பட்டக்கல்வியில் சித்த மருத்துவம்

Jambaldinni Rgistration
டாக்டர் படிப்பு என்றாலே எம்.பி.பி.எஸ்தான் பலருக்கு நினைவு வருகிறது. வெள்ளையர்கள் காலத்தில் இம்மருத்துவக் கல்வி பிரபலமானது. அவர்கள் சென்ற பின்னரும் அதுவே நிலைத்துவிட்டது.
ஆனால் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக சீனம்இ இந்தோனேஷியா, தாய்லாந்துஇ வியட்நாம்இ மியான்மர்இ அரபு நாடுகளின் பல நாடுகள்இ எகிப்துஇ இந்தியாஇ நேபாள்இ வங்கதேசம்இ பாகிஸ்தான்இ இலங்கை உட்பட மக்களின் பெருமதிப்புக்குரிய மருத்துவமாக விளங்குபவை ஆங்கில மருத்துவமல்ல. அந்தந்த நாடுகளில் காலம் காலமாக நம்பிக்கையோடு பின்பற்றப்பட்டு வரும் சித்தாஇ யுனானிஇ ஆயுர்வேதம்இ இயற்கை மருத்துவம் மற்றும் சீன மருத்துவ முறைகள்தான்.
ஆங்கில மருத்துவத்தின் இதர பிரிவுகளான லேப்டெக்னீஷியன்இ எக்ஸ்ரேஇ பிசியோதெரபி போலவே சித்த மருத்துவ முறையிலும் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவற்றை இதை படிக்கும் மருத்துவரே தன் நேரடி பார்வையில் செய்வார்கள். அதைப்போலவே தற்போதுள்ள சி.டி.ஸ்கேன் மற்றும் இதர நுண்சோதனை முடிவுகளும் நோய்களை அறிந்து உரிய சிகிச்சை தர பாரம்பரிய இந்திய மருத்துவர்கள் தயாராகிவிட்டனர்.
மேற்கானும் மருத்துவ முறைகள் தற்போது இந்திய மருத்துவம் எனவும்இ மாற்று மருத்துவம் எனவும் வழங்கப்படுகிறது. ஆனால் இவைதான் அடிப்படை மருத்துவமாக தொடக்கம் முதல் விளங்கியது. பின்னர் இவைகளுக்கு மாற்றாக வந்த ஆங்கில மருத்துவம் அடிப்படை போலவும்இ பாரம்பரிய மருத்துவம் மாற்றை போலவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

இன்றைக்கு கிராம அளவில் சித்த மருத்துவர் தேவை அதிகரித்துவிட்டது. ஏனெனில் சமீபத்தில் பிரபலமான இதய மருத்துவர் தலைமையில் நிகழ்த்திய ஆய்வில் இதயநோய்இ கொழுப்பு அடைப்புஇ மூட்டு வலிஇ தோல்நோய்கள்இ கருப்பை நோய்இ மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள தலைசிறந்த மூலிகை மருந்துகள் நன்கு குணம் தெரிவதாக முடிவினை அறிவித்தார். இன்னும் நன்கு படித்து முறையான மருத்துவம் செய்யும் சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்களை விடவும் நன்கு பொருளீட்டி வருவதைக் காணலாம்.
ஆகவே +2 முடித்த மாணவர்கள் நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற குறளைப் போன்று தரமான சித்த மருத்துவப் பட்டக் கல்வியைப் பெற்று ஊர்தோறும் சொந்தமாக மருத்துவமனைகளை அமைக்கலாம். அயல்நாடுகளுக்கு அதிகளவு விற்பனையாகும் மருந்துகளில் இந்திய மருந்துகளான சித்தாஇ ஆயுர்வேதஇ யுனானி மருந்துகள் நாட்டிற்கு நிறைய அன்னிய செலாவணியை ஈட்டித்தருகின்றன. +2வில் இயற்பியல்இ வேதியியல்இ உயிரியல் படித்தவர்கள் சேரத்தகுதியுள்ளவர்கள் ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பான இதனைப் படிப்பவர்களுக்கு அரசுப்பணிஇ தனியார் மருத்துவமனைஇ சொந்த தொழில் செய்யும் வாய்ப்புஇ தனியார் மருந்து தயாரிப்பகங்களில் பணி என ஏராளமான வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சென்னை அரும்பாக்கத்திலும்இ நெல்லை பாளையாங்கோட்டையிலும் அரசுக் கல்லூரிகள் உள்ளன. இதைப் போன்றே தனியார் கல்லூரிகளான குமரி மாவட்டம் மூஞ்சிறையில் உள்ள திருவிதாங்கூர் சித்த வைத்திய கல்லூரிஇ ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி மேற்கு தாம்பரம்இ சென்னைஇ வேலுமயில் சித்த மருத்துவக்கல்லூரி திருப்பெரும்புதூர்இ ஆர்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி கோவை போன்றவற்றிலும் பட்டக்கல்வி தருகின்றனர். மேலும் மருத்துவத்தில் முதுநிலையும்இ ஆய்வுக் கல்வியிலும் பட்டமளிக்கின்றனர். கூடுமானவரை தங்கிப் படிக்கும வகையில் தான் பல கல்லூரிகளிலும் விடுதியுள்ளது. ஏனெனில் நாலரை ஆண்டுகள் செய்முறைஇ வகுப்பறை பயிற்சிகளை மூலிகைஇ மருந்துஇ
உடற்கூறுஇ நோய்களின் தன்மை இவைகளைப் பற்றி கற்பிக்கின்றனர். பின்னர் ஓராண்டு
பயிற்சி மருத்துவராகவும் செயல்பட்ட பின்னரே இப்பட்டக்கல்வி முழுமை பெறும்.
அரசு கல்லூரிகளில் குறைந்தளவு கட்டணமும்இ தனியார் கல்லூரிகளில் அரசு
நிர்ணயித்துள்ள கட்டணமும் பெறப்படுகிறது. +2 முடித்தவுடன் தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகளை செலவிட்டுப் படித்தால் சிறந்த சித்த மருத்துவராக முடியும். கூடுமானவரை தமிழில் நன்கு மதிப்பெண் பெறுபவர்களுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் பாடல்வழியில் உள்ள மருத்துவக் குறிப்பினை சிறப்பாக அறிய இயலும்.

எனவே சித்த மருத்துவப் பட்டக்கல்விக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும்.
சித்த மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவம் கற்பிப்பதைப் போலவே
ஆயுர்வேதத்தையும்இ யுனானி மருத்துவமும் கற்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு தரும் பட்டங்கள் அரசு சான்றிதழுடன் மருத்துவ பல்கலைக் கழகத்தின்
அங்கீகாரமும் பெற்றுள்ளது.
இதைப்போலவே ஹோமியோபதி மருத்துவமும் உலகளவில் சிறப்பிடம் பெற்ற
மருத்துவ துறையாகும். சித்த மருத்துவக் கல்லூரிகள் இவைகள் கற்பிப்பதோடு மேலும்
சில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் இந்த மருத்துவம் கற்பிக்கப்படுகிறது. அவை
- டாக்டர் ஹானிமன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிஇ இராசிபுரம்.
- சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிஇ சித்தர் கோயில் சாலைஇ சேலம்.
- அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிஇ திருமங்கலம்இ மதுரை.
- நேத்ரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிஇ மேட்டுப்பாளையம்இ கோவை.
- சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிஇ குலசேகரம்இ குமரி மாவட்டம்.
- வெங்கடேஸ்வரா ஹோமியோபதி கல்லூரிஇ போரூர்இ சென்னை.
முதலான இடங்களில் ஹோமியோபதி மருத்துவக் கல்வி கற்பிக்கப்படுகிறது.
இது பெண்களுக்கும் ஏற்ற பட்டக் கல்வி.