Strict Standards: Declaration of JParameter::loadSetupFile() should be compatible with JRegistry::loadSetupFile() in /home/samooga/public_html/libraries/joomla/html/parameter.php on line 512

உயர்கல்வி பயிலும் மாணவர்களும் - சமூக மேம்பாடும்

சமூக மேம்பாடு என்பது அறிவுத் திறனும் ஆய்வுத் திறனும் தலைமைப் பண்புமுள்ள மனிதர்களைக் கொண்ட சமூகத்திற்கே வாய்க்கும். தலைமைப் பண்புள்ள ஆய்வாளர்கள் உருவாவதற்கு பாதை அமைத்து தருவது ஒரு சமூகத்தின் தலையாய கடமை.
விதிவிலக்கில்லாமல் இன்று உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு அவர்களின் வாழ்வியல், பொருளாதா, அரசியல் சிக்கல்களுக்கு தீர்வைத் தரும் வழிகாட்டும் திறன் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான அறிவு ஜீவிகள் தேவைப்படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு ஒட்டுமொத்த மனித சமூகமும் வாழ்வியல் சிக்கல்களுக்கு வழிகாட்டும் மனிதர்களை தேடிக் கொண்டிருக்கிறது. மனித சமூகத்தின் வாழ்வை நெறிப்படுத்தி சீராக்கும் அறிவு ஜீவிகளை செய்ய முடியாது. உருவாக்கத்தான் முடியும். இரண்டு விதமாக அவர்களை உருவாக்கலாம். அந்த பொறுப்பு முஸ்லிம் சமூகத்திற்கு கடமையாக இருக்கிறது. முஸ்லிம் சமூகம் மொத்தமும் சேர்ந்து இந்தப் பொறுப்பை செய்ய இயலாமல் போனாலும் முஸ்லிம்கள் நிறைந்த வாழும் முஹல்லாக்கள் ஜமாத்கள், இயக்கங்கள் இதை முன்னின்று செய்யும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.
1. நிகழ்கால திட்டமிடல்
பல்கலைக் கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் கற்கின்ற தமிழக முஸ்லிம் மாணவர்களை ஒருங்கிணைப்பது.
அவர்களை ஊக்குவித்து சமூகத்தை மேம்படுத்துவது குறித்து சமூகத்தலைமைகள், முஹல்லாக்கள் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. மனித சமூகத்திற்கு உரிய பங்களிப்பைச் செய்வதற்கான மிகச் சிறந்த தலைமைத்துவ பண்புள்ளவர்களாக தற்போது படித்துவரும் உயர் கல்வி மாணவர்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம்.
இஸ்லாமிய சமூக வாழ்விலும், பொது வாழ்விலும் மக்களிடம் ஏற்பட்டுள்ள வாழ்வியல், பொருளாதார, அரசியல் சிக்கல்களுக்கான தீர்வை ஒட்டு மொத்த மனித சமூகமும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. அந்த சிக்கல்களை சீராக்குகிற பொறுப்பும் கடமையும் உயர் கல்வி பயிலும் மாணவ சமூகத்திற்கு இருக்கிறது.
தொடக்கக் கல்வி தொடங்கி உயர் கல்வி, ஆய்வுக் கல்வி வரை பயின்று பல்கலைக் கழக சான்று பெற்று சமூக வெளிக்கு வரும் மாணவர்கள் கல்வி வாழ்வின் கடந்த காலம் பற்றியும் எதிர்காலம் பற்றியும் மிகத் தெளிவான அனுபவம், அறிவு, அனுமானங்கள், தகவல்களை தம்மகத்தே கொண்டு வருவார்கள்.
பல்கலைக் கழகங்களில் அவர்கள் பெறுகின்ற தலைமைத்துவப் பயிற்சிகள், பரந்துபட்ட அறிவு ஆய்வுத் திறன்கள், அனுபவங்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் உறவுகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றை மையமாக வைத்து தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிம் பள்ளிக் கூடங்களின் எதிர்காலம், மேம்பாடு, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், மாணவ சமூகத்தின் உளவியல், மற்றும் திறன் வளர்ச்சி, கல்வி, உயர்கல்வி, தொழில்கல்வி வழிகாட்டல்கள் என பல்வேறு துறைகளிலும் அவர்களது பங்களிப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.

2. எதிர்கால திட்டமிடல்
முஸ்லிம் பள்ளிக்கூடங்கள், அவற்றை மேம்படுத்த எண்ணும் ஆர்வலர்கள் தத்தமது பகுதியில் இருந்து உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுள்ள பட்டதாரி மாணவர்களை அணுகி அவர்களிடமிருந்தும் பல்கலைக் கழக சார்பில் இருந்தும் பெறமுடியுமான சேவைகள் பங்களிப்புக்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேகொள்ள முடியும். அவர்களது கல்வி வாழ்வில் சமூகம் பங்களிப்பதன் மூலம் மாணவர்களை சமூகத்தின் பங்குதாரர்களாக மாற்ற இயலும்.

Higher educationk

பரஸ்பர ஒத்துழைப்பு எனும் போது அது ஒரு வழிப் பயன்பாடாக இருக்கக் கூடாது. குறிப்பிட்ட பட்டதாரி மாணவர் சமூகத்தின் நலன்கள், தேவைகள் அறிந்து அவர்களது பல்கலைக் கழக ஆய்வுச் செயல்பாடுகளுக்கு சமூகமும் இரட்டிப்பான பங்களிப்பினை செய்தல் வேண்டும்.
முஸ்லிம் சமூகம் பல்கலைக் கழக மற்றும் உயர்கல்வி மாணவர் சமூகத்தை பயன்மிக்கதாக உருவாக்க முனையும் போது இரு சாராருக்கும் பயனுள்ளதாக அமையும்.
செல்வங்களில் அளப்பரிய செல்வம் கல்விச் செல்வமாகும், பல்கலைக் கழக மாணவர்கள் தமது துறை செயல்பாடுகளுக்கு மேலாக சுயமாக மேற்கொள்ள முன்வரும் கல்விப்பணிகள் சமூக சேவைகளில் மிகப் பிரதானமானவை என்பதனை உணர்ந்து அவர்களுக்குத் தேவையான சகல வளங்களையும் உதவிகளையும் சமூகத் தலைமைகள் தாராளாமாக பெற்றுக் கொடுப்பது கட்டாயமாகும். இது போன்ற திறமையாளர்களால் வளரும் தலைமுறை திறன் மிகுந்தவர்களாக பயிற்றுவிக்கப்படுவார்கள்.
அதேபோன்று ஏற்கனவே பட்டம் பெற்று சமூக மற்றும் பொதுத் தளத்தில் உயர்பதவிகளிலும், அதிகார மையங்களிலும், கல்விசார் பதவிகளிலும், அந்தஸ்துகளிலும் உள்ள புத்திஜீவிகள், மற்றும் நிபுணர்கள் உயர்கல்வி கற்கும் பட்டதாரி மாணவர்களுக்கு தமது ஆதரவையும், அரவணைப்பையும் வழங்குவதில் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும்.

ஆய்வு மாணவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தலைப்பில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த நுட்பங்களும் திறன்களும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன, தாம் வாழும் நகரங்கள்,கிராமங்கள், கற்ற கல்விக் கூடங்கள் குறித்த மிகச் சிறந்த ஆய்வுகளை, சாதுரியமான திட்டமிடல்களை, செயல்பாட்டு வழிமுறைகளை தயார் செய்து அமுலாக்குவதில் உயர்கல்வி பயின்ற மாணவச் சமூகத்தின் பங்களிப்புக்களை எவ்வளவு அவ்வளவு அளவில் சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உயர் கல்வி பயிலும் மாணவர்களும் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பல்கலைக் கழக சூழலில் மிகச் சிறந்த தலைமைத் துவப் பண்புகளோடு நடந்து கொள்வதும், அமைதி, ஒற்றுமை, தேசத்தின் அபிவிருத்தி, சமூக பொருளாதார, அரசியல் களநிலவரங்கள் குறித்த பிரக்ஞை என்பவற்றை பெற்றுக் கொள்வதும் - தமது தனித்துவம் பேணியவர்களாக - பரஸ்பரம் சகோதர சமூகங்களோடு மேலே சொல்லப்பட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பதும் கவனம் செலுத்த வேண்டிய மிகப் பிரதானமான அம்சமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இளமைப்பருவத்தில் தமது ஆன்மீக பண்பாட்டு வளர்ச்சியில், உயரிய இஸ்லாமிய மானுட விழுமியங்களை கண்டிப்பாக கடைப்பிடித்து ஒழுகுவதில் அவர்களுக்கு தேவைப்படுகின்ற ஆன்மீக பண்பாட்டு பயிற்சிப் பட்டறைகளை சமூகத் தலைமைகளும் குறிப்பாக முஹல்லாக்களும் அமைத்து தருவது அவசியமாகும்.