ரமளானே!

ramzan-kareem-wallpapersரமளானே! இந்த உலகத்தின் பிஸியான மனிதர்களில்...

நானும் ஒருபாவியாய்உன்னை வரவேற்கத்தவறிவிட்டேன்  ...

ரமளானே! 70  மடங்குநன்மைகள்கொண்டுவருகிறாய் ஆனால் பணத்தின் மீதுள்ள மோகத்தால் எனக்கு உன் மகிமைதெரியவில்லை.

ரமழானே ...

ஆயிரம் வருடங்களின் அமல்கள் கொண்டுவருகிறாய்...

எனது நெஞ்சு நிரம்பிய உலகத்து பேராசைகள் அதனை மறைத்து என்னை குருடாக்கி விட்டது

ரமழானே ...

நஞ்சுவடியும்நாவுகளோடு, சீரழிந்தசெயல்களோடுஎன் எத்தனையோரமழான்கள்... கடந்துவிட்டன...

ரமளானே! நீ ஒரு நெருப்பாய் என் நெஞ்சுக்குள் நீ நடந்து போகவேண்டும்..

முடிவில் என் பாவங்கள் பொசுங்கி உன்னுடைய பகல் பொழுதில் என் வயிறு வெறுமையானது போல வாழும் நாட்கள் முழுதும் எனது உள்ளம் வெறுமையாகி கருணையாளன் அல்லாஹ்வின் வேதவரிகளால் நிரப்பப்பட வேண்டும்.

இந்த வருடமேனும் என் ரஹ்மானின் நெருக்கத்தில் என்னை இழந்து நான் அவன் விரும்பும் செயல்களை செய்யும் பிண்டமாக மாற வேண்டும்.

அவன் விரும்பும் உயிராய், உடலாய் உன் கல்புகுளிர உன்னில் நணைய வேண்டும் – பின் நீ என்னை கடந்து போவாய் நீ ஏற்படுத்திய அழியா அடையாளங்களோடு நான்!

ரஹ்மானின் விருப்பங்கள் எனது ஆசைகளாய்! ரஹ்மானுக்கு வெறுப்பானவைகள் எனக்கும் வெறுப்பானவைகளாய்!

ரஹ்மானின் சிக்னலுக்கு ஏற்ப இயங்கும் ஒரு இயந்திரமாய்

வாழும் நாட்கள் முழுதும்!

ஜன்னத்தைநோக்கியதாகஎன்ஜனனம்!