இஸ்ரேலை நெருக்கிய பி.டி.எஸ் எனும் செயல் திட்டம்!

10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஜூலை 9 அன்று, உலகில் 'மனசாட்சி உள்ள மக்களுக்கு' (people of conscience) வைக்கும் வேண்டுகோள் என்ற பெயரில் பாலஸ்தீனத்தின் 170 சிவில் சமூக குழுக்கள் சேர்ந்து ஒரு கோரிக்கை வைத்தன. அதை வைத்து உருவான செயல் திட்டம் தான் பி.டி.எஸ்.என்பது. அதவது, Boycott, Divestment, Sanctions (BDS) என்பதன் சுருக்கம்.

Boycott - புறக்கணிப்பு. Divestment - பகிரங்கப்படுத்துவது. Sanctions - தடை செய்வது. அதாவது, இஸ்ரேலை புறக்கணிப்பது, இஸ்ரேலின் சட்டவிரோத செயல்களை பகிரங்கப்படுத்துவது, இஸ்ரேலுக்கு பொருளாதார உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் ஏற்படுத்துவது. இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த பி.டி.எஸ். திட்டத்தின் மூன்று அம்சங்களும் சர்வதேச சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளில் இருக்கின்றன. பாலஸ்தீனர்களின் இடங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், பாலஸ்தீனம் - இஸ்ரேல் நடுவில் சட்டவிரோதமாக இஸ்ரேல் கட்டியுள்ள சுவரை இடித்து அகற்ற வேண்டும். இஸ்ரேலில் குடியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு முழு அளவில் சமத்துவம் வழங்க வேண்டும். பாலஸ்தீன அகதிகளின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்று பி.டி.எஸ். கேட்கிறது.

நீண்ட காலம் கடைபிடித்த அமைதி வழி முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டது. இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர் நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கும் குடியிருப்புகளை தடுப்பது, பாலஸ்தீனர்களை இன அழிப்பு செய்வது, பாலஸ்தீனர்களை இனத் தீண்டாமை செய்வது ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகளின் தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். உண்மையில் அவர்கள் பாலஸ்தீனியர்களின் இந்த அவல நிலை தொடரவே விரும்புகின்றனர். எனவே, உலக நாடுகள் மீது சாமானிய மக்களின் அழுத்தம் ஏற்பட்டால் மட்டுமே குற்றங்களை செய்து விட்டு தப்பித்துக் கொள்ளும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட முடியும். சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அமைதி ஏற்படவும் இந்த அழுத்தம் தான் உதவும்.

இந்த பி.டி.எஸ். திட்டம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க தேவாலயங்களில் இருந்து பிரிட்டனின் இஸ்ரேல் ஆதரவு முகாம்கள் மற்றும் எகிப்தின் வர்த்தக சங்கங்கள் முதல் பொலிவியா அரசு வரை என உலகம் முழுவதும் சீராக வெற்றிகளை குவித்து இருக்கிறது. இந்த பி.டி.எஸ். செயல் திட்டம் பொருளாதார தாக்கங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறையில் தொடர்புடைய வியோலியா (Veolia) மற்றும் ஜி4எஸ் (G4S) ஆகிய பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் பி.டி.எஸ் முன்னெடுத்த பிரச்சாரத்தின் காரணமாக பல பில்லியன் டாலர்கள் இழந்துள்ளன. இஸ்ரேலில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவிப்பு செய்துள்ளன. இஸ்ரேலுக்கான அன்னிய நேரடி முதலீடு 2014 ல் 46 விழுக்காடாக சரிந்து விட்டது.

உலக அளவில், லட்சக்கணக்கான மாணவர்களும் கல்வி புறக்கணிப்பு செய்யும் படிக்கு இந்த பி.டி.எஸ்.பிரச்சாரம் அழுத்தம் கொடுத்து இருக்கிறது. ஸ்டீபஃன் ஹாகீன்ஸ்(Stephen Hawking), ஆஞ்சலா தாவிஸ்(Angela Davis) மற்றும் ஜுதீத் பட்லர்(Judith Butler) போன்ற கல்வியாளர்கள் இந்த கல்வி புறக்கணிப்பை ஆதரித்து இருக்கின்றனர்.

இதனிடையே, நாடக ஆசிரியர் ஏலிஸ் வாக்கர்(Alice Walker), இசை கலைஞர் ரோஜர் வாட்டர்ஸ் (Roger Waters) மற்றும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனர் கென் லோச் (Ken Loach) ஆகியோரும் கூட இஸ்ரேலின் மீது கலாச்சார புறக்கணிப்புக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள். மிக முக்கியமாக, சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்க்கும் இஸ்ரேலியர்கள் மற்றும் பிற யூத குழுக்களும், கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரம் மற்றும் நீதிக்கு போராடும் Black Lives Matter என்ற அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிரான பி.டி.எஸ்.பிரச்சாரத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

பி.டி.எஸ் பிரச்சாரம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அழகு சாதன பொருள் விற்கும் அகவா (Ahava) கம்பெனி இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் இருக்கும் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இருந்து வெளியேற முடிவு செய்தது. SodaStream கம்பெனி 1967 க்கு முன் உள்ள இஸ்ரேல் பகுதிக்குள் போவதாக முடிவு செய்தது. பிரான்சு நாட்டின் பன்னாட்டு நிறுவனமான Veolia இஸ்ரேலில் தன்னுடைய குடிநீர் விற்பனை, கழிவுகள் நீக்கம் மற்றும் ஆற்றல் துறை சார்ந்த நடவடிக்கைகளை நிறுத்தி இருக்கிறது. கலாச்சார அமைப்பான Lauryn Hill இஸ்ரேலில் நடத்த திட்டமிட்டிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்து கொண்டது. 600 கலைஞர்கள் மற்றும் கலாச்சார பணியாளர்கள் இஸ்ரேல் பொருள் புறக்கணிப்புக்கு ஆதரவளிப்பதாக The Guardian நாளிதழுக்கு எழுதிய ஒரு கடிதம் மூலம் தெரிவித்தனர்.

பிரிட்டனின் UK National Union of Students என்ற மாணவர் அமைப்பு பி.டி.எஸ் சுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறது. பிரிட்டனின் வர்த்தக சங்கமான UNISON பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கம்பெனிகளிடத்தில் ஓய்வூதிய நிதியை முதலீடு செய்ய வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தது. United Cherch of Christ's புறக்கணிப்புக்கு 508-124 என்ற அளவில் ஆதரவு அளித்தது.

இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளில் இருந்து ஆதாயம் அடையும் கம்பெனிகளை விட்டும் விலகியது. இதனால் இஸ்ரேல் அரசு பி.டி.எஸ் மீது கோபத்தின் உச்சத்துக்கே போனது. பல்கலை கழகத் தலைவர்கள் கண்டித்தார்கள். பிரதமர் நெதன்யாகு கண்டித்தார். பி.டி.எஸ்ஸை ஒழித்துக்கட்டும் பொருப்பு கில்லட் எர்தனின் அமைச்சகத்துக்கு கொடுக்கப்பட்டது. வெளி நாடுகளில் இஸ்ரேலின் நண்பர்கள் பி.டி.எஸ்ஸுக்கு எதிரான கருத்துரைக்காக நிதி திரட்டும் துரித நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த பி.டி.எஸ். ஒரு இனவெறி அமைப்பு என்று இஸ்ரேல் ஆதரவாளர்கள் சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை என்பது தான் உண்மை. பி.டி.எஸ், இனம் மற்றும் தேசத்தின் அடிப்படையில், தனி நபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வில்லை. மாறாக, மனித உரிமைகள் மீறல்கள் அடிப்படையில் தான் சம்பந்தமுடைய நிறுவனங்களை குறிவைக்கிறது. அனைத்து வகையான இனவாதங்களையும் வெளிப்படையாக எதிர்க்கிறது.

அதனால் தான், இஸ்ரேலால் பாதுகாக்கப்படும் இன ஒதுக்கள் கொள்கையையும், ஒரு இனத்துக்கு மட்டும் கொடுக்கும் சிறப்பு சலுகையையும் பி.டி.எஸ். முடிவுக்கு கொண்டு வர குறிப்பிட்டு ஆர்வம் காட்டுகிறது. இந்த புரிதலில், தென் ஆப்ரிக்காவில் இருந்த இனவெறி கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராடி தென் ஆப்பிரிக்காவை சர்வதேச அளவில் தனிமைப் படுத்தி வெள்ளை இன வெறி அரசை முடிவுக்கு கொண்டு வர உதவிய 'இன ஒதுக்கல் ஒழிப்புக்கான எதிர்ப்பு அமைப்புக்கு' (Anti-apartheid movement) ஒப்பாக பி.டி.எஸ்.ஸைக் கருத இடமுண்டு.

2010 வாக்கில், இஸ்ரேல் பி.டி.எஸ்.க்கு எதிரான மோதலில் இறங்கியது. சட்ட விரோதமான அமைப்பு என்றும் கூறியது. இஸ்ரேல் நாடாளுமன்றம் (Knesset), இஸ்ரேலை புறக்கணிக்கச் செய்யும் பிரச்சாரத்துக்கு எதிராக கடுமையானதொரு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டம் எதிர் விளைவை ஏற்படுத்தியது. பயந்து போன இஸ்ரேல் தலைவர்கள் 2015 மத்தியில் பி.டி.எஸ்.ஸை ஒரு 'திட்டமிட்ட அச்சுறுத்தல்' (strategic threat) என்றார்கள். அடிப்படை விவகாரங்களுக்கான (Strategic Affairs) அமைச்சர் கில்லட் எர்தனுக்கு (Gilad Erdan) பி.டி.எஸ். வழி நடத்தும் புறக்கணிப்பு பிரச்சாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர்களும் ராணுவ துப்பறிவு நிறுவனங்களின் உதவியும் கொடுக்கப்பட்டது.

வெளி நாடுகளில் இருக்கும் ஜியோனிஸ (யூத இன வாத அரசியல் கொள்கை) அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் இந்த முயற்சிக்கு அவசியம் தேவைப்படுவதாக அமைச்சர் கில்லட் எர்தன் வலியுறுத்தினார். உண்மையில், செய்திகள் தருவதில் சிவில் சமூகத்தில் உள்ள தனி குழுக்கள் மிகவும் நம்பகமானவை என்கிறார். இந்த களத்தில் அரசு முன்னணியில் இருப்பது கண்டிப்பாக நல்லதல்ல என்றும் கூறி இருக்கிறார். இதன் காரணமாக, பி.டி.எஸ் எதிர்ப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்ட இஸ்ரேலிய தூதரகங்கள், இஸ்ரேல் நலனுக்காக வேலை செய்யும் (Lobbying) குழுக்களுடன் இணைந்து திரைமறைவில் வேலை செய்கிறார்கள்.

அமெரிக்காவில் ஷெல்டன் ஆதெல்சன்(Sheldon Adelson), ஹயிம் சபான் (Haim Saran) மற்றும் ட்ரிவோர் பியர்ஸ் (Trevor Pears) போன்ற இஸ்ரேலின் பலமிக்க ஆதரவாளர்கள் பிற நாடுகளில் இருக்கும் அரசு அமைப்புகள் பி.டி.எஸ். ஸில் பங்கெடுக்க விடாமல் தடுக்கின்றனர். ஒரு நாடு மற்றொரு நாட்டில் (இஸ்ரேல்) செய்துள்ள முதலீட்டை திரும்ப பெறச் சொல்லி வாக்காளர்கள் தங்கள் தொகுதியின் அங்கத்தவர் மூலம் அழுத்தம் கொடுக்கும் உரிமையையும் அந்த ஆதரவாளர்கள் மறுக்கிறார்கள். ஆனால் அந்த நாடானது (இஸ்ரேல்) சர்வதேச சட்டத்தை முறிப்பதாக பிரிட்டிஷ் அரசும் திறந்த வெளி சிறையை (காசாவில்) பேணி வருவதாக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டேவிட் காமரூனும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பின்னர், 'பி.டி.எஸ்.ஸின் ஒரே கொள்கை யூத எதிர்ப்பு (Anti-Semitic) மற்றும் இஸ்ரேலியர் வெறுப்பு மட்டுமே 'என்று நிரூபிப்பதன் மூலமாகத்தான் பி.டி.எஸ்.சுக்கு தடைகள் ஏற்படுத்துவதை அவர்கள் நியாயப்படுத்த முடியும். பி.டி.எஸ் ஆதரிக்கும் ஒரே நாடு திட்டத்தை பாலஸ்தீனர்களின் சுமேரியர் எதிர்ப்பு மற்றும் வெறுப்பு கோட்பாடு என்று எதிர் தரப்பு விமர்சிக்கிறார்கள்.

அதே நேரம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் வசம் இனவாதத்தில் தோய்த்தெடுத்த ஒரேநாடு (இஸ்ரேல் தேசம்) திட்டத்தை வைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அதை அவர் 'யூதர்களின் நாடு' (Jewish State) என்று கூறுகிறார். பி.டி.எஸ். கூறும் ஒரே நாடு திட்டமும் நெதன்யாகு கூறும் ஒரே நாடு திட்டமும் ஒரே தன்மை உடையதா என்று கேட்டால், இரண்டையும் ஒப்பிடக்கூடாது, இஸ்ரேல் தேசம் என்பது யூத மக்களுக்கானது என்று இஸ்ரேலுக்கான ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இஸ்ரேல் தேசம் என்பதை பாலஸ்தீனம் என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கூட கடும் ஜியோனிச வாதிகள் சுமேரியர் எதிர்ப்பு உணர்வாகத்தான் பார்க்கிறார்கள். இஸ்ரேலை உருவாக்கியவர்கள் இஸ்ரேல் தேசம் என்று அழைத்தார்கள். அதற்காக அதை எதிர்ப்பவர்களை யூத எதிர்ப்பாளர்கள் என்று முத்திரையிடும் உரிமம் ஒன்றும் அவர்களுக்குகொடுக்கப்படவில்லை.

கடுமையான தீவிரவாதம் உருவாக 'யூதர்களின் சதி திட்ட கொள்கைகள்' (Jewish Conspiracy Theories) தான் காரணம் என்று பிரிட்டிஷ் பிரதமர் கேமரன் மிகச் சரியாகத்தான் சொன்னார். யூதர்களின் சதி திட்டங்களால் தான், அடால்ப் இட்லருக்காக உருவாக்கப்பட்டிருந்த ரோமானிய கத்தோலிக்க தேவாலய அமைப்புகளிடம் இருந்து (Roman Catholic Church) யூதர்களுக்கு எதிரான வெறுப்பு உணர்வு (Anti-Semitic) எல்லா இடங்களிலும் வியாபித்து பரவியது என்று ஐரோப்பிய கிறித்தவர்கள் நம்பினார்கள். இப்போது, யூத சதிகளின் புதிய திட்டங்கள் காமரூனால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் மீது நல்லெண்ணம் கொண்டுள்ள பிரிட்டிஷ் முஸ்லிம்கள் இப்படி தான் கருதுகிறார்கள்.

யூதர்களின் நலன்கள் தான் பிரிட்டிஷ் அரசை இயக்கும் அச்சாகவும் இருக்கிறது. காமரூன் பிரிடிஷில் உள்ள யூதர்களையும் இஸ்ரேலையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளையே பெரிதாக செய்து வந்தார். அவர் செயல்பட கிடைத்ததாக சொன்ன தவல்கள் சந்தேகமானவை. அவர் வைத்த வாதங்கள் பொய்யானவை. இஸ்ரேல் மீது அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடு கொள்வதையே குற்றச் செயலாக்குவது யூத சதி கொள்கைகளை மீண்டும் கட்டமைக்கும். தீவிரவாதிகளுக்கே உதவும். இதை காமரூனே ஒப்புக் கொண்டிருக்கிறார். பின்னர் ஏன் இதை செய்ய காமரூன் முன் வந்தார். அலாஸ்டேர் சோலன்(Alastair stolen) லண்டனை சேர்ந்த பத்திரிகையாளர். அவர் பிரிட்டனில் நடக்கும் அநீதிகள் மற்றும் மனித உரிமைகளையும், சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமைகள் பிரச்சனைகள், ஆயுத வர்த்தகம், பத்திரிகை தணிக்கைகள், அரசியல் குழப்பங்கள் மற்றும் சர்வாதிகார அரசுகளை கோடிட்டு காட்டுகிறார்.

இஸ்ரேலுக்காக பரிதாபப் படக்கூடியவர்கள் பி.டி.எஸ்.ஸை சட்டவிரோதமானது என்று கூறலாம். ஆனால் இந்த அபாண்டம் நகை முரணானது. பாலஸ்தீன போராட்டங்களை ஆதரிப்பவர்கள் கேப் டவுனில் (தென் ஆப்ரிக்கா) இஸ்ரேல் எடுக்கும் ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிராக பி.டி.எஸ். நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள் என்கிறார் வழக்கறிஞரும் மனித உரிமைகள் ஆர்வலருமான Stanley L Cohen. இவர் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா பற்றி பல்வேறு விரிவான ஆய்வுகள் செய்திருக்கிறார்.

இஸ்ரேலிய சிந்தனையாளர் Yossi Klein Haveli சமீபத்தில் Los Angeles Times பத்திரிக்கையில் பி.டி.எஸ் பற்றி எழுதிய போது, அமெரிக்கர்கள் அவ்வமைப்பு சட்ட விரோதமானது என்றும் கட்டிருக்கமான இஸ்ரேல் சமூகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலானது என்றும் நம்பி இருப்பார்கள். அதே நேரம், இஸ்ரேலின் ஆரோக்கியத்தையும் இஸ்ரேலுக்கு உலக நாடுகளோடு இருக்கும் பொருளாதார உறவுகளையும் பி.டி.எஸ்.ஸால் தொடவே முடியாது என்றும் எழுதினார். ஆனால் பி.டி.எஸ் நேர்மை பற்றி அவர் எழுதிய குற்றச்சாட்டுகளில் உள்ளீடுகள் இல்லை. ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்கள் முழுவதும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்து வரும் முடிவிலாத அடக்குமுறைக்கு வக்காலத்து வாங்கி எழுதும் எழுத்து வியாபாரிகள் அதிக பணம் சம்பாதித்ததை காட்டிலும் இஸ்ரேலுக்கு எந்த நல்லதும் ஏற்பட வில்லை.

பாலஸ்தீனர்களை பொருத்து இஸ்ரேலுக்கு எந்த காலத்திலும் சட்டப்படியான அங்கீகாரம் இல்லை. பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு பாலஸ்தீனர்களின் நிலங்களை களவாடி ராணுவ பலத்தை கொண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டு இருப்பதால் அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை. ஐரோப்பிய மக்களிடத்தில் பாலஸ்தீன பிரச்சனையை அறிமுகம் செய்யும் பி.டி.எஸ் அமைப்பு செயல்வடிவத்தில் இந்த கருத்தை கொண்டு சேர்க்கிறது.

பி.டி.எஸ் பிரச்சாரத்தை முறியடிக்கும் செலவுக்காக தேவைக்கும் அதிகமான நிதியை பிரிட்டன் திரட்டி கொடுக்கிறது. இஸ்ரேல் அரசும் இஸ்ரேல் ஆதரவு அமைப்புகளும் சேர்ந்து கொண்டு உலக நாடுகள் மட்டத்தில் அரசுகளையும் இஸ்ரேல் ஆதரவு குழுக்களையும் பி.டி.எஸ் சுக்கு எதிரான பங்காளிகளாக இணைக்கும் வேலைகளை செய்கிறார்கள். பி.டி.எஸ் சுக்கு எதிரான இந்த இயக்கம் என்ன சாதித்து இருக்கிறது? தங்கள் வாதத்தில் அரசியல் ரீதியில் வெற்றி பெற முடியாமல் போனாலும் இஸ்ரேலும் அதன் கூட்டாளிகளும் பி.டி.எஸ் சட்டவிரோதமான அமைப்பு என்ற பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகிறார்கள். பி.டி.எஸ் ஸை குற்றப்படுத்தும் இவர்கள் முயற்சியில் வெற்றி கிடைத்ததற்கு உயர் மட்டத்தில் இருக்கும் இஸ்ரேலின் நண்பர்களுக்குத் தான் நன்றி சொல்லியாக வேண்டும். இப்போது, இஸ்ரேல் பொருட்களை புறக்கணிப்பு செய்யும் பிரச்சாரத்துக்கு எதிரான சட்டங்களை அமெரிக்காவின் 20 மாகாணங்கள் கொண்டு வந்திருக்கின்றன. மேலும்,ஆஸ்திரேலியா தொடங்கி பிரான்சு வரையில் பி.டி.எஸ் ஆர்வலர்கள் மீது வழக்குகள் போடப்படுகிறது.

இருப்பினும், பி.டி.எஸ் தீவிர வளர்ச்சி முகத்தில் தான் இருக்கிறது. இஸ்ரேல் பொருட்களை புறக்கணிப்பு செய்யும் பிரச்சார உரிமையானது கருத்து சுதந்திரம் சம்பந்தமான பிரச்சனை என்று சட்ட அறிஞர்களும் ஐரோப்பிய ஒன்றியமும் வாதிடுகிறார்கள். லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் Alastair Sloan. இவர் பிரிட்டனின் அநீதியையும் மனித உரிமைகள் பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டுகிறார். இறுதியாக பிரிட்டனில், அரசு நிறுவனங்கள், நகராட்சி அமைப்புகள், நூலகங்கள், பல்கலை கழகங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிப்பதை குற்ற நடவடிக்கையாக அறிவிக்கும் திட்டத்தை கன்சர்வேடிவ் கட்சி கொண்டு வந்தது.

செல்வாக்குமிக்க கன்சர்வேடிவ் ஆதரவாளர் ஒருவர், "கடந்த நாட்களில் யூத நாட்டின் பொருட்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட பிரச்சாரம் இறுதியில், யூத மக்களின் உயிருக்கு எதிரான பிரச்சாரமாக முடிந்து இருப்பதை நாம் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்" என 2014, செப்டம்பரில் சொன்னார். இந்த நகர்வு கன்சர்வேடிவ் அரசியல்வாதிகளின் அரசியல் பார்வை சம்பந்தப்பட்டிருப்பதை பிரதிபலித்தாலும் பொருள் புறக்கணிப்புக்கு எதிரான சட்டம் கொண்டு வந்ததற்கு பிரிட்டனுக்கான முன்னால் இஸ்ரேல் தூதர் டேனியல் டாபின் (Daniel Taub) முயற்சிக்கு கிடைத்த பலன். பி.டி.எஸ் அமைப்பின் விருப்பம் யூத மக்களை அழிப்பதும் இஸ்ரேல் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் தான் என்பதாக வலிமையான பிரச்சாரத்தை முன்வைத்தார்.

பி.டி.எஸ் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலா?
பி.டி.எஸ் ஸை இவ்வாறு புரிவது முற்றிலும் தவறானது. பி.டி.எஸ், பாலஸ்தீனம் என்ற பெயரிலான ஒரு நாட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை. வன்முறை மூலமாக ஒன்றை அடையும் இலட்சியமும் இல்லை. யூத மக்களை இரண்டாம் தர குடிகளாக கருதவில்லை. யூதர்கள் புனித தளத்தில் வழிபடும் உரிமையை மறுக்கவும் இல்லை. தனது அரசியல் நிலைக்காக கடுமையாக போராடி வருவது தான் அதன் லட்சியம். மற்றபடி, யூத எதிர்ப்பும் (Anti-Semitic) இல்லை. பி.டி.எஸ் ஆதரவாளர்கள் யூதர்களின் கடைகளை புறக்கணிக்கவில்லை. மாறாக இஸ்ரேலில் இருந்து பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடைகளை மட்டும் புறக்கணிக்கிறது. ஆனால் வாய்ப்பு கேடாக இஸ்ரேல் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் எல்லாம் யூதர்களின் கடைகளாக இருக்கின்றன.

யாரை புறக்கணிக்க வேண்டும் என்பதில் பி.டி.எஸ் தெளிவாக கவனம் கொண்டிருக்கிறது. பிரிட்டனில் இஸ்ரேல் பொருட்களை விற்பனை செய்யும் யூதர்களின் தனி நபர் கடைகள் இஸ்ரேல் அரசின் பிழைகளுக்கு பொறுப்பாகாது. இவர்கள் இஸ்ரேலிய அரசை தேர்ந்தெடுக்க வில்லை. இவர்களால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனதை மாற்றவும் முடியாது. ஆனால், இட்லர் ஆட்சியில் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையைவோ அதில் இழந்த உறவினர்களையோ நினைவுக் கூருவது பிரிட்டனில் வாழும் யூதர்களுக்கு கௌரவான செயல் இல்லை.

இஸ்ரேல் பல கொடுமைகள் செய்வதற்கு பொறுப்பான அமைப்புகளை பற்றி அழுத்தமாகவே பிரச்சாரம் செய்ய வேண்டும். இது முற்றிலும் சட்டப்படியான நடவடிக்கை தான். இதன் மீது தான் காமரூன் குற்றச்சாயம் பூசினார். போலந்து நாட்டைச் சேர்ந்த யூத தொழில் அதிபர்களால் தொடங்கப்பட்ட மார்க்ஸ்&ஸ்பென்ஸர் (Marks & Spencer) கம்பெனி பிரிட்டனில் மிகப் பெரிய பலசரக்கு விற்பனையகம். இதன் உரிமையாளர்களுக்கு யூத சமூகவியல் (Judaism) யூத அரசியல் (Zionism) ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இவர்கள் நிறுவனங்களில் பொருள் வாங்காதீர்கள் என்று பி.டி.எஸ் பிரச்சாரம் செய்வதில்லை. இஸ்ரேல் பொருள் புறக்கணிப்பில் மார்க்ஸ்&ஸ்பென்சர் நிறுவனம் பங்கெடுத்து உள்ளது. இஸ்ரேலிய குடியேற்ற பகுதிகளில் இருந்து பொருட்கள் வழங்கவும் மறுத்து விட்டது. அதனால் இந்த அமைப்பு யூத எதிர்ப்பை கொண்ட அமைப்பு இல்லை.

ஜனநாயகத்தில் வன்முறை இல்லாத அரசியல் செயல்பாடுகள் யூதர்ளுக்கு எதிரானது இல்லை என்ற விதிமுறையே இருக்கிறது. ஆனால், இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கே எதிரானது. இதை யூதர்களுக்கு எதிரானது என்று ஒரு போதும் நியாயப்படுத்திட முடியாது. 2014 தேர்தலில் வாக்களித்த போது, 15 விழுக்காடு கன்சர்வேடிவ் வாக்காளர்களும் 30 விழுக்காடு லேபர் மற்றும் லிபரல் டெமாக்ரட்டிக் வாக்காளர்களும் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனர்களுக்கு பரிவாக நடந்து கொண்டார்கள்.

இதுவரையிலும், இஸ்ரேல் தலைவர்கள் பி.டி.எஸ்ஸின் புறக்கணிப்பு திட்டத்தை எதிர்த்து செயல்பட முடியாமல் திணறி வருகிறார்கள். பி.டி.எஸ்ஸுக்கு எதிரான நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை என்று இஸ்ரேலின் சென்ட்ரிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது. இஸ்ரேலுக்கு பி.டி.எஸ்ஸால் ஏற்பட்ட களங்கத்தை துடைக்கவும் பாலஸ்தீனர்களின் ஐக்கிய நடவடிக்கைகளை ஒடுக்கவும் அதன் மீது தாக்குதல் நடத்தவும் இதுவரையிலும் கூட பல நூறு கோடி டாலர்களை இஸ்ரேல் செலவிட்டுள்ளது.
பி.டி.எஸ்ஸின் பலம் மிகவும் தெளிவானது. பாலஸதீனத்துக்கான ஆர்வலர்களும் ஆதரவாளர்களும் ஒருங்கிணைந்து வேலை செய்கிறார்கள். பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரையில் வசிப்பவர்கள், இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் உலகம் எங்கும் வசிக்கும் பாலஸ்தீன அகதிகள் உள்ளிட்ட அனைத்து பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கான போராட்டமே அதனுடையது. தீவிரவாதம் இல்லை. துப்பாக்கி சப்தம் இல்லை. போர், உயிரிழப்புகள் இல்லை. ஒரு சின்ன உத்தி தான். ஆட்டம் கண்டு விட்டது இஸ்ரேலின் சர்வதேச அரசியல்.

இஸ்ரேல் பாலஸ்தீனர்களால் முற்றுகை இடப்பட்டு அதன் அச்சுறுத்தலின் கீழ் இருந்து வருவதாக உலக நாடுகளை நம்ப வைத்து சுமார் 70 ஆண்டுகளை இஸ்ரேல் கடந்து விட்டது. உண்மையில் கொடுமை செய்பவர்கள் யார்? பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்ற உண்மையை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு போகும் போது அது, இஸ்ரேலாக இருந்தாலும் மனசாட்சி உள்ள மக்களால் மதிப்பிடப்படும். குற்றம் இழைப்பவர்கள் வெறுப்புக்கும் தண்டைனைக்கும் ஆளாவார்கள் என்பதற்கு இந்த பி.டி.எஸ் - ன் அரசியல் சாதுர்ய நடவடிக்கை மிக உறுதியான உதாரணமாக இருக்கிறது.