சீனாவின் வளர்ச்சியைக் கண்டு அச்சப்படுகிறதா அமெரிக்கா?

ஆ.மு. பெரோஸ்
வழக்கறிஞர், உயர்நீதி மன்றம், சென்னை.

கடந்த மே மாதத்தில் (2018) சீனாவின் தலைநகரான பீஜிங்கில் சீன துணை அதிபர் லீயோ ஹி மற்றும் சீனா நாட்டின் பொருளாதார பிரதிநிதிகளோடு அமெரிக்காவின் பொருளாதார தலைமைச் செயலாளர் ஸ்டீவன் நுஷின், தலைமை வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லயிட்சர், வணிகச்செயலாளர் வில்பர் ரோஸ் உட்பட ஏழு பேர் கொண்டஉயர்மட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு திரும்பியிருக்கிறார்கள்.
இந்த இரு நாட்டு பேச்சுவார்த்தை என்பது அரசியலிலோ, பண்பாட்டுக் கூறுகளிலோ முன்னேற்றம் காணும் ஆலோசனைஅன்று. மாறாக ஆசியாவில் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய வல்லரசான சீனாவுக்கும் சர்வாதிகாரம் கொண்டு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே நடந்து வரும் பொருளாதாரப் பனிப்போரை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வுக்கு கொண்டுவரவும், பொருளாதார ஆதிக்கப் பகிர்வுக்காகவும் நடந்த நிகழ்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மேட் இன் சீனா 2025
2015 ஆம் ஆண்டு சீன அதிபர் அதிரடியான ஒருதிட்டத்தை சீன பாராளுமன்றத்தில் பிரகடனம் செய்தார். அதாவதுநாட்டின் சீரான, நிலையான பொருளா தாரத்தை உருவாக்க “மேட் இன் சீனா 2025‘‘ திட்டம்தான் அது. குறிப்பாக பத்து துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் முழு கவனத்தையும் செலுத்தி அதன் மூலமாக பொருளாதார தன்னிறைவும், உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தவும் தீட்டப்பட்ட செயல் திட்டம் அது.
செய்தி பரிமாற்றத்தில் புதிய தொழில்நுட்பம், வானுர்தி மற்றும் அது சார்ந்த உபரித் துறை, அதிநவீன சரக்கு கப்பல்கள் உருவாக்கம், அதிநவீன தொடர் வண்டி உருவாக்கம், மின்
உற்பத்தி, மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்குத் தேவையான தொழில் வளர்ச்சி, விவசாயத்தை மேம்படுத்தும் கருவி கள் உருவாக்கம், அதிநவீன தொழில்துறை இயந்திரங்கள் உருவாக்கம் போன்ற துறைகளை வலிமைப்படுத்தி நாட்டின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியின் முகமாக தன்னை உறுதிப்படுத்தி சர்வதேச வணிகத்தில் காலூன்றவும், உலகச் சந்தையில் தனித்துவம் பெறவும் முழுவீச்சில் முயற்சித்து வருகிறது சீனா. தற்போது, 6.9% ஆக இருக்கும் உள்நாட்டு உற்பத்தியளவை (GDP) வேகமாக உயர்த்தவும் முனைப்புக் காட்டி வருகிறது.
சீனாவின் “மேட் இன் சீனா 2025‘‘ திட்டத்தால் உலகப்பொருளாதாரத்தில் தனது ஆதிக்கம் சறுகும் என்பதை நன்றாகதெரிந்து கொண்டு தற்போது அந்த திட்டத்தை கைவிடுமாறு சீனாவை மறைமுகமாக வற்புறுத்துகிறது அமெரிக்கா. அதன் ஒரு முகமாக அமெரிக்கச் சந்தைக்கு வரும் 1,300 சீனாபொருட்களின் மீது 25% வரி விதிக்க முடிவு செய்தது. குறிப்பாக தொழில்நுட்ப ரோபட்கள் மற்றும் உபரி இயந்திரங்களின் மீது வரிகளை அதிகரிக்க முனைப்பு காட்டியது அமெரிக்கா.
அதற்குப் பதிலாக தடாலடியான முறையில்
அடுத்த நாளே சீனாவும் அமெரிக்கப் பொருட்களின் மீது 25% வரி விதிக்கப் போவதாக அறிவித்தது. விமான தொழில்நுட்ப உபரிப் பொருட்கள், வாகன உபரிப் பொருட்கள் மற்றும் சாயப் பொருட்களான சோயா பீன்ஸ் போன்ற 106 அமெரிக்கப் பொருட்கள் மீது வரி போடப்படும் என சீனா அமெரிக்காவை திருப்பி அடித்தது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் “நம் நாட்டு வசாயிகள் மற்றும்உற்பத்தியாளர்களை பாதிக்கும் விதமாக சீனா நடந்துவருகிறது“ என புலம்பினார். இப்படி இரு நாடுகளிடையே நிலவி வந்த வர்த்தகப் பனிப்போரை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் நிர்வாகம் முன்வந்தது.
பீஜிங் வட்டாரங்கள் ஆரம்பத்தில் பேச்சு வார்த்தை நடத்த விரும்பாமல் நழுவி வந்த நிலையில் ஒரு வழியாக கடந்த மே மாதம் ஒரு சந்திப்புக்கு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து பீஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். மே 3 ஆம் தேதி ஸ்டீஃபன் நுஷின் பேட்டியாளர்களை சந்திக்கும் போது பேச்சுவார்த்தை வெற்றியாக அமையும் என தெரிவித்துச் சென்றார்.
பாரம்பரியமான பட்டுச் சாலையை(Silk Road) பலப்படுத்தும் சீனா

சீனப் பிரதேசத்தை ஹான் சாம்ரஜ்ஜியம் ஆட்சி செய்த காலம் முதல் (கி.மு 114 – கி.பி 1450) வெளி உலகத்தோடு வணிகம் செய்ய ஒரு சிறந்த வழியாக சில்க் ரோடு சீனாவுக்கு அமைந்திருந்தது.ஆசியாவுடன் ஐரோப்பாவையும், ஆப்ரிக்காவையும், அரேபிய தீபகற்பத்தையும் இணைக்கும் விதமாக அது அமையப் பெற்றிருந்தது. இந்தியா,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கஸகஸ்தான்என பல்வேறு உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தது அப்போதைய சீனப் பேரரசு.
பட்டுச்சாலையை பல நூற்றாண்டுகளாக பல பிராந்தியங்களுக்கு இடையே பல்வேறு கலாச்சாரத் தொடர்புகளுக்கு மையமாக இருந்தது. தற்போது சீனா தனது வணிகப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் மீண்டும் பட்டுச் சாலையை (ஷிவீறீளீ ஸிஷீணீபீ) வலுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
அதன் சில முயற்சிகள் :-
2013 இல் கஸகஸ்தானில் பேசிய சீன அதிபர் “we shold take an innovative approach and jointly build and economical belt along silk road“ அதாவது நாம் புதிய யுக்திகளை கையாண்டும், இணைந்தும் பொருளாதார இணைப்பை பட்டு வழிச் சாலை மூலமாக பலப்படுத்திக் கட்டியெழுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இந்தோனிசிய அரசுடன் வணிக ரீதியாகப் பேச்சுவார்த்தை நடுத்தி விட்டு, அவர் பேசுகையில் “the two ‡ide‡ ‡hold work together to bîild îp a new maritime ‡ilk road in the 21 centîry“ 21ஆம் நூற்றாண்டின் புதிய கடல்வழி பட்டுச்சாலையை கட்டி எழுப்ப வேண்டும். வணிக வளர்ச்சியடையும் பொருட்டு இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்“ எனப் பேசியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வரும் சீனா 2001 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் கவாடர் என்னும் இடத்தில் துறைமுகத்தை கட்டித் தர ஒப்புக் கொண்டது. இந்தஆண்டின் இறுதிக்குள் (2018) அதன் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.chii
முன்னதாகவே சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் நீளமான காரக்கோரம் நெடுஞ்சாலை பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இரு நாட்டு வணிகர்களும் பயனடைந்துவருகிறார்கள். பாரம்பரிய பட்டுச்
சாலையை மீண்டும் சீரமைக்க சீன அரசு அதிதீவிரம் காட்டி வருகிறது. 60 நாடுகளுடன் இதற்கான ஒப்பந்தங்களையும் செய்திருக்கிறது. இலங்கையில் 1.5 பில்லியன் டாலர் செலவில் துறைமுகம் அமைத்துக் கொடுத்து அதற்குப் பகரமாக 99 ஆண்டுகள் அதை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. தற்சார்பு பொருளாதார நிலையை கடைப்பிடித்து வரும் சீனாவின் செயல்பாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கலங்கடிக்கவே செய்திருக்கிறது.
தொடர் குற்றச்சாட்டு!
தொடர்ந்து சர்வதேச வர்த்தக சட்டங்களையும், மரபுகளையும் கடைப்பிடிக்காமல் ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார அச்சுறுத்தலை சீனா ஏற்படுத்தி வருகிறது என மெரிக்கா மனம்போன போக்கில் நாட்டாமை கருத்துகளை தெரிவித்து தனது எரிச்சலை வெளிப்படுத்தி வருகிறது.
அதன் கூட்டாளியான ஐரோப்பிய ஐக்கியம் சீனாவை “A di‡torte ‡tate rîn economy“ என சொல்லியிருக்கிறது. அதாவது, “சிதைக்கப் பட்ட நாடு செயல்படுத்தும் பொருளாதாரம்“ என்று சீனாவின் பொருளாதார பரவலை விமர்சிக்கிறது. உலக நாடுகளின் மீது தன்னுடைய பொருளா தார ஆதிக்கத்தை விட்டு விடவும், இழக்கவும் தயாராக இல்லாத அமெரிக்க முதலாளியம் வர்த்தகப் பனிப்போரின் மூலமாக சீனாவை பனிய வைக்க முடியாமல் கட்டப்பஞ்சாயத் திற்கு அழைத்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்பதுதான் இந்த மொத்த செயல்பாடுகளின் சாரம். ஒட்டுமொத்த உலகை மிரட்டியும்; பிற நாடுகளை சுரண்டியும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி உத்தமர்போல வேடமிட்டு காட்டிவரும் அமெரிக்கா மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுகிறதோ என்ற ஐயப்பாடும் நமக்கு எழுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்த லுக்கும் அழுத்தத்திற்கும அடிபணியாமல் போனால் வரும் காலங்களில் பொருளாதார ஆதிக்க மையமாக சீனா மாற அதிக வாய்ப்புண்டு.