ஆசிரியர் பணி

வாழும் காலம் மட்டுமல்ல ஒரு மனிதன் மரணித்த பின்னும் பிற மனிதர்களின் மனங்களில் ஒரு சிலரால்தான் வாழவும் ஆளவும் முடியும் அவர்களில் “ஆசிரியர்கள்” மிக மிக முக்கியமானவர்கள். மனிதர்களின் குறிப்பாக மாணவர்களின் வாழ்க்கையையும் செம்மைப்படுத்த ஒரு ஆசிரியர் தேவை. ஆசிரியர்கள் கைகொடுத்து தூக்கிவிட்டு வளர்ந்த மாணவர்கள் காலமெல்லாம் ஆசிரியர்களை பிரியத்துடன் நினைத்து வாழ்வார்கள். அதில் கிடைக்கும் திருப்தி வேறெந்த வேலையிலும் கிடைப்பதில்லை.
மாணவர்கள் லட்சியம் கொண்டவர்களாக உருவாக அவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்கு புரியும் வரை பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியை கடமையாக கருதாமல் பாக்கியமாக கருத வேண்டும் எ‌ன்றுஅப்துல் கலாம் கூறினார்.
நியூ யார்க் நகர ஆசிரியர் லீமரீஸ் சொன்னார்: “ஆசிரியர்கள் தனிப்பிறவிகள் என்றே நான் உணருகிறேன். மாபெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் கொஞ்சம் வினோதமானவர்களும்கூட. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்றால், அது பத்து பிள்ளைகளாகட்டும், ஒரே ஒரு பிள்ளையாகட்டும், கடமையைச் செய்தோம் என்ற நிம்மதி கிடைக்கிறது. இதைவிட சிறந்த உணர்வு வேறில்லை. வேலையை சந்தோஷத்துடன் செய்ய முடிகிறது.”
சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் களை யவும் மக்களுக்கு நேரடியாக பணியாற் றவும் ஆசிரியர் பணியில் தான் முடியும். ஆசிரியர் பணி ஊதியத்திற்கானது மட்டுமல்ல! மனிதர் களுக்கு தொண்டு செய்யும் மகத்தான செயல். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல் பற்றிதான் கவலை கொள்வார்கள், ஆனால் ஆசிரியர்கள் அடுத்த தலைமுறைக்காக அறம் செய்பவர்கள். ஆசிரியர்களின் பணி அறிவார்ந்த எதிர்கால சமூகத்தை உருவாக்குவதே.
“சமுதாயம் முழுவதிலும் வியாபித்திருக்கும் கலகத்தனம், அடங்காத்தனம், கீழ்ப்படியாமை ஆகிய மனோபாவங்களால் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர். ”மாணவர்களின் நீண்ட
சிக்கலான வாழ்க்கைப் பயணத்தில் ஆசிரியர்
களாகிய நாங்கள் அவர்களுடைய பார்ட்னர்கள் என்பதை புரிந்து கொள்ளும் போதும்; அவர்களையும் ஒரு பொருட்டாக நினைத்து மதிப்பு, மரியாதையுடன் நாங்கள் அவர்களை நடத்த ஆரம்பிக்கும்போதும்; சிறந்த ஆசிரியர்களாக ஆகும் பாதையில் நாங்கள் நடக்கிறோம் என்று சொல்லலாம். இது மிகவும் எளிதானதாய் தோன்றலாம்; ஆனால் மிகக் கஷ்டமானது.” அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின் றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான் என்கிறார் இத் தாலியில் ஆசிரியராக இருக்கும் ஜூல்யானோ.
கற்றுக் கொடுப்பது என்பது இரு வகைச் செயல்பாடு. ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் போது கற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். இள மனதிலும் உள்ளத்திலும் நல்ல ஒழுக்கப் பண்புகளையும், மனிதத் தன்மையையும் தர
அவனுடைய அல்லது அவளுடைய ஆசிரியரால் தான் முடியும். ஆசிரியர்களின் கடமை
அவர்களுக்கு எப்படி கணக்குப் போடுவது அல்லது வரலாறு மற்றும் பாரம்பரியத்தை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல. ஆசிரியர் களின் உண்மையான கடமை மாணவர்கள் உள்ளத்தில் மனிதத்தை புரியவைத்து அதை உண்மையாக அவர்களைச் செயல்படுத்த வைப்பதாகும்.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும்.
வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப் புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது ஆசிரியர்களின் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் தான் அது ஆசிரியர் பணியின் மூலம் வழங்க முடியும்.
ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே
ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின்
சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில்
திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்
தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப் படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன்
பொறுப்புகள் அதிகம்.
+2 படித்து இளங்கலையில் விருப்பமான ஒரு துறையை படித்துத் தேறியவர்கள் அதன் பிறகு பி.எட். படித்து ஆசிரியராக பணி புரியலாம். ஆசிரியர் பணி பெண்களுக்கு ஏற்ற சிறப்பான பணி.