சேலத்தில் "நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் " சிறப்பு நிகழ்ச்சி

இந்தியாவில் அதிகாரமிக்க சமூகமாக முஸ்லிம்கள் உருவாவது குறித்துமான வழிகாட்டி கருத்தரங்கம் "நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் " என்ற நிகழ்ச்சி 02.09.2018 அன்று சேலத்தில் நடைபெற்றது.

அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அடுத்தடுத்த காலங்களில் உலகில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்தும் அரபுலகில் உருவாகி வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்தும் சமூகநீதி முரசு ஆசிரியர் சி.எம்.என்.சலீம் அவர்கள் தனது உரையில் படக்காட்சிகளாக விவரித்தார்.