக் கட்டணமாக 30.000 ரூபாய் வசூலிக்கிறார்கள். பரிந்துரை செய்யப்பட்டு வரும் பயிற்சியாளர்களுக்கு கட்டணம் அதிகம்.
மாநில மின் வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பயிற்சியாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் வாங்கப்படுகிறது. தனியார் துறையில் இருந்து அனுப்பி வைக்கப்படுபவர்களுக்கு ரூ.60 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு எந்த வகையான கட்டணச் சலுகைகளும் அளிக்கப்படுவது இல்லை.
நியாயமான கட்டணத்தில் தங்கும் வசதியும் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
யாருக்கு ஏற்றது?
பட்டம், பட்டயப் படிப்பை முடித்த பின் மின் உற்பத்தி நிலையங்களில் வேலை செய்ய விருப்பம் கொண்டவர்களுக்கு ஏற்றது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பணியாற்ற முடியும். இடமாற்றலுக்கு வாய்ப்பு இல்லை என்பதை மனதில் ஏற்றுக் கொள்ளும் மன நிலை கொண்டவராக இருக்க வேண்டும். உடல் நலம் உள்ளவராக இருப்பது அவசியம்.
இந்திய அரசு விசைத் துறையின் கீழ் ஐஎஸ்ஓ 9001-2000 சான்றிதழ் பெற்ற பயிற்சி நிறுவனம் இப்பயிற்சியை அளிக்கிறது. முழுக்க முழுக்க தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவீர்கள். இதனால் வேறு வகை செலவு எதுவும் கிடையாது.
தனியார் துறையில் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழ்நிலையில் இந்தப் பயிற்சி பெரிதும் கை கொடுக்கும். ஆண்டுக்கு 200 பேர் மட்டுமே இந்தப் பயிற்சியைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே இந்தப் பயிற்சியை முடித்து விட்டு வருபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு நிச்சயம். பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படும் பயிற்சியாளர்களுக்குப் பதவி உயர்வும் சலுகைகளும் அதிகம்.
பயிற்சிக்கான விவரங்கள், முகவரிகள்:
The Principal Director
National Power Training Institute,
Southern Region,
Block-14, Neyveli,
Tamilnadu. PIN-607803.

Phone: 04142 - 269427, 257879, 257878
Fax: 04142 - 269427

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Website: http://www.nptineyveli.in/

National Power Training Institute (N.R.)
Address: BTPS Complex, Badarpur, New Delhi, Delhi 110044
Phone:011 2694 0722
National Power Training Institute (NR)

BTPS Complex,
Badrapur, Mathura Road,
New Delhi- 110044

Ph. 011-26940722, Shri. V.K. Gupta, Principal Director
011- 26952083, Shri M.V. Pande, Director
011- 26944198, Shri Ravinder Singh, Director
011-26971551, Smt. Meena Kumari, Director
011-26944198, Shri. Giriraj Kishore, Director
011-26944198, Shri. N.K. Srivastava, Deputy Director
011-26971551, Dr. S. Selvam, Deputy Director

National Power Training Institute (NPTI)
South Ambazari Road, Gopal Nagar,
Nagpur - 440 022 (M. S.)

Telphone : 91-712-2231478, 2236538, 2226176, 2225564, 2220476.
Fax : 91-712-2220413
Email : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
website : http://www.nptinagpur.com