மால்கம் எக்ஸ் ரஹ்…

lost-malcolm-x-speech-found-Malcolm-Burnley-brown-university

மால்கம் எக்ஸ் என்று அறியப்பட்ட மாலிக் அல் ஷாபாஸ் அவர்கள் மறக்க முடியாத ஆளுமை. மே 19,1925 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். தோலின் நிறம் கருப்பு என்ற காரணத்தால் “கருப்பர்கள்” என்று இழிவாய் கருதப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்த அவருக்கு இளமைப் பருவத்தில் பல தடுமாற்றங்களுக்குப் பின்னால் இஸ்லாத்தின் அறிமுகம் கிடைத்தது. அன்று முதல் தனது சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்காக குரல் கொடுத்தார். அவரது பேச்சு கேட்போரை வசீகரித்து அவரின் பக்கம் ஈர்த்தது. தனது வேர்களைக்

கண்டறிந்து கருப்பர்களை ஆஃப்ரிக்க தேசத்திலிருந்து கடத்தி வந்த வெள்ளை இனத்துக்கு எதிரான அவரது குரல் கேட்டு எண்ணற்ற கருப்பின மக்கள் அவர் பின்னால் நின்றார்கள். அவர்தான் “தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது ” என்று முதலில் முழங்கியவர். படிப்படியான அவரது வளர்ச்சி அமெரிக்க அரசாங்கத்திற்கு பெரும் கவலையாக மாறியது. ஆதலால் அமெரிக்கா ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவரைப் பற்றிய செய்தியைச் சேகரித்தது. பலமுறை கொலை செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. இறுதியாக 1965 ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் ஒரு அரங்கில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கியின் குண்டுகள் பதினாறு முறை பாய்ந்து மால்கம் எக்ஸ் அவர்களின் உயிரைக் குடித்தது. அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அவருக்கு சுவனத்தை வழங்குவானாக... ஆமீன். 1963 ஆம் ஆண்டின் இறுதியில் மக்காவுக்கு ஹஜ்ஜுப் பயணம் சென்றார். அங்கு மன்னர்கள் முதல் சாமான்ய மக்கள் வரை பல நிற, மொழி, தேசத்து மக்களைச் சந்தித்தார். அவர்களது அன்பும், அரவணைப்பும் அவரை நெகிழ வைத்தது. அதுவரை இஸ்லாத்தை வெள்ளையர்களை எதிர்ப்பதற்கான வழிமுறையாக கையாண்டு வந்த மால்கம் எக்ஸ் இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவ, சமத்துவ வாழ்க்கை நெறி என்பதை உணர்ந்தார். நிற, மொழி, தேச வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒரே அணியில் இஸ்லாத்தின் கீழ் திரள வேண்டும் என்று அமெரிக்க வெள்ளையர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அந்த மடலின் தமிழ் வடிவமே இது.malcolm-x-mohammed-ali

“வேதங்களிலும் நபிமார்களான இப்ராஹீம் (அலை), முஹம்மது (ஸல்) ஆகியோரின் நிலமாகிய இந்த புனிதமிக்க மக்கா மாநகரான பண்டைய நகரகத்தில் நாம் காண்பது போன்ற - பல்வேறுபட்ட நிறம் மற்றும் இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு மத்தியில் நேர்மையான விருந்தோம்பல் மற்றும் - உணர்வுப்பூர்வமான சகோதரத்துவம் பேணப்படுவதை வேறு எங்கும் காண முடிவதில்லை.
.
நான் புனித நகரம் மக்காவை தரிசிக்கும் அருட்பேறு பெற்றேன். கஅபாவை ஏழு முறை வலம் வந்தேன். ஜம்ஜம் கிணற்றிலிருந்து நீரறுந்தினேன். சஃபா மற்றும் மர்வா குன்றுகளுக்கிடையே ஏழுமுறை ஓடினேன். மினா என்னும் பழம்பெரும் நகரத்தில் தொழுதேன். மேலும் அரஃபா பெரு வெளியில் தொழுதேன்.

உலகெங்கிலுமிருந்து லடசக்கணக்கான புனித யாத்ரீகர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்களில் நீல நிறக்கண்களுடைய வெளிர் நிற மக்கள் முதல் கருப்புத் தோல் கொண்ட ஆஃப்ரிக்கர்கள் வரை எல்லா இன மக்களும் குழுமியிருந்தனர். ஆனால் நாங்கள் எல்லோருமே ஒரு கிரியையில் (செயலில்) ஈடுபட்டோம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் மாண்புகளை உணர்த்தி அதை வெளிக்காட்டியவர்களாக!

என்னுடைய அனுபவத்தில் அமெரிக்காவில் ஒரு வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையில் இப்படி ஒரு நிலை இருக்க சாத்தியமில்லை. அமெரிக்கா இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்! இந்த இஸ்லாம்தான் மனித சமூகத்தின் இனவாதப் பிணியை அழிக்கக் கூடியதாக இருக்கிறது. அமெரிக்காவில் வெள்ளையரெனக் கருதப்படுபவர்களை அங்கு சந்தித்தேன், உரையாடினேன். மேலும் அவர்களோடு அமர்ந்து உணவருந்தினேன். அவர்களது “வெள்ளைத்துவம்” என்ற சிந்தனை இஸ்லாமிய தீனால் அவர்களது மனோபாவத்திலிருந்து அழிக்கப்பட்டிருந்தது. எல்லா நிறத்தவர்களுக்கிடையிலும் இப்படிப்பட்டதொரு நேர்மையான மற்றும் உண்மையான சகோதரத்துவத்தை வேறு எங்கும் காணமுடியாது.kamali photo file 25

என்னிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஆனால் இந்த யாத்திரை என்னுடைய சிந்தனை வழிமுறைகளை மாற்றி அமைத்து எனது முந்தைய முடிவுகளில் சிலவற்றைத் தள்ளி வைத்திருக்கிறது. இது எனக்கு சிரமமானதாக இல்லை. ஏனெனில் எவ்வளவுதான் என்னுடைய முடிவுகள் உறுதியாக இருந்திருந்தாலும், எப்பொழுதும் நான் உண்மைகளை சந்திக்க முயலும் மனிதனாகவும் வாழ்வினுடைய எதார்த்தத்தையும் அதன் புதிய அனுபவங்கள் அவிழ்க்கக்கூடிய புதிய ஞானங்களையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவனாகவே இருக்கிறேன். உண்மைகளுக்கான தேடலில் அவசியமான நெகிழ்வுத்தன்மையை அதற்கு முன் நிபந்தனையான திறந்த மனதுடன் இருக்கிறேன்.

முஸ்லிம் உலகில் இருந்த இந்த பதினோறு நாட்களில் நீலத்துக்கெல்லாம் நீலமான கண்களைக் கொண்ட, தும்பைப் பூ போன்ற வெள்ளை வெளேரென நிறம் படைத்த சகோதர முஸ்லிம்களுடன் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே குவளையில் குடித்து, ஒரே விரிப்பில் உறங்கினேன். ஒரே இறைவனை வணங்கினேன். மேலும் அந்த சிகப்பு நிற முஸ்லிம்களின் சொல்லிலும், செயலிலும் இருந்த நேர்மையை நைஜீரியா, சூடான் மற்றும் கானா தேசத்து முஸ்லிம்களிடமும் உணர்ந்தேன்.

நாங்கள் எல்லோரும் சமமானவர்களே! ஏனெனில் அவர்களது ஓரிறை நம்பிக்கை “வெள்ளத்துவத்தை” அவர்களது மனதிலிருந்து நீக்கியிருந்தது, அவர்களது செயல்பாடுகளிலிருந்து நீக்கியிருந்தது, அவர்களது மனப்பாங்கிலிருந்து நீக்கியிருந்தது.
இதிலிருந்து எனக்கொன்று புலனாகிறது : அமெரிக்கர்கள் இறைவனின் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களானால் அவர்கள் மனிதனின் ஒருமைத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடும். அதனால் அவர்கள் நிற வித்தியாசத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை அடையாளப்படுத்துவதை, தொந்தரவு செய்வதை, துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்வார்கள்.
இனவெறியானது அமெரிக்காவை குணப்படுத்த முடியாத கேன்சரைப் போன்று அழித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தப் பேரழிவை தீர்ப்பதற்கு நிரூபிக்கப்பட்ட ஒரு தீர்வு இருக்கிறது. ‘கிறிஸ்தவ’ வெள்ளை அறிஞர்கள் அதை மனம் திறந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால், இனவாதத்தால் ஜெர்மெனியில் மக்கள் அழிக்கப்பட்டது போன்ற ஒரு பேரழிவிலிருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற முடியும்.
இந்தப் புனித நிலத்தில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும், அமெரிக்காவில் வெள்ளை மற்றும் கருப்பு இன மக்களுக்கிடையிலான பிரச்சினையைக் குறித்து ஒரு ஆன்மீக ரீதியான ஞானம் என்னுள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு அமெரிக்க கருப்பரை அவர் கொண்டிருக்கும் இனத்துவேசத்தைக் கொண்டு குற்றப்படுத்த முடியாது. ஏனெனில் அமெரிக்க வெள்ளையர்களின் நானூறு ஆண்டு கால சுய நினைவுடன் கூடிய இனவெறியின் எதிர்வினைதான் அது. ஆனால் இனவெறி தற்கொலைப் பாதைக்கு அமெரிக்காவை இட்டுச் செல்லும் போது வெள்ளை இன இளைஞர்கள் - அவர்களுடனான எனது உரையாடலின் மூலம் நான் புரிந்து கொண்டதன் படி விளைவுகளைப் பார்த்து - அவர்களில் பெரும்பாலானோர் சத்திய ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். அந்தப் பாதைதான் அமெரிக்காவை அது சந்திக்கவிருக்கும் இனவாதப் பேரழிவிலிருந்துதது.martin-luther-king-and-malcolm-x1-thumb-290x388-19778tumblr kyrbdj3HDK1qaexg6o1 500

எப்பொழுதும் நான் இது போன்று பெருமைப்பட்டதில்லை. எப்பொழுதும் நான் கீழ்மையாகவும், மதிப்பற்றவனாகவும் உணர்ந்ததில்லை. ஒரு அமெரிக்க நீக்ரோவான என் மீது பொழியப்பட்ட இஸ்லாத்தின் ஆசிர்வாதங்களை யார் நம்புவார்கள்? சில இரவுகளுக்கு முன் அமெரிக்காவில் வசிக்கும் வெள்ளையரும், ஐ.நா. சபை ராஜ தந்திரியும், ராஜாங்க தூதரும், அரபு நாட்டு மன்னரின் நண்பருமான முஸ்லிம் ஒருவர், எனக்கு அவரது ஓட்டல் அறையை ஒதுக்கித் தந்தார். இத்தகைய கண்ணியங்களுக்குச் சொந்தக்காரனாக நான் ஆகுவேன் என்று ஒரு போதும் நான் எண்ணியது கிடையாது. அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்தினருக்குச் செய்யப்படும் கண்ணியங்கள் எதுவும் ஒரு நீக்ரோவுக்குக் கிடைக்காது! ஆனால் இஸ்லாமியச் சமூகத்தில் கண்ணியம் எல்லோருக்கும் பொதுவானது!