அறிவியலின்பாதை……….

அறிவியலின்பாதை……….

   - அறிவுப்பசிக்குத்தீனிபோடும்புதியதொடர்

காமயம்.சேக்முஜீபுர்ரகுமான்

 அறிவியல் கடந்து வந்த பாதையையும், அறிவியலின் திசைவழியையும் அரிமாநோக்கில் சுருக்கமாக தொகுத்து வழங்கும் புதிய தொடர் இது.

 அறிவியலின் வரலாற்றை நாம் திரும்பிப்பார்க்கும் போது,

அதில்மைல் கற்களாக நிற்கும் அறிஞர்கள் ஏராளம். அப்படிப்பட்ட அறிஞர்களின் வழியே அறிவியல் கடந்து வந்தபாதையையும், அதன் வளர்ச்சியையும் வரலாற்றையும் இந்தத் தொடர் வழியாகப் பார்க்க இருக்கிறோம்.

அறிவியல் என்பது ஆதி மனிதர்களிடமிருந்தே தொடங்குவது தான். இருப்பினும் கூட அறிவியலின் வரலாற்றை எழுதமுனைபவர்கள்புராதனகிரேக்கத்திலிருந்தேதொடங்குகிறார்கள். காரணம், கிரேக்கஅறிஞர்கள்தான்முதன்முதலில்அறிவியல்தொடர்பானபதிவுகளைஆவணப்படுத்தியவர்கள். அறிவைத்தொகுத்து(தகவலாய்) வழங்கியவர்கள்என்றவகையில்,

அறிவியலின்வரலாற்றில்அவர்களேமுதலிடம்பெறுகிறார்கள். அந்தவகையி்ல்முதல்அறிவியல்அறிஞராகஇடம்பெறுபவர்தேல்ஸ்.

தேலீஸ்என்றும், தேலஸ்என்றும், மிலேட்டஸ்என்றஊரில்பிறந்ததால், ஊர்ப்பெயருடன்சேர்த்து "தேல்ஸ்ஆஃப்மிலட்டெஸ்" (Thales of Miletus) என்றும்இவர்அழைக்கப்படுகிறார்.

thelss

தேல்ஸ், கி.மு. 7ம்நூற்றாண்டைச்சேர்ந்தகிரேக்கமேதை. சாக்ரட்டீஸ்காலத்திற்கும்முந்தியவர். புராதனகிரேக்கஉலகின் 7 மாமேதைகளி்ல்ஒருவர். கிரேக்கப்பாரம்பரியத்தின்முதல்தத்துவஞானிஎனஇவரைக்குறிப்பிடுகிறார்அரிஸ்டாட்டில். மேற்கத்தியதத்துவஞானம்என்பதுதேல்ஸிடம்இருந்துதொடங்குவதாகதற்காலஅறிஞர்களும்கூறுகின்றனர். இவர்கட்டுக்கதைகள் எதனையும்துணைக்குஅழைக்காமல், இயற்கைநிகழ்ச்சிகளைஅவற்றின்உள்ளார்ந்தகூறுகளைக்கொண்டுவிளக்குவதற்குமுதன்முதலில்முயற்சிமேற்கொண்டவர்தேல்ஸ்என்பதுதான்அறிவியலின்வரலாற்றில்அவருக்குஉள்ளதனிச்சிறப்பாகக்கருதப்படுகிறது. இந்தவகையில்முறைப்படியானஅறிவியலுக்குவித்திட்டவர்எனஅவரைக்கூறுவதுஉண்டு. பொதுக்கோட்பாடுகள் (general principles) என்பதைமுதல்முதலில்வரையறுத்தவர், கருதுகோள்கள் (hypotheses) என்பதற்குதொடக்கம்அமைத்தவர்என்றவகையில், "அறிவியலின்தந்தை" என்றும்தேல்ஸைபுகழ்கின்றனர்.

thel

பிரமிடுகளின்உயரம், கரையிலிருந்துகப்பல்நிற்கும்தூரம்போன்றவற்றைகண்டறிவதற்குவடிவியலைபயன்படுத்தியவர். வடிவியலின்புகழ்பெற்றதேல்ஸ்தேற்றம் (Thales' Theorem). இவரதுபெயராலேயேவழங்கப்படுகிறது. கணிதத்தில்ஒருகண்டுபிடிப்புஒருதனிமனிதரின்பெயரைத்தாங்கிநிற்கும்வரலாறு

தேல்ஸிடமிருந்துதான்தொடங்குகிறது. காந்தவியல், மின்னியல்ஆகியவற்றின்வரலாறுகளும்தேல்ஸிடமிருந்தேதொடங்குகின்றன. அவரதுபிறப்புவளர்ப்புபற்றியசிலசுவையானதகவல்களைமுதலில்பார்த்துவிடுவோம்.

தேல்ஸின்பிறப்பும், வளர்ப்பும்

 

கி.மு.624-ல், இன்றையதுருக்கியின்அய்டின்மாகாணம்அமைந்துள்ளபகுதியில், மிலேட்டஸ்என்றநகரில்பிறந்தார், தேல்ஸ். மிலேட்டஸ்என்பதுசிற்றாசியாவின்மேற்குக்கரையில்அமைந்திருந்தபுராதனகிரேக்கநகரமாகும். தேல்ஸின்வாழ்க்கைபற்றியபோதியவிவரங்கள்கிடைக்கவில்லை. இருப்பினும்சிலசம்பவங்களின்அடிப்படையில், அவரதுவரலாற்றுக்காலம்கணிக்கப்படுகிறது.

கிமு 5-ம்நூற்றாண்டைச்சேர்ந்தவரலாற்றாசிரியர்ஹெரோடோடஸின்கூற்றுப்படி, தேல்ஸ்ஒருமுறைசூரியகிரகணத்தைமிகச்சரியாகமுன்கணிப்புச்செய்தவர். கிமு 585-ம்ஆண்டுமே 28-ம்தேதிநடைபெற்றசூரியகிரகணத்தைதேல்ஸ்முன்கணிப்புசெய்ததாக, இன்றையநவீன  வானியலின்துணைகொண்டு, அறியப்படுகிறது. இந்தகணிப்புசரியாகஅமைந்ததால், 5 ஆண்டுகளாகநடைபெற்றஒருபோர்முடிவுக்குவந்ததாகஒருபதிவுஉண்டு.

கி.பி. 3-ம்நூற்றாண்டைச்சேர்ந்தடயோஜீன்ஸ்லாரிடஸ்என்றவரலாற்றாசிரியர்கூற்றுப்படி, ஃபினீஷியபிரபுக்குலத்தைச்சேர்ந்தபெற்றோருக்குபிறந்தவர்தேல்ஸ். இவர்திருமணம்செய்துகொண்டார், திருமணமேசெய்துகொள்ளவில்லைஎன்றும்இருவிதகருத்துகள்நிலவுகின்றன. இளமையிலேயேதிருமணம்செய்துகொள்வதுகாலத்தேமுந்தியதாகிவிடும், வயதுமுதிர்ந்தபிறகுதிருமணம்செய்வதுகாலங்கடந்ததாகிவிடும்என்று, தமதுதாயாரிடம்சமாதானம்கூறி, தேல்ஸ்திருமணத்தைத்தட்டிக்கழித்துவிட்டார்என்றொருகதைஉண்டு. இவர்எந்தநூலும்எழுதவில்லைஎன்றும், எழுதியநூல்கள்எதுவும்எஞ்சவில்லைஎன்றும்இருவிதமாகக்கூறப்படுகிறது. இவர்எழுதியநூல்கள்எதுவும்நமக்குக்கிடைக்கவில்லை.

தேல்ஸ்சிந்தனையாளர்மட்டுமல்ல, வெற்றிகரமானவணிகர்+அரசியல்வாதி. ஒருகுறிப்பிட்டஆண்டில், பருவநிலையும், விளைச்சலும்சிறப்பாகஇருக்கும்என்பதைமுன்கூட்டியேகணித்து, ஆலிவ்எண்ணெய்செக்குகள்அனைத்தையும்முன்பதிவுசெய்தார்என்றும், பின்னர்அவற்றைநல்லவாடகைக்குவிட்டுகாசுபார்த்தார்என்றும்ஒருசெய்திஉண்டு. இதன்மூலம்செல்வந்தர்ஆவதுஅல்ல, தத்துவஞானம்என்பதுஎல்லாவகையிலும்பயனுள்ளதுஎன்பதைநிரூபிப்பதுதான்தேல்ஸின்நோக்கம்என்கிறார், அரிஸ்டாட்டில்.

தேல்ஸின்காலகட்டத்திலும்தத்துவஞானம்என்பதுவாழ்க்கைக்குப்பயன்படாதுஎன்றகருத்தேநிலவியதுபோலும். கிரேக்கநகரஅரசுகளாகப்பிரிந்துகிடந்தவற்றைஒன்றிணைத்துஅயோனியாஎன்றஒரேஅரசாகஉருவாக்கவேண்டும்என்றுஅரசியலில்ஆலோசனைகூறியவர்தேல்ஸ்என்பதும்ஹெரோடோடசின்பதிவுதான்.

எகிப்தில்விரிவானபயணங்கள்மேற்கொண்டவர்தேல்ஸ். அங்கிருந்துதான்வானியல்மற்றும்வடிவகணிதஅறிவைப்பெற்றார்என்றுகருதப்படுகிறது. இவர்ஒருகடலோடியும்கூட. உலகில்உள்ளஅனைத்தும்நீரால்ஆனவைஎன்றார். பூமிஎன்பதுநீரில்மிதக்கும்ஒருதட்டுஎன்றுகருதினார். அலைகளால்பூமிஅலைக்கழிக்கப்படும்போதுநிலநடுக்கம்உருவாகிறதுஎன்றார். பொருள்கள்அனைத்திற்கும்உயிர்இருக்கிறதுஎன்றுகருதினார்.

ஆடுமேய்க்கும்சிறுவர்கள்மூலம், மக்னேசியாஎன்றகிரேக்கநகரில்கிடைத்த, இரும்பைஈர்க்கும்கல்லைப்பற்றிக்கேள்விப்பட்டுஅதைக்கொண்டுவரச்செய்தார்தேல்ஸ். மக்னேசியாநகரத்தின்பெயரையேஅந்தக்கல்லுக்குச்சூட்டினார். அதனடிப்படையிலேயேகாந்தம்ஆங்கிலத்தில் "மேக்னெட்" என்றுஇன்றும்அழைக்கப்படுகிறது.magnets attracting.svg

காந்தக்கல்எப்படிஈர்க்கிறது, அதுஏன்இரும்பைமட்டும்ஈர்க்கவேண்டும்என்றுதேல்ஸ்ஆராய்ந்தார். மற்றபொருள்களுக்குஇதுபோன்றஈர்ப்புசக்திஇருக்கிறதாஎன்றும்அவர்ஆய்வுமேற்கொண்டார். ஒருவகைமரப்பிசின்பலகாலத்தி்ற்குப்பின்கெட்டிதட்டிப்போய்உருவாகும் "ஆம்பர்" என்றபொருளை, கம்பளியில்தேய்த்தபிறகுஅதுநூல், பருத்தி, பறவைஇறகு, உடைந்தமரத்துண்டுகளைஈர்த்ததுஎன்பதைக்கண்டார்.

கிரேக்கமொழியில்ஆம்பர்என்பதற்குஎலக்ட்ரான்என்றுபெயர். நவீனகாலத்தில்மின்னணுவிற்குஎலெக்ட்ரான்எனப்பெயர் வந்ததும்இந்தஅடிப்படையில்தான்.

மின்சாரத்தின்வரலாற்றைக்கூறும்நூல்கள்அனைத்தும்இந்தசம்பவத்தில்இருந்து, தேல்ஸின்பெயரைத்தொட்டுக் காட்டித்தான்தொடங்குகின்றன.

கடலின்மேற்பரப்பில்உள்ளநீர்த்திவலைகள்காற்றின்வாயிலாகஎடுத்துச்செல்லப்பட்டுநிலம்நோக்கிமழைத்துளியாய்விழுகின்றதுஎனநம்பினார், தேல்ஸ். சூரியனின்கோளஅளவைச்சொன்னவர், ஆண்டுக்கு 365 நாட்கள்எனவரையறுத்தவர்எனதாலஸ்பற்றிச்சொல்லப்படுபவைகறாரானவரலாற்றுச்செய்திகள்அல்ல. கிரேக்கத்தில் 58-வதுஒலிம்பிக்போட்டிகள்நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 78-வதுவயதில்தேல்ஸ்மரணமடைந்தார்என்பது, கி.பி. 3-ம்நூற்றாண்டைச்சேர்ந்தடயோஜீன்ஸ்லாரிடஸ்என்றவரலாற்றாசிரியரின்பதிவாகும்.