சட்டப்படிப்பு.

lawschool
சட்டம் என்பது மனிதர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகளைக் கொண்டது. சமதாயக் கட்டுக்கோப்பிற்கும் அமைதியான நிலையான வளர்ச்சிக்கும் விதிகளும், நெறிமுறைகளும் நீதியாக பேணப்பட வேண்டும். அறம், நீதி நெறி என்பதன் மறுவடிவம்தான் சட்டம் எனலாம். அறத்தை தழைக்கச் செய்யவும், அறநெறிதவறும் அநீதிகளை களைந்து நீதியை நிலை நாட்டவும்தான் சட்டம்.
மனிதர்களால் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாமல் வாழ முடியாது. காரணம் மனிதர்கள் சமூகமாக வாழ்கிறவர்கள். உறவு, கொடுக்கல் வாங்கல், சுயதேவைகள் என ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் மற்றவரோடு தொடர்பில் இருப்பதுதான் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை.
தொடர்புகளில் முரண்பாடுகள் முளைப்பது இயற்கை. இந்த முரண்பாடுகள் நீதியாக நியாயமாக களையப்பட வேண்டும். களையப்படாமல், அல்லது நீதி செய்யப்படாமல் தொடரும் முரண்பாடுகளால் சமூகத்தில் சமாதான வாழ்க்கை என்பது கானால் நீராகிப் போகும் அபாயம் இருக்கிறது.
இந்தியாவின் உயர்ந்தபட்ச அமைப்பு சட்டமாகும். “இறையாண்மைமிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” என்று இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டைப் பற்றிக் கூறிக்கொள்கிறது. அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம்.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ முக்கியமான காரணம் நம்முடைய அரசியல் சட்டம்தான். மகத்தான மானுட ஆவணம் என்று அழைக்கப்படும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்ட’த்தின் உருவாக்கத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் போராட்டங்கள், தவிப்புகள், மகத்தான தலைவர்களின் கனவுகள், தியாகங்கள் எல்லாமே இருக்கின்றன.
தனிநபரை அடிப்படையாக வைத்தே நமது சட்டங்கள் தீர்மானிக்கப்பட்டது. ஏனெனில் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான உரிமையும் சுதந்திரமும் விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத அடிப்படை நெறிகள். அவை ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகள். அதை இனம், சாதி, நிறம், மத, பால், தேசியம், வயது, உடல்வலு, பணம் ஆகியவற்றை காரணமாக்கி எந்த தனி மனிதருக்கும் மறுக்க முடியாது கூடாது.


இன்று நம் நாட்டில் சட்டத்தை மதிக்காமல் அதை வளைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணத்திற்கும் அதிகாரத்திற்கும் விலைபோகும் போகும் பொருளாக நீதி மாறிவரும் சூழ்நிலையில், ஏழைகளுக்கும் நீதிக்கும் இடையிலான இடைவெளி பெருகிக்கொண்டே வருகிறது. இனப்பற்று, மதப்பற்று, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காக மனித நேயத்தை உதறித் தள்ளி மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருகிறது.
சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட மனித உரிமைகளை வென்றெடுக்க சட்டம் படித்த ஆளுமைகள் இந்த தலைமுறையிலிருந்து உருவாக வேண்டும். அவர்கள் பொருளாதார ரீதியாகவும் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் சட்டத் துறையில் பெருகி வருகிறது. சிவில் சர்வீஸ் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளையும் எழுதலாம்.
இளநிலை படித்த பின் சட்டத்துறையிலேயே சிறப்பு பிரிவுகளைப் படிப்பது கூடுதல் பலம்.

சட்ட மேற்படிப்பாக இஸ்லாமிய சட்டம் (MA in Islamic Law) ஹார்வர்ட் யுனிவர்சிட்டி, இலண்டன் யுனிவர்சிட்டி, மலேஷியா இஸ்லாமிய யுனிவர்சிட்டி ஆகியவற்றில் படிக்கலாம்.