மேற்படிப்பு வாய்ப்புகள்

NITT2-small

NIT
அகில இந்திய அளவில் 12 வது இடத்தில் இருக்கும் என் ஐ டி திருச்சியிலும் பயிலலாம். இதில் சேர்ந்து பயில JEE (Main) எழுதி வெற்றி பெற வேண்டும். JEE (Main) தேர்வு என்பது அப்ஜக்டீவ் (Objective) வினாத்தாள்களைக் கொண்டது. இதில் இயற்பியல், வேதியியல், மற்றும் உயிரியல் (Physics, Chemistry, Biology) பாடத்திலிருந்து கேள்விகள் வரும். மேலும் விபரங்களுக்கு : Http:// jeemain.nic.in
ஐ ஐ டி, என் ஐ டி யில் சேர இப்போது 11 வது 12 வது மாணவர்கள் இப்போதிருந்தே தங்களுடைய திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

UPSC Exam Syllabusஇந்திய ஆட்சிப் பணி
அரசு வேலைகளில் உயர் பதவியை அடைய சிவில் சர்வீஸ் என்று அழைக்கப்படும் இந்திய குடியுறிமை பணித் தேர்வுகளை எழுத வேண்டும். இந்திய அரசு நிர்வாகத்தை திறம் பட நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமை பணியாளார்கள்.
குடியுரிமை தேர்வுகளில் மிகவும் பிரபலமானது ஐ ஏ எஸ் தேர்வாகும். ஐ ஏ எஸ் மட்டுமல்லாமல் சுமார் 23 பணிகளுக்காக மத்திய தேர்வு ஆணைக் குழு (UPSC) நடத்தும் Group 1 தேர்வுகளை நம்முடைய மாணவ மாணவிகள் எழுதுவதற்கு முன் வர வேண்டும்.
IAS, IFS, IPS, IRS உட்பட 23 பணிகளுக்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க கீழ்கண்ட மூன்ரு அடுக்குகள் கொண்ட தேர்வுகளை UPSC ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.
1 Preliminary Examination - Objective Type (Qualifier)
(முதன்மைத் தேர்வு)
2 Main Examination - Written Test Interview (பிரதான தேர்வு)
3 Personality Test (ஆளுமைத் தேர்வு)
இந்த தேர்வுகளை 21 வயது முடிந்து பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அனைவரும் எழுதலாம். பொதுப் பிரிவுக்கு 32, OBC க்கு 35, SC/ST ஆகியோருக்கு 37 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதிகபட்சமாக பொதுப் பிரிவினர் ஆறு முறையும், OBC 9 முறையும், SC/ST ஆகியோர் எத்த்னை முறை வேண்டுமானாலும் தேர்வுகள் எழுதி தேர்வு பெற முயற்சி செய்யலாம்.
இந்த தேர்வு எழுதுவதற்கான கட்டணம் ரூ. 100 மட்டுமே. பெண்களுக்கும் SC/ST சார்ந்தவர்களுக்கும் இக்கட்டணம் தேவையில்லை.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களிலும் கேரளாவில் திருவனந்தபுரத்திலும் UPSC முதன்மைத் தேர்வை எழுதலாம். பிரதான தேர்வை சென்னை, திருவனந்தபுரம் உட்பட உட்பட மாநில தலைநகரங்களில் எழுதலாம். முதன்மைத் தேர்வுகள் பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்திலும், பிரதான தேர்வுகள் டிசம்பர் மாதத்திலும் நடைபெறும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தகவல் அறியவும் Http:// upsconline.nic.in என்ற முகவரியை நாடவும்.
இதர அரசு வேலை வாய்ப்புகள்
1. UPSC – யின் பல்வேறு குரூப்கள் Http:// upsconline.nic.in
2. SSC (Staff Selaection Commission)
ssc.nic.in
3. Railway Recruitment Bord - http://www.indianrailways.gov.in/railwayboard/
4. Tamil Nadu Public Service Commision – (TNPSC) http://www.tnpsc.gov.in/
5. Teachers Recruitment Board
- http://trb.tn.nic.in/
6. Post Office Recruitment - http://www.indiapost.gov.in/recruitment.aspx
SCHOLARSHIPS (கல்வி உதவித் தொகை)
1. அரசாங்கத்தின் அனைத்து கல்வி உதவித் தொகைகள் பற்றிய அறிய - https://scholarships.gov.in
2. சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் திட்டங்கள் பற்றி அறிய - http://www.momascholarship.gov.in/