விவசாய படிப்பு Agriculture Degrees

agrir
இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயம் பொலிவுடன் விளங்கியாக வேண்டும். விவசாயமே உலகின் ஆதித் தொழில்.
நமது விவசாய முறை பாரம்பரியம் உடையது. நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் விவசாயம் செய்து வந்தவர்கள். விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாட்டில் விவசாயம் பற்றிய புரிதலும் அது சார்ந்த அறிவியல் ரீதியான அணுகுமுறைகளும் இல்லாமல் இருந்திருக்க முடியாது.
LPG என்ற தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கால், உலகமயமாக்கலுக்குப் பின் மாற்றமடைந்த அரசின் கொள்கைகளால் முதன்மை துறையான விவசாயம் பின்னுக்கு தள்ளப்பட்டது. இரண்டாம் துறையான உற்பத்தி துறை முக்கியத்துவம் பெற்றது, பின்னர் மூன்றாம் துறையான சேவைத்துறை முக்கியத்துவம் பெற்று விவசாயம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
விவசாயத்தின் வீழ்ச்சிக்கு காரணமான பசுமைப் புரட்சி என்ற மயக்க வார்த்தையும் உலகமயமாக்கலும் சேர்ந்து இந்த நாட்டிற்கு தந்த பெரும் கேடு பாரம்பர்ய விவசாயத்தை அழித்தது. இன்றைய சூழலில் விவசாயம் என்றாலே இராசயன உரம், வீரிய ஒட்டுவிதை, பூச்சி கொள்ளி, களைக்கொள்ளி, பிடி காய்கறிகள், பழங்கள்தான் நம் நினைவுக்கு வருகிறது.
பசுமைப் புரட்சிக்கும் ஓர் உதாரணம் கூறலாம். “ஆரோக்கியமான விளையாட்டு வீரனுக்கு ஊக்கமருந்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவான் என்று நம்பிய பயிற்சியாளர், ஊக்கமருந்தை கொடுக்க உண்மையரியாத வீரனும் உட்கொண்டான். ஆரம்பத்தில் நன்றாகவே விளையாடினான். ஆனால் காலப்போக்கில் அவன் உடல்நலம் குன்றி பாதிக்கபட்டானாம்”. அதுபோல் தான் இந்திய விவசாயமும், பசுமை புரட்சியில் வேளாண் விஞ்ஞானி என்ற பயிற்சியாளர்கள் ஊக்க மருந்து என்கிற பெயரில் இரசாயன உரம், வீரிய ஒட்டுரக விதை, பூச்சிகொள்ளி, களைக்கொள்ளிகளை கொடுத்தனர். உண்மையறியாத விவசாயி தன் வளமான நிலத்தில் அவற்றை இட்டான். ஆரம்பத்தில் விளைச்சல் நன்றாகவே இருந்தது. நாளடைவில் அது மண்னை மலடாக்கிவிட்டது. இதை உணராத விவசாயி இன்னும் அதையே நம்புகிறான்.
பன்னாட்டுக் கம்பெனிகள் வாழ்வதற்காக பாரம்பரிய வேளாண்முறையை அழித்துவிட்டு நாளைய நமது உணவுத் தேவைக்கு எந்த நாட்டிடம் கையேந்தி நிற்கப் போகிறோம்? விவசாயம் செழிப்புற்றிருந்த காலத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுகளில் பெரும்பகுதி உணவுத்தேவைக்காக இருந்தது. அதனால் விவசாயி வாழ்ந்தான், விவசாயமும் வாழ்ந்தது. இன்று வருமானத்தில் ஒருபகுதிதான் உணவுத் தேவைக்காக செலவிடப்படுகிறது. அதன் காரணமாக விவசாயி வீழ்ந்தான். விவசாயமும் வீழ்ந்தது. யாரிடமும் கையேந்தாமல் தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்த விவசாயிகளை பன்னாட்டு கம்பெனிகளின் விதைகளை உரங்களை வாங்க வைத்து கையேந்தும் பிச்சைக் காரணக்கியதுதான் பசுமைப் புரட்சி.

மாறிவந்த சமூக மாற்றமும் விவசாயத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். நாளடைவில் கல்வியறிவு வளர்ந்து வந்தது. விவசாயம் லபகரமான தொழிலாக இல்லை. பணம் சம்பாதிப்பது. பெரிய வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது என சொகுசான வாழ்க்கை பற்றிய கனவோடு வளர்ந்து பன்னாட்டுக் கம்பெனிகளில் பணி செய்கின்றனர். அவர்கள் பணிபுரியும் I.T, BPO, MNC என்ற பன்னாட்டு சேவை நிறுவனங்கள் தமது கடையை மூடிவிட்டு எப்போது வேண்டுமானாலும் வேறு இடத்திற்கு செல்லலாம். அப்போது நமது பிள்ளைகள் நிலைமை என்ன?
இந்திய விவசாயம் வீழ்ச்சியடைந்ததிற்கு இன்னமொரு காரணம் அறியாமை. எதையும் ஆராய்ந்து அறியும் அறிவு வேண்டும். அரசியல் பொருளாதாரத்தில் இந்தியாவை தாண்டிய உலக அறிவு வேண்டும். அரசியல், பொருளாதாரம், அறிவியல் தெரிந்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்து விவசாயத்தின் மீது புதிய அணுகுமுறையை கொண்டுவர வேண்டும்.
நாட்டின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதற்காக அண்டை நாட்டை சார்ந்திருக்கும் எந்தவொரு நாடும் முன்னேரவே முடியாது. இந்தியாவின் பல பொருளாதார பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலையின்மை, உணவு பற்றாக்குறை, வறுமை போன்றவற்றிக்கு விவசாயத்தை வளப்படுத்தி முன்னுக்கு வருவதே சிறந்த தீர்வு.
விவசாயத்தை வளப்படுத்த சிறந்த தீர்வு பாரம்பரிய வேளாண்முறை - இயற்கை விவசாயம். அதன் மூலம் 1. மக்கள் உண்ணும் உணவு அரோக்கிமானதாக இருக்கும். 2. சுற்றுச்சூழல் மாசபடாமல் இருக்கும். 3. விவசாயி வேளாண் உற்பத்தி முறையில் தற்சார்பு அடைவான்.
இந்தியா விவசாய நாடு. இளைஞர்கள் விவசாயம் பற்றிய அடிப்படைகளை அறிந்திருக்கவேண்டும். ஒருவர் எந்த துறையில் வல்லுனராக இருந்தாலும் விவசாயம்தான் அவருக்கு உணவளிக்கிறது. விவசாயம் வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையல்ல. அது இந்தியர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனையும் கூட, எனவே இளைஞர்கள் விவசாயப் பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
என் மகன் இன்ஜினியர் அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்று மட்டும் எண்ணாமல் என் மகன் விவசாயி ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பும் நாள் வரவேண்டும்.
ஆரோக்கியமான மனித சமுதாயம் உருவாவதற்கு பாரம்பர்ய விவசாயத்தின் பக்கம் திரும்புவதுதான் ஒரே தீர்வு. அதை நோக்கி பயணிக்க படிக்க வேண்டிய துறை அக்ரிகல்ச்சர் இஞ்சினியரிங். இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது. பணி வாய்ப்புகளும் தொழில் வாய்ப்புகளும் பெருகி வருகிறது.

பாடப் பிரிவும் கல்வி நிறுவனங்களும் :
B.Sc. (Agriculture)
B.Sc. (Horticulture)
B.Sc. (Forestry)
B.Sc. (Home Science)
B.Tech. (Agricultural Engineering)
B.Tech. (Biotechnology)
B.Tech. (Horticulture)
B.Tech. (Food Process Engineering)
B.Tech. (Energy and Environmental Engineering)
B.Tech. (Bioinformatics)
B.Sc. (Agribusiness Management)
B.Tech. (Agricultural InformationTechnology)
B.Sc. (Sericulture)
Agricultural College and Research Institute, Coimbatore
Horticultural College and Research Institute, Coimbatore
Agricultural Engineering College and Research Institute, Coimbatore
School of Post Graduate Studies, Coimbatore
Agricultural College and Research Institute, Madurai
Home Science College and Research Institute, Madurai
Agricultural Engineering College and Research Institute, Kumulur, Trichy
Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Trichy
Horticultural College and Research Institue for Women, Trichy
Agricultural College and Research Institute, Killikulam, Tirunelveli
Horticultural College and Research Institute, Periyakulam, Theni
Forest College and Research Institute, Mettupalayam
Agricultural College and Research Institute, Eachangkottai, Thanjavur
Agricultural College and Research Institute, Kudumiyanmalai, Pudukkottai
Agricultural College and Research Institute, Vazhavachanur, Thiruvannamalai
மேலும் விபரங்களுக்கு : http://www.tnau.ac.in/ & http://www.icar.org.in/ & http://www.iicpt.edu.in/
.....
வேளாண்மை தொடர்பான ஆய்வுகளுக்கான மத்திய அரசு நிறுவனமாக இந்தியப் பயிர் பதனத் தொழில் நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.சி.பி.டி.) உள்ளது. இதில் உணவு பதனிடும் பொறியியல் எனும் பாடத்திட்டத்தில் பி.டெக், எம்.டெக், படிப்புகள் உள்ளன. உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எனும் பாடத்தில் எம்.டெக் மற்றும் முனைவர் பட்டம் (பிஎச்.டி) ஆகியவை உள்ளன.
இங்கே அளிக்கப்படும் நான்காண்டு கால பி.டெக். படிப்புக்கு 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் சேர்வதற்குப் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் முதன்மைப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியலில் 55 சதவீதமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு உண்டு. அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். மேலும் தொடர்புக்கு: www.iicpt.edu.in