நிலவியல்a B.Sc., Geology

Mine-Geologist
ஜியாலஜி என்பது நில அமைப்பியல் முதல் பூமியின் தளங்கள், தட்ப வெட்ப நிலை, அவை மக்களை பாதிக்கும் விதம், நிலத்தடிப் பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள், கனிமங்கள், படிவங்கள், நிலத்தடி நீர், மேல்மட்ட நீர், கடலின் இயக்கங்கள் போன்றவற்றைப் பற்றி படிக்கும் மூன்றாண்டுப் படிப்பாகும். மினராலஜி, ஓஷனோகிராபி (Oceanography)
மரைன் ஜியாலஜி (moraine geology) பெட்ரோலியம் ஜியாலஜி, பேலியென்டாலஜி (Paleontology), சீ மாலஜி (Seismology), வல்கனாலஜி (Volcanology), ஹைடிராலஜி, ஹைடிரோஜியாலஜி (Hydrogeology), மீட்டியராலஜி (Meteorology) ஆகிய பல பிரிவுகளையும் சேர்த்துப் பயிற்றுவிக்கும் பயனுள்ள படிப்பாகும்.
+2 மாணவர்களில் பலருக்கு ஜியாலஜி என்றொரு படிப்பு இருப்பதே தெரியாது. நாம் நீரைப் பற்றியும் தெரிய வேண்டும்; நிலத்தைப் பற்றியும் அறிய வேண்டும். நீருக்கடியிலும் நிலம் இருப்பதை உணர வேண்டும். இவற்றிலெல்லாம் வளங்கள் நிறைந்திருப்பதை அறிய இப்படிப்பு அவசியமாகும்.
வேலை வாய்ப்புகள்:
புவியமைப்பியல் படிப்பை முடித்தவர்கள் இந்திய புவியமைப்பு அளத்தல் நிறுவனம் (Geological Survey of India (GSI), மத்திய நிலத்தடி நீர் மையம் (Central Ground Water Board), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC - Oil and Natural Gas Corporation Limited), இந்திய நிலக்கரி மையம் (Coal India Limited), அணுகனிம மையம் (Atomic Minerals Division), அணுசக்தித் துறை (Department Of Atomic Energy) போன்ற நிறுவனங்களில் பணி புரியலாம். மேலும் கனிமத்துறைகளிலும் சுரங்கங்களிலும் தனியார் கிரைனெட் சுரங்கங்களிலும் கல்லூரிகளிலும் பணிபுரியலாம்.
கற்றுத் தரும் இடங்கள்:
Presidency College, Chennai
Government Arts College, Salem
Alagappa Government Arts College, Karaikudi
Jawahar Science College, Neyveli
National College, Tiruchirappalli
V.O.Chidambaram College, Thoothukudi
Thiru Govindasamy Government Arts College, Tindivanam, Villupuram