குற்றவியல் (criminology)

criminology 39014723 cropped
அன்றாடம், ஏதோ ஒரு தேடலை நோக்கி இயந்திரத்தனமாக ஓடி கொண்டிருக்கும் மனித வாழ்வில், பல வகையான சமூக சீர்கேடுகள், கொலை, திருட்டு போன்ற எண்ணில் அடங்காத பல்வேறு குற்ற செயல்கள் அரங்கேறி வருகின்றன! குற்றம் ஏன் நிகழ்கிறது? அதன் பின்னணி என்ன? எத்தகையச் சூழ்நிலைகளில் குற்றம் நடக்கிறது? குற்றவாளிகளுக்குத் தண்டனை தருவதன்மூலம் குற்றங்கள் குறையுமா? இளம் குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள்? அவர்களின் மனநிலை என்ன? என்னும் வகையிலான, குற்றம் சார்ந்த பல அம்சங்களை கிரிமினாலஜி படிப்பு அலசும்.
குற்றவியல் துறை வெறும் குற்றங்களை மட்டும் படிக்கும் துறை அல்ல; குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் அறிவியல் சார்ந்த படிப்பாகும். மாணவர்களுக்கு செயல்முறை திறன் மூலம் குற்றங்களை விசாரித்தல்,கண்காணித்தல், தடயங்களை சேகரித்தல் மற்றும் துறையின் நுணுக்கங்களை புரிந்து கொள்ளுதல் போன்ற திறன்கள் மேம்பட இத்துறை படிப்பு உதவும்.
குற்றங்கள் நடப்பதற்கு, சமூகம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளும் முக்கிய காரணங்கள். எனவே, குற்றவியல் சார்ந்த படிப்பும் சமூகவியல், உளவியல் மற்றும் சட்டம் போன்ற துறைகளுடன் தொடர்புள்ளது. குற்றவாளிகளின் மனப்போக்கை புரிந்து கொள்வதற்கு, குற்றவியல் நிபுணர்கள் இத்துறை சார்ந்த பயிற்சியை பெற்றிருப்பது மிகவும் அவசியம்.
கிரிமினாலஜி, விக்டிமாலஜி ஆகிய இரண்டுமே ஒரே பிரிவின் கீழ்தான் வரும். காவல்துறை மற்றும் துப்பறியும் நிபுணராகப் பணிபுரிய விரும்புவோர், தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வழக்கறிஞர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. இளங்கலையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்துப் படித்தவர்கள் முதுகலைப்படிப்பில் எம்.ஏ. கிரிமினாலஜி படிக்கலாம். சென்னை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் இப்படிப்பு இருக்கிறது.
இளங்கலைப் பிரிவில் பி.ஏ. கிரிமினாலஜி படிப்பு இருக்கிறது. மனிதர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும் என்பதை கிரிமினாலஜி படிப்பு கற்றுத் தரும்.
பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) பயின்றவர்கள், மூன்று வருடப் படிப்பான பி.ஏ., கிரிமினாலஜிக்கு விண்ணப்பிக்கலாம்.
எம்.ஏ., கிரிமினாலஜி படிக்க, இளங்கலையில் எந்தத் துறையில் (பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., பி.சி.ஏ) பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். டாக்டர் பட்டம் வரை பெறலாம்.
இந்தியாவில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம், பின்வரும் படிப்புகளை வழங்குகிறது.
* எம்.ஏ., (கிரிமினாலஜி அன்ட் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ்)
* எம்.எஸ்சி., (சைபர் பாரின்சிக் அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி)
* பிஎச்.டி., (கிரிமினாலஜி அன்ட் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ்)
* பி.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ்
* எம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ்
* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பாரின்சிக் சயின்ஸ்

* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் சைபர் அன்ட் டிஜிட்டல் பார்ன்சிக்ஸ்
மேலும் விவரங்களுக்கு: www.ifscmumbai.com