இதழியல் JOURNALISM

journalism jobs 1
இதழியல், தகவல் தொழில் நுட்பத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். இன்று மாணவர்கள் அனைவரும் விரும்பிப் படிக்கும் ஒரு துறையாக இதழியல்துறை மலர்ந்து கொண்டு இருக்கிறது.
இன்றை கால கட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கேற்ப எளிதான, பரந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி, தொலைக்காட்சிகள் மட்டுமே தகவல் அறிய உதவும் சாதனங்களாக இருந்தநிலை, இன்று தலைகீழாக மாறியிருப்பது ஒன்றே இத்துறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
இதழியல் துறையில் அவரவர் பதவி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது. பேனாவும் புகைப்படக் கேமராவும் மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணம் கூடாது. நடப்பு விவகாரங்கள் உட்பட அனைத்து துறைகள் சார்ந்த அறிவும் தெளிவான கண்ணோட்டமும் எளிய மொழி நடையும் கருத்துக்களை துணிவுடன் வெளியிடக்கூடிய மனப்பாங்கும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் இத்துறைக்கு இன்றியமையாதது.
நேரம் காலம் கருதாமல் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டியதும் பத்திரிக்கையாளர்களின் கடமை.
மிகுந்த சவாலாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இத்துறை விளங்குவதால் நிச்சயம் இதை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள். நாட்டில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் இதழியல் பாடங்கள் உள்ளன.
பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமாவிற்கு:
முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமாவிற்குச் சமமான ஏதேனும் பட்டப் படிப்பு மற்றும் பி.ஏ.இதழியல் பட்டம் கற்றுத் தரும் இடங்கள்:
CERTIFICATE COURSE:
Manaonmanian Sundaranar University,
Abishekapatty, Tirunelveli-627 017.
Thassim Beevi College, Keelakarai
DIPLOMA:
Madurai Kamaraj University, Palkalai
Nagar, Madurai - 625 021
1 Year Part time diploma P.G.Diploma
1. Bharathiya vidya Bhavan, Mylapore,
Chennai - 600 004.
2. St. Joseph’s College, Trichy
3. Madras Christian College, Tambaram,
Chennai.
4. S.C.S.Kothari Academy for Women, 17
Venkatapathi Street, Kilpauk, Chennai -
10.
DEGREE:
1. Mother Teresa Women’s University,
Kodaikanal
2. Madras University, Chepauk, Chennai
- 600 005.
3. Annamalai University, Annamalai Nagar,
Chidambaram - 608 002
MASTER DEGREE:
Alagappa University D.D.E.Karaikudi - 630
063.
M.A.MASS COMMUNICATION AND
JOURNALISM
1. Madurai Kamaraj University,
D.D.E.Palkalai Nagar, Madurai - 625 021.
ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்:
இவை தவிர ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம், சென்னை – பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி பற்றி ஓராண்டு முதுநிலை டிப்ளமோ வகுப்புகளை நடத்துகிறது. வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகின்றன. இன்டர்நெட் பத்திரிக்கைகள் பற்றிய வகுப்புகளும் உண்டு.
முகவரி :
Asian College of Journalism, 2, Anna Salai,
Kasthuri Centre, Chennai - 600 002.