தமிழும் உறவுகளும்...

ஒரு மனிதனின் தாய்மொழிக்கு அவனது வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை இருக்கிறது. அதிலும் உலக மொழிகளில் தமிழைப் போன்று மனிதனின் மனதோடு பேசும் மொழிகள் மிக மிகக் குறைவு. 

 அன்பு பாசம் காதல் இரக்கம் கெஞ்சல் கொஞ்சல் இவற்றை தனது உள்ளம் விரும்புகின்ற வகையில் அல்லது அதற்கும் மேலாக தனக்கு உரிமையுள்ளவர்களிடம் அல்லது தனக்கு விருப்பமானவர்களிடம் வெளிப்படுத்துவதற்கு தமிழின் உயிருள்ள உயர்ந்த பொருளுடைய அழகிய சொற்களே ஒருவனுக்கு துணை செய்கிறது.

அழகான ஆழமான கருத்தாழமிக்க இனிமையான நல்லதமிழ் சொற்கள் நம்மிடையே புழக்கத்தில் இருந்தபோது அது மனித உறவுகளில் நேசத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

கொஞ்சி விளையாடுவதற்கு கொட்டித் தீர்ப்பதற்கு உறவிற்கு ஏற்றார் போல வயதிற்கு ஏற்றார் போல உணர்ச்சிகளுக்கு ஏற்றார் போல வார்த்தைகள் ஆயிரம் உண்டு.

கிராமிய மனம் கொண்ட வட்டார வழக்காக இருந்தாலும் தாலாட்டுப் பாடல்களில் ததும்பி நின்ற தமிழால் தன் பிள்ளைகளை கொஞ்சி மகிழ்ந்தாள் தாய். 

ஒரு தாய் தாலாட்டு மூலம் தமிழை தன் கலாச்சாரத்தை அந்த குழந்தையை படைத்து அவளுக்கு பரிசாக வழங்கிய சத்தியமும் நித்திய ஜீவனுமாகிய அல்லாஹ்வை தொட்டில் பருவத்திலேயே தனது குழந்தையின் பிஞ்சு உள்ளத்தில் ஊடுருவச் செய்தாள் தாய்.

கணவன் தனது அன்பை அழகை ஆதரவை அங்கீகரித்து அழகிய சொற்களில் தன்னை கண்ணியப்படுத்துவதை அவன் காதல் வயப்பட்டு தன்னை வர்ணிப்பதை மிகப்பெரும் இன்பமாக கருதுபவள் பெண்.

என்னவனே என் வாழ்வு என்று அவனுள் அவள் கரைந்து போவதற்கு அவளோடு அவன் பேசும் அழகிய தமிழ் சொற்களும் அந்த சொற்களில் புதைந்து கிடக்கும் அன்புச்சுரங்கமும் மிக முக்கிய காரணியாக அல்லாஹ் படைத்துள்ளான்.

இப்படி தமிழ் நமது உயிரோடு உள்ளத்தோடு இரண்டறக் கலந்து மனதிற்கு அமைதியை அளிக்கும் அருமருந்தாக திகழ்ந்தது. இன்று அந்த இன்பத்தை நாம் இழந்து வருகிறோம். 

நல்லதமிழ் சொற்களை படிக்காமல் அதை சரியாக உச்சரித்து பழகாமல் படித்தவர்களாக பட்டதாரிகளாக வந்துள்ள இன்றைய தலைமுறை. தனது உள்ளத்தின் இன்ப ஊற்றுகளை அதன் காரம் மனம் குணம் குறையாமல் வெளிப்படுத்தத் தெரியாதவர்களாக பேசத் தெரிந்த ஊமைகளாக மாறிப்போய் விட்டது. 

மனித வாழ்வின் எதார்த்தம் குறித்து பயிற்றுவிக்காத இன்றைய கோரமான முதலாளித்துவ கல்வி முறையால் உறவுகளில் நெருக்கம் இல்லாமல் ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு குடும்பங்களில் விரிசல் ஏற்பட்டு வறன்டு கிடக்கிறது சமூகம்.

தாய்மொழி அல்லாத வேறு எந்த மொழியிலும் தனது ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை சரியான வடிவத்தில் வெளிபடுத்திவிட இயலாது. தமிழின் இன்பத்தை பருகாமல் குடும்ப வாழ்வில் வசந்தத்தை எட்ட இயலாது. தமிழை படிப்பது இன்பமாக வாழ்வதற்கு.

வேலைக்கு அல்ல. 

- CMN SALEEM