“சர்க்கார் அம்மா” நவாப் சுல்தான் கைகுஸ்ர் ஜஹான் பேகம்

மக்களால் “சர்க்கார் அம்மா” என்று அழைக்கப்பட்டவர். 1930 மே 12 ஆம் தேதி மரணமடைந்த இவரது பிரிவால் இந்திய துணை கண்டத்தினரும் அந்நிய நாட்டவரும் சோகத்தில் மூழ்கினர். டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பர் “A GREAT INDIAN RULER” என்று அஞ்சலி செலுத்தியது.

இந்த பெருமைக்கு உரித்தானவர் சொந்தக்காரர் இஸ்லாமிய பெண்மனி நவாப் சுல்தான் கைகுஸ்ரு ஜஹான் பேகம்.
இஸ்லாமிய பெண்மனி என்று அலுத்திச் சொல்வதில் ஒரு அரசியலும் உள்அர்த்தமும் வைத்தே எழுதுகிறேன். முஸ்லிம் பெண்கள் முடக்கப்பட்டவர்கள் அவர்கள் “பர்தா” எனும் தடையால் உலகத்தின் போக்கு தெரியாமல் தடுக்கப்பட்டவர்கள் என்ற சிந்தனை பொது புத்தியில் விதைக்கப்பட்டு பொதுக்கருத்தாக பரவலாக்கப்பட்டிருக்கிறது.
20 ஆம் நூற்றாண்டில் 26 ஆண்டுகள் “பர்தா” வின் மூலம் தன்னை மூடிக்கொண்ட ஒரு முஸ்லிம் பெண் போபால் சமஸ்தானத்தின் ராணியாக இருந்தார். தனது அரச மேலாண்மை மூலம் ஒட்டு மொத்த சமூகத்தின் விழிப்புணர்வுக்கு காரணமாக இருந்தார். ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் இருவருக்கும் கல்விக் கூடங்கள் திறந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், ஐரோப்பாவின் லண்டன் மாநகரத்திற்கும் பர்தாவுடனே பயணித்தார். பிரிட்டிஷ் பிரபுக்களுடன் பர்தாவில் இருந்தே பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
“பர்தா” அவர் ஆட்சியாளராக இருப்பதற்கும், மேலாண்மை செய்வதற்கும், தேவை நிமித்தம் யாரையும் அணுகுவதற்கும் தடையாக இல்லை. அவர்ளது கூறுகிறார்கள் “உயர் கல்வி பயில்வதற்கோ, பயணத்திற்கோ உடல் நலத்திற்கோ, தொண்டு வேலைகளுக்கோ, நாட்டுப்பற்றுடன் வாழ்வதற்கோ தடை அல்ல.”
இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஆணோ பெண்ணோ அவர்களிருவரும் சமூகத்தின் சக பங்காளிகள். இருவருக்கும் சமூக பங்கு இருக்கிறது. அவரவர் இயல்புக்கு ஏற்ப.
தனக்கு கிடைத்த வாய்ப்பில் ஒரு அரச மேலாண்மை மூலம் தான் வாழ்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த நவாப் சுல்தான் கைகுஸ்ரு ஜஹான் பேகம் அவர்கள் கல்வியிலும், சமூக செயல்பாடுகளிலும் செய்த பங்களிப்புகள் குறித்த தொகுப்புதான் இந்த கட்டுரை.
அவர் இந்திய வரலாற்றில் தனித்துவ அடையாளம் கொண்டவர்.
சுல்தான் கைகுஸ்ர் ஜஹான் பேகம் நவாப் பாகி முஹம்மது கான் மற்றும் நவாப் ஷ ஜஹான் பேகத்தின் மகளாக ஜூலை 1858, ஹிஜ்ரி 1274 இல் பிறந்தார்.
இவரது பாட்டி நவாப் சிக்கந்தர் பேகம், கொள்ளுப் பாட்டி நவாப் குத்சியா பேகம் ஆகியோர் உற்சாகமூட்டும் ஆளுமைகளாக முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர். ஆழ்ந்த இறை நம்பிக்கையுள்ளவராகவும், குடும்ப பெண்ணாகவும், உன்னதமான பற்றற்றவராகவும் இருந்துள்ளார் அவரது பாட்டி மற்றும் கொள்ளுப் பாட்டியைப் போல!
அவரது பாட்டி சிக்கந்தர் பேகத்தின் முழுமையான கண்காணிப்பில் வளர்ந்தார். அவரது பாட்டியே இவரை ஆளுமை மிக்கவராக உருவாக்கினார். இடைவிடாது பேத்திக்கு கல்வி புகட்டுவதில் கவனமாக இருந்தார்.
அவரது பாட்டி மரணித்து சில நாட்களுக்குப் பிறகு இளமைப் பருவம் முதல் புத்தகம் எழுதத் தொடங்கினார். அதன் பெயர் தாஜுல் இக்பால். இதில் கற்ற கல்வி, கடந்து போன தனது சிறுபிராயம் குறித்து விரிவாக எழுதி இருக்கிறார்.
நான்கு வயது முதல் குர்ஆனை பிஸ்மில்லாஹ் சொல்லி ஓதுவதில் ஆரம்பமானது அவர்களது கல்வி.
அவர்களே எழுதுவது போல் “பிரார்த்தனைகளுடன் இறையருளுடன் எனது கல்வி அடித்தளமிடப்பட்டது.”
தலை சிறந்த ஆசிரியர்கள் பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.sultania-zanana-hospital-in-bhopal-1472073152
எனது தினசரி நேர அட்டவணை :
காலை 5 – 6 உடற்பயிற்சி
6 – 7 காலை உணவு
8 – 10 குர்ஆர் படித்தல் மொழி பெயர்ப்பு மற்றும் விளக்கவுரையுடன்
ஆசிரியர் : முதன்மை அமைச்சர் மௌலவி ஜமாலுத்தீன் கான்
10 – 11 பாட்டியுடன் பிரேக் ஃபாஸ்ட்
11 – 12 இளைப்பாறுதல்
12 – 01 எழுத்துப் பயிற்சி
01 – 03 ஆங்கில மொழிப் பாடம்
ஆசிரியர் : நவாப் சிக்கந்தர் பேகத்தின் தனிச் செயளாளர் முன்ஷி ஹுஸைன் கான்
03 – 04 பாரசீக மொழிப் பாடம்
04 – 05 அரிதமெடிக் எண் கணிதம்
பண்டிட் கண்பத் ராய்
05 – 05.30 பஷ்தூன் மொழிப்பாடம், அதே நேரத்தில் வாள் சண்டை பயிற்சி
05.30 – 06 குதிரையேற்ற பயிற்சி
06 – 07 இரவு உணவு
8 இரவு தூக்கம் (நம்முடைய தூக்கத்தின் நேரம்?)
ஒரு ஆண் படிக்கும் அத்தனை துறை சார்ந்த பாடங்களையும் இவர் படித்தார்.

ஆசிரியர்களிடம் நேரடியாக இல்லாமல் ஆசிரியர்களின் சப்தத்தை கேட்டு பாடம் படித்தார்.
4 ஜூலை 1901 17 ரபியுல் அவ்வல் 17 அன்று தனது 43 வயதில் அவது அம்மா ஷா ஜஹான் பேகமைத் தொடர்ந்து இவர் அரியணை ஏறினார்.
பதவி ஏற்ற பின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களை ஊக்கப்படுத்தினார். குறிப்பாக பெண் கல்வியை ஊக்கப்படுத்தினார்.
சமூக சீர்திருத்தத்தை பிரச்சாரமாக மேற்கொண்டார்.
கிராமங்களில் தொடர்ந்து பயணித்து பிரச்சனைகளின் வேர்களை, மூலங்களை குறிப்பாக பெண்கள் சந்திக்கும் சவால்களை கண்டறிந்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை, உடல் நலனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திய அவர் போபாலில் இரண்டு மருத்துவமனைகளை ஏற்படுத்தினார்.
பிரின்ஸ் ஆஃப் வேலஸ் மருத்துவமனை இது ஆண்களுக்கானது.
லேடி லேண்ட்ஸ் டவுன் மருத்துவமனை பெண்களுக்கானது. இன்றும் இந்த மருத்துவமனை சுல்தானியா ஜெனானா மருத்துவமனை என்ற பெயரில் இன்றும் அந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
லேடி ஹார்டிங் குழந்தை இல்லம் ஒன்றை ஆரம்பித்தார். இது லேடி லேண்ட்ஸ் டவுன் மருத்துவனையின் கண்காணிப்பின் கீழ் பராமரிகப்பட்டது. இதில் அனாதைகள் ஏழை குழந்தைகள் தங்க வைக்கப்பட்டனர் உடை உணவு வழங்கப்பட்டது.
சிறுவர் இல்லம் மேலும் லேடி மிண்ட் நர்சிங் ஸ்கூல் 1912 இல் ஆரம்பிக்கப்பட்டது.
நர்சிங் ஸ்கூல் ஏன் தேவை என்பது குறித்து அவர் கூறும் போது :- உடல் நலக்குறைவு ஏற்படும் நாட்களில் நல்ல மருத்துவர்கள் நல்ல மருந்துகள் மட்டும் போதுமானதல்ல. ஒரு நல்ல செவிலியர் தேவை.
செவிலியராக பயிற்றுவிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தின் ஒவ்வொரு தரத்திலும் உள்ளவர்களின் அவசரத் தேவைகளுக்கு உதவ முடியும்.
பெண்களின் சுகாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சுல்தான் ஜஹான் பேகம் பெண் நல மருத்துவர்களை, மருத்துவ நிறுவனங்களை தொழில்முறையாக ரீதியாக செயல்படுத்தினார்.
ஹாகிம் என்ற பெயரில் யுனானி மருத்துவர்கள், செவிலியர்கள், மகப்பேறு மருத்துவச்சிகள். சுகாதார பார்வையாளர்கள், மருந்தகங்களுக்கு பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
மதரஸா யே ஆஸிஃபியா என்ற பெயரில் புதிய மருத்துவத் திட்டத்தை உருவாக்கினார். இந்த திட்டத்தில் உள்நாட்டு மருத்துவப் பணியாளர்கள், யுனானி மருந்து தயாரிப்பில் பயிற்சி பெற்ற ஹக்கீம்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். முறையாக பயின்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புற நகர் பகுதிகளிலும் மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டது. 30 க்கும் அதிகமான யுனானி மருந்தகங்கள் அவரது மாகாணத்தில் பராமரிக்கப்பட்டது.
பெண் சுகாதார பணியாளர்களின் கீழ் இந்த மருந்தகங்கள் பிரத்யேகமாக பெண்களுக்கு சேவை செய்தன.
இந்த திட்டத்தின் கீழ், அனைத்து மகப்பேறு மருத்துவச்சிகள் தினமும் லேபல் லான்ஸ்டவுன் மருத்துவமனையில் நடக்கும் வகுப்புகளுக்கு தங்கள் குழந்தைகளுடன் வரவும், பெண் மருத்துவர்கள் பாடம் நடத்தவும் அழைக்கப்பட்டனர்.
அவர்களின் மகள்கள் பெண் மருத்துவர்களிடம் தொடக்கப் பயிற்சி பெற உத்தரவிடப்பட்டனர்.
எப்போது முறையான பயிற்சியை முடிக்கிறார்களோ, இந்தியன் மெடிகல் சர்வீஸ் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்களோ அப்போது அவர்களுக்கு சான்று வழங்கப்படும். இந்த சான்றிதழ் இல்லாமல் யாரும் அங்கு மருத்துவப் பணி செய்ய இயலாது. மருத்துவ படிப்பு திட்டத்தை பிரபலப்படுத்த விரும்பிய அவர் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மாதம் ஐந்து ரூபாய் வழங்கினார்.SAIFIA D
முக்கியமான இன்னொரு விஷயத்தையும் அவர் செயல்படுத்தினார். “ஆரோக்கியமான வலுவான குழந்தைகள் மூலம் மாகாணத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய குழந்தைகள் தேவை என்பதால் முதலுதவி, பிரசவ கால அடிப்படைக் கூறுகளை தாய்மார்களுக்கு கற்பித்தார்.” அதற்காக A SCHOOL OF MOTHERS தாய்மைப் பள்ளி 1919 இல் நிறுவப்பட்டது.
1916 இல் பெண்களின் சுகாதாரம் உடல் நலம் குறித்து ‘hifz I sehat’ Preservation of Health (ஆரோக்கிய பாதுகாப்பு) நோய் ஏற்படாமல் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெண்களுக்கு உடற்பயிற்சி, சீரான உணவு ஆகியவற்றை வலியுறுத்தினார்.
கல்வியின் மூலம் மட்டுமே பெண்கள் மேம்பாடு சாத்தியமாகும் என்று நம்பினார்.
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில், கூட்டங்களில் பெண் கல்வியை முன்னிலைப்படுத்தி பேசியுள்ளார். ஆண் பெண் இருவருக்கும் கல்வி கல்வி கட்டாயம் என்ற இஸ்லாமிய கூற்றின் அடிப்படையில் நின்று ஆண் பெண் இருவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதில் முனைப்பு காட்டினார்.
அவரே எழுதியுள்ளது போல் “ ‘கல்வி பெண்களுக்கு சிறந்த ஆபரணம் அலங்காரமாகும்.’ சமூகத்தின் சரி பாதித் தொகையினராகிய பெண்கள் கல்வித் தேவையை புறக்கணித்தால் உண்மையான முன்னேற்றத்தை காண முடியாது” என்றார்.
அறிவியல் ரீதியில் பெண்களுக்குப் பொருத்தமான பாடத்திட்டத்தை வடிவமைக்க கனவு கண்டார். இந்த வழியில் சுல்தான் கைகுஸ்ர் ஜஹான் பேகம் பெண்கள் மனதை விரிவுபடுத்த முயன்றார் மேலும் சமூகமாக அவர்களை அணிதிரட்டினார். அவரே கூறுகிறார் என்னிடமிருந்த வளங்களைக் கொண்டு சில பாட வகுப்புகளை ஆரம்பித்தேன். அதில் குர்ஆன் பாட வகுப்பு மொழி பெயர்ப்புடன் அத்தோடு உருது, அரிதமெடிக், புவியியல், உள் நாட்டுப் பொருளாதாரம் ஆகியவை பெண்களுக்கு கற்பிக்கப்பட்டது. சுல்தானியா பெண்கள் பள்ளி (Sultania Girls School) என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்றை 1903 ரஜப் மாதம் ஹிஜ்ரி 1321 அன்று ஆரம்பித்தார். இந்த பள்ளி அலகாபாத் பல்கலைக் கழக நடுநிலைப் பள்ளிப் பாடங்கள் இணைக்கப்பட்டது. முதல் வருடத்திலேயே 40 மாணவிகள் சேர்ந்தனர். முகலி காணம், நசீர் பீபி, ஜைனப் பீபி என்ற மூன்று பெண் ஆசிரியர்கள் மற்றும் கண்கானிப்பாளராக மௌலவி சையது முஹம்மது அலி ரிஸ்வி ஆகியோர் நியமிகப்பட்டனர்.
மாணவிகளை காலையில் அழைத்து வரவும் பிற்பகல் அவர்களை வீட்டில் கொண்டு விடவும் அரசே பொறுப்பேற்றுக் கொண்டது.Sultan Kaikhusrau Jahan Begum 09.07.1858  dressed in festive robe leaving the Delhi Coronation Durbar 1911
16 பிப் 1911 இல் சுல்தானியா பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சுல்தான் ஜஹான் பேசும் போது “அறிவை பெறுவதற்கு பெண்கள் விடாமுயற்சியை மேற்கொள்ளுங்கள் ‘கல்விதான் பெண்களின் செல்வம்’” என்று பேசினார்.
விக்டோரியா பெண்கள் பள்ளி என்ற பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார்.
சுல்தான் ஜஹான் பேகம் கலையை ஊக்குவிப்பவராக இருந்தார்.
சிறுவயதில் இருந்தே கலை மீது ஆர்வமுடையவளாக இருந்தேன்.
என் இளமை பருவத்தில் கலை மீது ஆர்வம் கொண்டு பூத்தையல் (எம்பிராய்டரி) அலங்காரம் செய்து வந்தேன்.
விக்டோரியா, சுல்தானியா என்ற தனது இரு பள்ளிகளிலும் கலை மற்றும் கைவினைப் பயிற்சியை கற்பித்து வந்தார்.
இந்த இரண்டு பெண்கள் பள்ளிக் கூடங்களும் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
1905 இல் விதவைகள் மற்றும் வறிய நிலையில் இருந்த பெண்களுக்காக ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற தொழில் கல்வி பள்ளியைத் தோற்றுவித்தார்.
இந்த தொழில் கல்விப் பள்ளி அரசின் நிதி உதவி மற்றும் பொதுமக்களின் நன்கொடை மூலம் பராமரிக்கப்பட்டது.
இந்த பள்ளி எழை எளிய பெண்களுக்கு தையல் மற்றும் பூந்தையல் போன்றவற்றுக்கு பயிற்சி அளித்தது. அந்த பெண்கள் சுய சார்புடையவர்களாக மாறினார்கள்.
பின்னாட்களில் ஆசிஃபியா டெக்னிகல் ஸ்கூல் என பெயர் மாற்றம் பெற்ற இந்த பள்ளி ஈர்க்கும் தன்மையுடைய வண்ணமயமான கைவினைப் பொருட்களை தயார் செய்து போபாலில் நடைபெற்ற கண்காட்சியில் பல பரிசுகளை வென்றது.
இந்து பெண்களுக்காக 1907 இல் பிர்ஜிசியா கன்யா பத்ஷலா (Birjisia Kanya Pathshala) என்ற பெயரில் பள்ளி ஒன்றை தொடங்கினார்.

இவை தவிர மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தார்.
மேல் தட்டு மனிதர்களின் பிள்ளைகள் படிப்பததற்காக 1903 இல் அலெக்ஸாண்டர் நோபல் ஸ்கூல் என்ற பள்ளியைத் திறந்தார். மாணவர்கள் இதில் ஒழுக்க நெறிகள், மதம் சார்ந்த கல்வியுடன் இணைந்த நவீன கல்வி பயிற்றுவிக்கப்பட்டனர்.
முஸ்லிம் சிறுவர்களுக்கு ஒரு பள்ளி குறிப்பாக குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் பள்ளியைத் தோற்றுவித்தார்.
ஜஹாங்கிரி ஸ்கூல் என்ற பள்ளியை மாணவர்களுக்காக 1907 இல் ஆரம்பித்தார். இதில் தையல் மற்றும் பூட் (காலணி) தயாரிக்கும் முறையும் பயிற்றுவிக்கப்பட்டது.
1916 இல் mechanical engineering, carpentry, cabinet making, coach builders and motor cars mechanics ஆகிய துறைகள் அடங்கிய ஆண்களுக்கான Habibia Technical School

தொழில் பயிற்சிப் பள்ளி
தோற்றுவிக்கப்பட்டது.
போபாலில் பசீலி, பெராசியா மற்றும் பாமோரி போன்ற மூன்று தாலுக்காக்கள் ஒவ்வொன்றிலும் 1911 இல் நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட்டது.
போபாலில் ஒரு மழலையர் பள்ளி (Kindergarten class) வகுப்பு திறக்கப்பட்டது. வகுப்புகள் அலி மன்சிலில் நடைபெற்றது.
விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி தரும் பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் சிந்தனை திறனை அதிகரிக்கும் வகையில் அந்த பள்ளி இருந்தது. குழந்தைகள் புத்தகப் படிப்பை விட மகிழ்ச்சியான விளையாட்டுக்களில் திளைத்தனர்.

இது இல்லாமல் போபால் மாகாணத்துக்கு வெளியில் இருந்த அலிகரில் இருந்த ஜெனானா மதரஸா, முஸ்லிம் பெண்கள் பள்ளி லக்னோ, மதரஸா யே சுல்தானியா பானிபட் போன்ற பல பள்ளிகள் சுல்தான் ஜஹான் பேகம் அவர்களின் தாராளமான ஆதரவைப் பெற்றன.
1906 - 1907 களில் கல்வி தொடர்பான சில கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நகரத்தில் இருக்கும் பள்ளிக் கூடங்களில் கல்விக் கட்டணத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
1906 இல் புதிய கல்வித் துறைக்கான புதிய சட்டத் தொகுப்பு கொண்டு வரப்பட்டது. இதன் படி அனைத்து உயர் நிலை பள்ளிகளும் அலகாபாத் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் கணிதம் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக 10,000 செலவிடப்பட்டது.
மருத்துவம், சட்டம், பொறியியல், விவசாயம், அறிவியல் துறைகளில் தங்களை தகுதிப் படுத்திக் கொள்ளும் மாணவர்களுக்கும் மேலும் மேற்படிப்புக்காக ஐரோப்பா செல்லும் மாணவர்களுக்கும் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
1912 ஆம் ஆண்டு போபால் மாகாண வரவு செலவு திட்ட அறிக்கையில் ஒரு லட்ச ரூபாய் கல்வித் துறைக்கும், 10,000 ரூபாய் கல்வி உதவித் தொகைக்கும் ஒதுக்கப்பட்டது.
பின்னர் இந்த தொகை உயர்த்தப்பட்டது.
1917 இல் 5,24,400 மானியமாக ஒதுக்கப்பட்டது. பல்கீசியா ஸ்கூல் நிறுவனங்களோடு இணைக்கப்பட்டது.
1918 இல் நான்கு லட்சம் ரூபாய் போபால் பாய்ஸ் ஸ்கூலுக்கு மானியம் ஒதுக்கப்பட்டது.
1900 இல் அவரது மூன்றாவது மகன் ஹமீதுல்லாஹ் மூலம் ஹமீதியா நூலகத்தை திறந்து வைத்தார். போபால் மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய, முனைப்படுத்தக்கூடிய முக்கியமான இடமாக அந்த நூலகம் விளங்கியது.
இதுவல்லாமல் அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் மேற்கண்ட பாடசாலைகளைத் தவிர அரசின் உதவி பெற்ற ஆறு பொதுப் பள்ளிகள் இருந்தன.
City Sanskrit Pathshala,
the Jain Digambar Pathshala,
the Jain Shwetambar Pathshala,
the Kanya Vidyalaya
the Sehore Kanya Pathshala
சுல்தான் ஜஹான் பேகம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் வேந்தர் ஆவார். பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் போன்ற சர்வதேச நாடுகளோடு தொடர்பில் இருந்தார்.
தெற்காசிய முஸ்லீம் சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக பிரிட்டிஷாருடன் சுமூக நிலையை கையாண்டார்.

பெண் கல்வி மற்றும் சமூக மேம்பாடு காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு ஒரு சர்வதேச முகமாக இருக்கிறார்.
போபால் அவர்களது ஆட்சி காலத்தில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் படிப்படியாக வளர்ச்சியை போபால் கண்டது.
லஞ்சத்தை ஒழிப்பதில் பெரும் முனைப்பு காட்டினார். அரசு பணியாளர்கள் அன்பளிப்பு பெறுவதை தடை செய்தார்கள்.
நிதி வருவாயை பெருக்க மாடரேட் செட்டில் மெண்ட் (எல்லோரும் சமமாக நிலம் பெறும்) திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்திய ஆட்சியாளர் சுல்தான் ஜஹான் பேகம். இதற்காக அனுபவம் வாய்ந்த திறமையுள்ளவர்களை பிரிட்டிஷ் அரசிடமிருந்து தருவித்துக் கொண்டார்கள்.
வஜீரின் கீழ் இருந்த பொறுப்பை இரண்டாகப் பிரித்து நீதி துறையையும், லெஜிஸ்லடிவாக வும் பிரித்தார். இது அவர்களின் மாநில நிர்வாகத்தில் செய்யப்பட்ட பெரும் சாதனையாகும்.
மோசமான நிலையில் இருந்த நிதி நிர்வாகத்தை சீரான நிலைக்கு கொண்டு வந்தார். அவர்கள் சொல்வது போல் கருவூலம் காலியாக இருந்த நிலையில் நான் பதவி ஏற்றேன். ஆனால் எனக்குப் பின் ஆட்சிக்கு வருபவருக்கு அந்த நிலை இல்லை என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்.

வணிகம் மற்றும் தொழில்துறைய ஊக்கபடுத்த சுங்க வரியை குறைத்தார்.
கலைத்துறை மற்றும் தொழில் துறையை ஊக்கப்படுத்த புதிய கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். குறைந்த கால இடைவெளியில் தொழில் துறை கண்காட்சியை தொடர்ந்து நடத்தினார்கள்.
அவர்களது ஆட்சி கலாத்தில் போபால் முனிசிபாலிட்டி தேந்தெடுக்கப்பட்ட நவீனத்துவம் பெற்றதாக ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் அர்ப்பணிப்புடன் அதிக கவனம் செலுத்தினார்.
அவர்களது காலத்தில் பொதுப் பணித்துறை மிகச் சிறப்பான செல்வச் செழிப்புடைய துறையாக இருந்தது. பொதுத்துறை மூலம் புதிய புதிய கலை நயமிக்க அழகிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. அவைகள் போபாலை பொலிவுடன் விளங்கச் செய்தது.
மருத்துவத்துறை அவர்களது காலத்தில் முழுவதுமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
சட்டத்துக்கு புறம்பான மக்களுக்கு ஆபத்துளை விளைவிக்கும் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தடுப்பதற்கு புதிதாக மெடிகல் ரிஜிஸ்ட்ரேஷன் ஆக்ட் கொண்டு வரப்பட்டது.
லேடி மிண்டோ நர்சிங் ஸ்கூல் உருவாக்கப்பட்டது. அதில் பேறு கால பணியியல் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் திறன் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் உருவானார்கள். மேலும் குழந்தை நல காப்பகம் உருவாக்கப்பட்டது. நகரங்கள் தோறும் மருந்தகங்கள் அதிகரிக்கப்பட்டது.
சுகாதார அலுவலர்கல் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டனர்.
அவர்களது சுற்றுப் பயணங்களில் விருப்பத்துடன் கிராமப் பெண்களை சந்தித்து அவர்களோடு உரையாடக்கூடியவர்களாக இருந்தார்.
நேர்மையான, உண்மையாக பணி செய்யும் அதிகாரிகளை ஊக்கப்படுத்த சம்பளத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் அல்லது அவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறார்.
மக்களை மத இன அடையாளங்களுடம் பாகுபடுத்திப் பார்த்தார்கள் என்ற வரலாற்றுக் குறிப்போ அல்லது ஒரு சின்ன தகவலோ கூட சுல்தான் ஜஹான் பேகம் குறித்து இல்லை.

1926இல் பதவியைத் துறந்து தனது கடைசி மகன் ஹமிதுல்லா கானிடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 71 வயதில் இறந்தார். பேகம்ஸ் ஆஃப் போபால் என்றழைக்கப்படும் பாட்டி, அம்மா, மகள் கைகுஸ்ரா ஜஹானின் ஆட்சிக் காலத்தில் அனைத்து மதப் பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
கைகுஸ்ரா ஜஹானின் அரண்மனையான சதார் மன்ஸிலில்தான் போபால் மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது.

sark1922இல் சட்டப்பேரவை கவுன்சில், மேலவை ஆகிய வற்றை உருவாக்கியதுடன், நகராட்சிகளுக்குத் தேர்தலையும் நடத்தியுள்ளார்.
1911இல் லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் அரசர் அய்ந்தாம் ஜார்ஜ் பதவியேற்பு நிகழ்வில் அவர் பங்கேற்றிருக்கிறார்.
பொது சுகாதாரம். பரவலான தடுப்பூசி மருந்துத் திட்டம், அரசு நீர் விநியோகம், சுகாதாரம் - தூய்மைக்கான தரத்தை மேம்படுத்துதல் என மக்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டினார்.

1903 இல் ஒரு நவீன நகராட்சி நிறுவப்பட்டது 1903 அவர் கட்டிய சதார் மன்சில் (தற்போது போபால் மாநகராட்சி நிறுவனத்தின் தலைமையகமாக செயல்படுகிறது.
அவருடைய ஒரு அரண்மனை Qaser-e-Sultani, Ahmedabad Palace இப்போது கௌரவமான Saifia கல்லூரி செயல்படுகிறது. இது போபால் நகரத்தின் பழமையான கல்வி நிறுவனம்.
கிங் ஜார்ஜ்ஸ் மருத்துவமனை அவரால் கட்டப்பட்டது. இன்று, இது போபால் பிரதான அரசாங்க மருத்துவமனை ஆகும். இப்போது அது ஹமீடியா மருத்துவமனை என அழைக்கப்படுகிறது.
நீதிமன்றங்களை நிறுவினார். ஜுடிசியல் கவுன்சிலை நிறுவினார். சட்டப்பேரவை, மேலவை ஏற்படுத்தினார். தனக்கு சீர்திருத்த ஆலோசனை வழங்கும் மாநில கவுன்சில் உருவாக்கினார்.
அவர் எங்கே பயணம் செய்தாலும் புர்கா அணிந்தே சென்றார்.