வரலாறு திரும்புகிறது...!

இந்தியா...!

1206 - 1857 வரை - 651 ஆண்டுகள் முஸ்லிம் இந்தியா

1857 - 1947 வரை - 90 ஆண்டுகள் பிரிட்டீஸ் இந்தியா

1947 - இன்று வரை - 66 ஆண்டுகள் குடியரசு இந்தியா

ஒரு சமூகத்தின் பாரம்பர்யம் பண்பாடு அவர்களின் வாழ்வியல் கட்டமைப்புகள் அவர்கள்

ஆண்டாண்டு காலமாக உருவாக்கியுள்ள அதன் வழக்காறுகள் ஆகியவற்றில் மூடநம்பிக்கை

அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத வழக்கங்கள் என்று சான்றுகளோடு அறியப்படுகின்றவற்றை

தவிர வேறு எதையும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளக்கூடாது.

மனித வாழ்வின் உயர்ந்த நாகரீகத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் உதவிடக்கூடிய ஒரு

கருத்தாக்கத்தை ஒரு கொள்கையை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

எல்லோராலும் செயல்படுத்த கூடியதும் அல்ல. முஸ்லிம் சமூகம் தனது உயிரினும் உயர்வானதாக

போற்றிப் பாதுகாக்க வேண்டிய தங்களின் கல்வி முறையை அதன் கட்டமைப்புகளை

மாற்றிக்கொண்டது தான் பிரிட்டீஸ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் முஸ்லிம்கள் மிக

கீழான நிலைக்குச் சென்றதற்கான அடிப்படைக் காரணம்.

பிரிட்டீஸ் இந்தியாவிலாவது முஸ்லிம்கள் தங்கள் உயிரிணும் மேலான மார்க்க கல்வியை

ஓரளவிற்கு பயின்றிட முடிந்தது. ஆனால் குடியரசு இந்தியாவில் தங்களது கல்வி முறை

பாரம்பர்யம் என்னவென்றே தெரியாத இரண்டு தலைமுறை உருவாகி வந்துவிட்டது.

1857க்கு முன்பு முஸ்லிம் இந்தியாவின் கல்வி நிறுவனமான மதரஸாக்களில் அல்லாஹ்வின்

வார்த்தைகளான அல்குர்ஆனைப் படித்து நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் வழிமுறைகளை

படித்து அன்றைய ஆட்சி அதிகாரத்திற்கு தேவையான உலகியல் கருத்தாக்கங்களையும் நிர்வாக

நுட்பங்களையும் படித்து பண்புள்ள பட்டதாரிகளாக முஸ்லிம்கள் உருவாகிவந்தனர். ஆனால்

பெருகி வந்த அன்றைய உலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும், அதன் பிடி

யூத, நஸரானிகளிடம் சிக்கிய ஆபத்துக்களையும் அன்றைய முஸ்லிம் சமூகம் அவ்வளவாக

கவனத்தில் கொள்ளவில்லை.

இதனால் 1857 இல் இந்திய முஸ்லிம்களின் கல்விமுறை அதன் கட்டமைப்புகள் அனைத்தும்

நவீன தொழில் நுட்பத்தின் துனையோடு பிரிட்டீஸாரால் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள்

கொண்டு சிதைக்கப்பட்டது.

அதை மீட்டெடுக்கும் முயற்சியில் முஸ்லிம் சமூகம் இறங்கியபோது பிரிட்டீஸாரின்

நெருக்கடி காரணமாக இஸ்லாமியக் கல்வியின் வடிவமும் அதன் பாரம்பரிய குணமும் சிதைந்து

குற்றுருயிரும் குலையுருமாக மீட்கப்படப்டது.

பல அறிஞர்கள் முயன்றும் முஸ்லிம் இந்தியாவில் இருந்தது போன்ற அதன் முழுமையான

வடிவத்திற்கு இஸ்லாமிய கல்வியை மீட்டெடுக்க முடியவில்லை.

இந்தியா விடுதலை அடைகின்றபோது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி

பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் என்று உருவானதால் இந்திய முஸ்லிம்கள் மக்கள் தொகையில்

சிறுபான்மை மக்களாக ஆக்கப்பட்டனர்.சமூகநீதி முரசு 2 ஏப்ரல் 2013

1950 - குடியரசு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கல்விமுறை இந்திய முஸ்லிம்களின்

பாரம்பர்யக் கல்வி முறையை மேலும் சிதைத்தது. ஹைதராபாத் நகரம் மற்றும் கேரளா

போன்ற ஒரு சில மாநிலங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களது பாரம்பர்யக் கல்வி முறையைக்

காத்துக் கொண்டனர்.

ஆனால் தமிழகம் போன்ற பெருவாரியான மாநிலங்களில் முஸ்லிம்கள் தங்களது பாரம்பர்யக்

கல்வியிலிருந்து மாறி குடியரசு இந்தியா அறிமுகம் செய்த "மதச்சார்பற்ற கல்வி" என்ற போலி

முகத்துடன் கூடிய "காவி" கல்வி முறைக்கு அடிமையாகிவிட்டனர்.

இன்றைய நிலையில் 95 விழுக்காடு தமிழக முஸ்லிம்கள் இஸ்லாமிய வாடையே இல்லாத

"குஃப்ரையும்", பணம் மட்டும் சாம்பாதிப்பதற்கான வழிமுறையைக் கொண்ட மேற்கத்திய

கல்வியையும் மட்டுமே பயின்று வருகின்றனர். அவற்றை நவீன தொழில் நுட்பத்துடன் ஜிகினா

வேலை காட்டி கற்றுத் தரும் பள்ளி, கல்லூரிகளில் சேர்த்து தங்கள் குழந்தைகளை படிக்க

வைப்பதை பெருமையாக கருதுகின்றனர். இந்த ஜிகினா வேலையை முஸ்லிம்கள் சிலரும்

செய்கின்றனர்.

நாரோடு சேர்ந்த பூமாலையும் நாறி அந்த நாற்றம் குடலைப் புரட்டுகிறது.

மார்க்கக் கல்வியோடு உலகத்தையும் கற்றுத்தேர வேண்டிய முஸ்லிம்கள் மாதச் சம்பளத்தை

மையப்படுத்தி கல்வி பயிலும் முட்டாள் தனம் இன்று மூர்க்கமாக நடைபெறுகிறது. கல்வியின்

கருப்பொருளை பொக்கிஷமாக (அல்குர்ஆன், நபிமொழி) தன் கையிலேயே வைத்துள்ள முஸ்லிம்

சமூகம் தன் நிலை மறந்து இந்த தரங்கெட்ட கல்வி முறையில் சிக்கிக் கொண்டுள்ளது.

ஆனால் சமீபகாலமாக, அல்லாஹ் மாற்றத்திற்கான வெளிச்சத்தை ஏற்படுத்தி வருகிறான்.

முஸ்லிம்களின் உயிரின் உயிரான பாரம்பரியக் கல்வியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய

அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களின் முயற்சிக்கு பிரம்மிக்க தக்க வெற்றியை

இந்தியா முழுவதும் இறைவன் தந்து வருகின்றான்.

பாரம்பர்ய மதரஸாக்கள் :

பாரம்பர்யக் கல்விமுறையை மீட்டெடுக்கும் வடிவமாக இஸ்லாமியப் பாடங்களோடு உலக

வரலாறு, சமகால நிகழ்வு உள்ளிட்ட சமச்சீர் பாடங்களை தரமாக பயிற்றுவிக்கும் மதரஸாக்கள்

தமிழகத்தில் பெருகி வருகின்றன. அவற்றில் மாணவர்கள் எண்ணிக்கை நிரம்பி வழிகின்றன.

அறிவியல் பாடங்கள் இல்லையென்ற ஒரு குறையைத் தவிர இந்த மதரஸாக்களில் வேறு பெரிய

குறைகள் இல்லை. அது கூட விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். இந்த கல்விமுறை தான்

1857க்கு முன்பு "முஸ்லிம் இந்தியா" மதரஸாகளில் நடைமுறையில் இருந்தது என்பது வரலாற்று

உண்மை. 1400 ஆண்டு காலமாக உலக இஸ்லாமியப் பேரரசுகள் கட்டிக்காத்த கல்வி முறையும்

இது தான்.

இந்த பாரம்பர்ய மதரஸாக்களை அதிகமாக உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு, சமூக

ஆர்வலர்கள் இஸ்லாமிய அமைப்புகள் கல்வியாளர்கள் ஜமாஅத்துக்கள் கடுமையாக உழைத்திட

வேண்டும்.

இந்த மதரஸாக்களில் தற்சமயம் இஸ்லாத்தோடு இணைந்து உலகியல் அறிவையும் கற்றுவரும்

இந்த உயர்வகை மாணவர்களின் எதிர்கால அறிவுத்தேடல் ஆய்வுப்பணி மற்றும் வாழ்வியல்

தேடல் போன்றவற்றிக்கு முஸ்லிம் சமூகம் குறைந்த அளவு உத்திரவாதம் (விவீஸீவீனீuனீ நிuணீக்ஷீணீஸீtமீமீ)

அளித்திட வேண்டும் .

மூத்த உலமாக்கள் மற்றும் முஸ்லிம் சமூக அறிவு ஜீவிகள் இத்தகைய மதரஸாக்களில்

தன்னார்வத்தோடு சென்று மாணவர்களுக்கு மார்க்க நுனுக்கத்தையும் சமூக, உலக

நடைமுறைகளையும் கற்றுத்தந்து முஸ்லிம் சமூகத்தின் மையக் கேந்திரமாக விளங்கும் சமூகநீதி முரசு 3 ஏப்ரல் 2013

பள்ளிவாசலின் இமாமத் சேவைக்கு இவர்களில் ஆர்வமுள்ளவர்களை தயார்படுத்திட

வேண்டும்.

நம்பிக்கையும் நேர்மையும் மிக்க மாணவர்களை உருவாக்கும் இந்த மதரஸாக்களில் தொழில்

நிறுவனங்களை நடத்தும் முஸ்லிம் தனவந்தர்கள் சென்று தங்களது தொழில் மற்றும் உழைப்பு

சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு இன்றைய தொழில் நிறுவனங்களுக்கு

எந்தத் தகுதியுடன் கூடிய நிர்வாக வல்லுனர்கள் தேவை என்பதையும் அந்த மாணவர்களுக்கு

பயிற்றுவிக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், நிர்வாகவியல் பாடத்தை கற்பிக்கும் இந்த

மதரஸாக்களோடு இணைந்திருந்தால் அவற்றிலிருந்து ஆற்றல் மிக்க நிர்வாக வல்லுநர்கள்

உருவாவர்கள். அதன் மூலம் முஸ்லிம்களின் தொழில் துறை வளர்ச்சியடையும். அதேபோல

இந்த மதரஸாக்களில் பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் ஆய்வு நிலை

(பிஹச்டி) வரை எட்ட வேண்டும் என்பதை இந்த மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களுக்கு

முறையாக வழிகாட்ட வேண்டும்.

இஸ்லாமிக் நர்ஸரி பிரைமரி ஸ்கூல்:

முஸ்லிம்களின் பாரம்பரியக் கல்வியை மீட்டெடுக்கும் மற்றுமொரு வடிவம் தான் இன்று

பெருகிவரும் இஸ்லாமிய நர்ஸரி - பிரைமரி பள்ளிக் கூடங்கள். 4 வயது முதல் அல்குர்ஆனை

ஆரம்ப அறிவாக பெற்று இஸ்லாமிய கலாச்சார சூழலில் சமச்சீர்கல்வி, சிஙிஷிணி,

மிநிசிஷிசி போன்ற பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை

முஸ்லிம் முஹல்லா தோறும் உருவாக்க கல்வி ஆர்வலர்கள் முன்வர வேண்டும் இத்தகைய

பள்ளிக்கூடங்களில் 6ம் வகுப்பிற்கு பிறகு பெண்களுக்கு என்று தனிப்பள்ளிக்கூடங்கள்

அமைக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகம் இருபாலர் பள்ளிக் கூடங்கள் அறவே புறக்கணிக்க

வேண்டும்.

இஸ்லாமியக் கல்வி இணைக்கப்பட்ட பெண்கள் கல்லூரி:

பாரம்பர்யக் கல்வியை மீட்டெடுக்கும் மற்றுமொரு வடிவம் தான் இஸ்லாமிய பாடங்கள்

இணைக்கப்பட்ட பெண்கள் கல்லூரிகள். தற்போது தமிழகத்தில் திருச்சி, அம்மாப்பட்டினம்,

கீழக்கரை, மேலப்பாளையம், பள்ளபட்டி போன்ற இடங்களில் அமைந்துள்ளது.

3 ஆண்டுகள் கலை அறிவியல் பட்டப்படிப்போடு "முபல்லிஹா" பட்டமும் வழங்கப்படுகிறது.

12 ம் வகுப்பு முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு இவை தான் ஹலாலான கல்வி நிறுவனங்கள்.

இப்படிப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மூலம் உருவாக உள்ள தலைமுறை தான்

சிறந்த இஸ்லாமிய தலைமுறை.

இந்தக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெரும் மாணவிகளை உயர்கல்வியில் ஆசிரியைப்

பணியை மையப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். அதன் மூலம் பெருகி வரும் நமது

இஸ்லாமிய நர்ஸரி - பிரைமரி பள்ளிக் கூடங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆசிரியை

பற்றாக்குறையை போக்க முடியும்.

இந்த பாரம்பர்ய மதரஸாக்கள்...!

இந்த இஸ்லாமிக் நர்ஸரி பிரைமரி பள்ளிக் கூடங்கள்!

இந்த இஸ்லாமியக் கல்வி இணைக்கப்பட்ட பெண்கள் கலை அறிவியல் கல்லூரிகள் ...!

இவைகளில் இருந்து தான் இன்ஷா அல்லாஹ் நாளைய முஸ்லிம் தலைமுறை உருவாகப்

போகிறது. இவர்கள் தான் நாளைய தமிழக முஸ்லிம் சமூகத்தின் முகவரி. இவர்களிலிருந்து

தான் மார்க்க -சமூகத்தலைமை உருவாகப் போகின்றது. நமது சமூகத்தின் நமது நாட்டின்

அனைத்து பிரச்சினைகளையும் இஸ்லாமியக் கண் கொண்டு பார்க்கப் போகும் முஸ்லிம் அறிவு சமூகநீதி முரசு 4 ஏப்ரல் 2013

ஜீவிகள் இவர்களிலிருந்து தான் உருவாகப் போகின்றானர்.

இந்த நிலை முழுமையாக உருவாக (இன்ஷா அல்லாஹ்) 100 அல்லது 200 ஆண்டுகள்

ஆகலாம். இறைவன் நாடினால் 2200 ஆம் ஆண்டு வாழப்போகும் தமிழக முஸ்லிம் தலைமுறை

1857க்கு முன்பு "முஸ்லிம் இந்தியா"வில் இருந்த கல்வி முறை போன்ற முழுமையான

இஸ்லாமியக்கல்விப் பாதையில் பயணிப்பார்கள்.

தற்சமயம் குடியரசு இந்தியாவில் பாதை மாறியுள்ள முஸ்லிம்களின் கல்விப் பாதையை

மேலே குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களை அமைத்து மீண்டும் ஆகுமாக்கப்பட்ட பாதைக்கு

மாற்றிக் கொள்ளவேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தது.

"முஸ்லிம் இந்தியா"வில் வாழ்ந்த முஸ்லிம்களும் "பிரிட்டீஸ் இந்தியா"வில் வாழ்ந்த

முஸ்லிம்களும் "குடியரசு இந்தியா"வில் வாழும் நாமும் இனி எதிர் காலத்தில்...............

இந்தியாவில் ? வாழப் போகும் முஸ்லிம்களும் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் வர உள்ள

மறுமையில் சந்தித்து வரலாற்றில் நடந்தவற்றைப் பேசி மகிழலாம்.