125 ஆண்டுகள் ஆகியும் கிடைக்காத சமூகம்

உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை முதலில் நியூசிலாந்தில்தான் வழங்கப்பட்டது. செப்டம்பர் 19, 1893 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தேர்தல் சட்டம், 21 வயது நிரம்பிய நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கியது. இந்தச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து அந்நாட்டில் போராட்டங்கள் நடந்து வந்தன. 30 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற 1893 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற பேரணி ஒன்றுதான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் கட்டாயத்தை அது உருவாக்கியது.1893 ஆம் ஆண்டு முதல் வாக்குரிமை கிடைத்து விட்டாலும் 1919 ஆம் ஆண்டுதான் பெண்கள் தேர்தலில் போட்டியிட முடிந்தது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் தற்போது ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் 400 பெண்கள் பங்கேற்றனர். நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இதில் கலந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான ஊதிய வேறுபாடு பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் 9 சதவிகிதம் வேறுபாடு இருப்பதை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். பிரசவத்திற்குப் பிறகு அதே பணியில் தொடர்வது சாத்தியமற்றதாகி வருகிறது என்றும், பெண்களில் மாற்றுத் திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள் இது போன்று பல்வேறு துறைகளில் பிரச்சனைகள் இருப்பதாகக் கருத்து தெரிவித்த பலரும், 125 ஆண்டுகள் ஆகியும் முழுமையான சமத்துவம் கிட்டி விடவில்லை என்றார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் பெண்களின் நிலை குறித்து படிப்பவர்களுக்கு பெரும் பாடம் இருக்கிறது.