துருக்கியில் அகதிகளுக்கான கல்வித் திட்டம்.

turkey
அகதிகளின் கல்வித் தேவை குறித்து திட்டமிடுவதற்கான ஒரு வாரகால சர்வதேச நிகழ்ச்சி ஒன்று துருக்கியில் நடைபெற்றது. துருக்கி, ஜெர்மனி, சிரியாவின் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா ஊழியர்கள் அதில் கலந்து கொண்டனர்.
தனது நாட்டைத் துறந்து அயல் நாட்டிற்கு வரும் அகதிகளின் முக்கியப் பிரச்சனை அவர்கள் எதிர்கொள்ளும் புதிய மொழி. அவர்கள் தஞ்சம் புகும் நாட்டின் மொழியை அறிந்து கொள்ளும் வழியாக அவர்களுக்கு பாடல் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்கிறார் சிரியா போரிலிருந்து தப்பி வந்து துருக்கி எல்லையில் உள்ள சிரியா கலாசார மையத்தில் உள்ள ராட்வன் முஸ்தஃபா.
கல்வியும் மொழியும் ஒருங்கிணைந்து எதிர் கொள்வது சிரிய மக்களுக்கு சவாலாக இருக்கும். இருந்தாலும் வெகு சீக்கிரம் சிறுவர்கள் சமூகத்தோடு பொருந்திப் போவதற்கும், வாலிபர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொண்டு வேலை பெறுவற்கும் கல்வி ஒன்றுதான் வழி என்கிறார் முஸ்தஃபா.
பெர்லினில் அகதிகளுக்கு பாடம் நடத்தும் உல்ரிச் “மொழிதான் மிகப் பெரிய சவலாக” இருக்கிறது என்கிறார். சிரியா, ஆஃப்கானிஸ்தான், ஈராக், துருக்மெனிஸ்தான், போஸ்னியா போன்ற உலகின் பல பிரதேசங்களில் இருந்தும் மாணவர்கள் வருகிறார்கள். சில மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்கிறார்கள் 6 மாதங்களுக்கும் ஜெர்மன் மொழியை கற்றுக் கொள்கிறார்கள். இருப்பினும் சிலர் போதுமான மதிப்பெண்கள் பெற சிரமப்படுகிறார்கள் என்கிறார் உல்ரிச்.
2015 இல் ஜெர்மனியில் புகலிடம் தேடி வரும் அகதிகளுக்கு “welcome classes” - வரவேற்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. 8500 ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட்டார்கள். குழந்தைகள் உட்பட அகதிகள் அனைவருக்கும் அவர்கள் ஜெர்மன் சமூகத்தோடு ஊடாடுவதற்காக ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டது என்கிறார் உல்ரிச்.
ஒருங்கிணைக்கும் கருவி கலை
கல்வியாளர் பெர்ன்ஹார்ட் கூறும்போது : - துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் சிரிய அகதிகள் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தோடு ஒருங்கிணைந்து வாழ்வதற்கு சில மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளன.
வேறு ஒரு நாட்டிற்கு வரும் அகதிகள் புதிய நாடு புதிய கலாசாரம் என ஒரு கலாசார அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். அதிலிருந்து அவர்கள் விடுபட கலையும் இசையும் உதவுகிறது.
பெர்ன்ஹார்ட் மேலும் கூறுகிறார் பள்ளி நேரங்களில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து கலந்துரையாடும் போது அவர்கள் ஏதாவது ஒரு புதியதை செய்கிறார்கள். அதிகப்படியான தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
ராட்வன் முஸ்தஃபா கூறுகிறார் :- அவரது மையத்தில் குழந்தை அகதிகள் துருக்கி, ஆங்கில மொழிப் பாடங்கள் தவிர இசை மற்றும் ஓவியம் கற்றுக் கொள்கின்றனர்.
அகதிகளின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 16 வயது முதல் 46 வயது வரை உள்ளவர்களுக்கு தையல் போன்ற தொழில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
பயிற்சிக்குப் பின்னர் டெக்ஸ்டைல் – தையல் - உணவு வழங்கல் போன்ற பணிகளில் மேலும் சிறிய நிறுவனங்களில் அவர்கள் பணிபுரிகின்றனர்.
துருக்கியில் உள்ள இஸ்மிர் பெருநகரின் சமூக திட்ட மேலாளர் புர்ச் ஒனென் 90,000 அகதிகள் துருக்கியில் வாழ்கின்றனர் என்கிறார். இஸ்மிர் நகரின் மலைப் பாங்கான பகுதி கடிஃபிகாலா (Kadifekale), அங்கு அகதிகள் பரவலாக வாழ்கிறார்கள்.
அங்கு ஒரு வரலாற்றுக் கட்டிடம் புதுப்பிக்கப்பட இருக்கிறது. அதில் வரலாற்றுப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். மேலும் சிரிய அகதிகளை உள்ளடக்கிய மாணவர்களுக்கு வழக்கமான கல்விச் செயல்பாடுகளுக்கு ஊடாக ஓவியம், இசை, நாடகம் போன்ற செயல்பாடுகளையும் வழங்கி வருகிறோம்.
நாடக தொழில் முறை கலைஞர்களும் துருக்கி பல்கலைக் கழக மாணவர்களும் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுகின்றனர். இதன் பலனாக 7 முதல் 10 வயதுக்குட்பட்ட 46 சிறுவர்கள்
‘My Puppet, My Story’ என்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தினர். அதில் இஸ்மீர் மக்களும் சிரிய அகதிக் குடும்பங்களும் ஒன்றாக கலந்து கொண்டனர் என்கிறார் ஒனென்.
துருக்கியில் ஆறில் ஒருவர் அகதியாக இருக்கிறார். கால் நூற்றாண்டு காலத்தில் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. சிரியா போரின் காரணமாக நான்கு மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உலகில் அதிகமான எண்ணிக்கையாக 2.7 மில்லியன் அகதிகள் துருக்கியில் வாழ்கிறார்கள். இதுவரை 10 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது துருக்கி.
தலைமுறைகளை இழந்தவர்கள் மில்லியன் அகதிக் குழந்தைகள் வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2016 நடப்பாண்டில் ஒன்றரை லட்சம் அகதிக் குழந்தைகள் கூடுதலாக தேசிய கல்வித் திட்டத்தில் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கபப்டுகிறது. கடந்த வருடம் மூன்று லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் பதிவு செய்தனர். அதில் 75 ஆயிரம் பேர் பொதுப் பள்ளிகளிலும் இரண்டரை லட்சம் பேர் தற்காலிக கல்வி மையங்களிலும் சேர்க்கப்பட்டனர். (Disaster and Emergency Authority of Turkey)
இது போக சிரிய மக்களை துருக்கி சமூகத்தோடு ஒருங்கிணைப்பதற்காக தாமாக முன் வந்து 46 சதவீதம் அகதிக் குழந்தைகளை அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.