மஹாராஷ்டிராவில் 2 சீட் வென்ற MIM

uvai      தனக்காக பரிந்து பேசும் குரல் எங்கிருந்து வந்தாலும் அந்த திசை நோக்கி ஓடும் மனநிலையில்தான் இந்திய முஸ்லிம்கள் இருக்கிறார்கள். 11.06.2014 அன்று இந்திய பாராளுமன்றத்தில்: பல்வேறு இனங்களும் மதங்களும் மொழிகளும் பண்பாடுகளும் சேர்ந்து வாழ்கின்ற பன்மைச் சமூகத்தன்மையும்தான் இந்த நாட்டின் அடையாளமாக, பாரம்பர்யமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இந்த அவையில் பிரதிபலித்துள்ளதா? முஸ்லிம்களை equal partnersகளாக ஆக்கிக் கொள்வோம் என்று சொல்கின்றீர்கள். சமமான பங்குதாரர்களாய் முஸ்லிம்களை எப்படி ஆக்கப் போகின்றீர்கள்?
நான் இங்கு இஹ்ஸான் ஜஃப்ரியின் மகனாக வந்திருக்கின்றேன்.
நான் இங்கு இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கின்றேன்.
நான் இங்கு முஹ்சின் சாதிக்கின் சித்தப்பாவாக வந்துள்ளேன். நான் இங்கு குஜராத் இனப் படுகொலையின்போது உயிரைப் பறிகொடுத்த அபலைகளின் சார்பாக நிற்கின்றேன்.
“நான் இங்கே குரல்கொடுக்க முடியாதவர்களின் குரலாக நிற்கின்றேன்”
அந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?" என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாய் ஒரு நீதிக் குரல் ஒலித்த போது ஒட்டு மொத்த இந்தியாவும் அவரை திரும்பிப் பார்த்தது முஸ்லிம்கள் தங்கள் குரல் பாரளுமன்றத்தில் ஒலிப்பதாகவே நினைத்தனர் அவர் அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அஸதுத்தீன் உவைஸி.
அவரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் : ஆறு முறை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் சலாஹுதீன் உவைசியின் மகன்தான் அஸதுத்தீன் உவைஸி. 1969 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி பிறந்தார். ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் B.A பட்டம் பெற்று மேற்படிப்பிற்காக லண்டன் சென்று அங்கு LLB படித்து வழக்குரைஞரானார். 1994ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1999ல் நடந்த அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவருடைய தந்தையின் தந்தை அப்துல் வாஹித் உவைசி, அடுத்து இவரின் தந்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அரசியல் கட்சியில் 2009ஆம் ஆண்டிலிருந்து தலைவராக இருக்கிறார். இத்திஹாத் கட்சிக்கு ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஏழு எம்எல்ஏக்களும் ஒரு எம்பியும் உள்னனர். இதுவரை ஆந்திராவின் ஹைதராபாத் பகுதிகளில் மட்டும் தேர்தலில் பங்கு பெற்ற MIM முதன் முறையாக சென்ற மாதம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 24 வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த அமைப்பின் சார்பில் அவுரங்கபாத் மத்திய தொகுதியில் போட்டியிட்ட இம்தியாஸ் ஜலீல் மற்றும் பைகுல்லா பகுதியில் போட்டியிட்ட வாரிஸ் யூசுப் பதான் ஆகியோர் எதிர்கட்சியினரின் பலம் வாய்ந்த வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி பெற்றனர். மேலும் மூன்று தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் ஒன்பது தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக மின்னல் வேக பிரச்சாரம் மேற்கொண்டார் அஸதுத்தீன் உவைசி. மூன்று தலித் கட்சிகளின் ஒத்துழைப்பும், அனல் பறக்கும் பிரச்சாரங்களும் இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது..
owaisi 6uvai  மஹாராஷ்ட்ராவில் எம் ஐ எம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. வெற்றிக்குப் பின்னர் அசதுத்தீன் உவைசி இது ஆரம்பம் மட்டுமே! என பத்திரிகையாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மஹாராஷ்ட்ராவைத் தொடர்ந்து கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் தமது அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தங்களுடைய கட்சியை விரிவுபடுத்தி வரும் எம் ஐ எம் கட்சி அவர்கள் மீது வைக்கப்படுகிற சில குற்றச்சாட்டுகளை, உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களை அந்தக் கட்சி தவிர்க்க வேண்டும், அது மாதிரியான பேச்சுக்கள் எதிரிகளுக்குத்தான் வாய்ப்பாக அமையும். எனவே முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியாக மட்டும் இல்லாமல் அனைத்து இந்தியர்களை அரவணைத்துச் செல்கிற கட்சியாக அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியை வளர்ப்பது அதன் தலைவர் அஸதுத்தீன் உவைஸி அவர்களின் கடமையும் பொறுப்புமாகும்.