முதல் சிந்தனை

சமூக்கட்டுக்கோப்பு.

download

சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் இஸ்லாத்தின் எதிரிகளது பல சூழ்ச்சிளை முஸ்லிம் சமூகம் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாம் மிகுந்த

பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் சிறிய காரியங்களில் அளவுமீறி கவனம் செலுத்துவதால் பிளவுகள் அதிகரிக்கும். உடனடியாக கவனிக்கவேண்டிய, முதன்மைப்படுத்தவேண்டிய அம்சங்களுக்கவே நமது அதிகமான கால நேரங்களை ஒதுக்கவேண்டும். முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள் தம்மிடம் ஒப்படைகக்கப்பட்டுள்ள பொறுப்புகளை மிகச்சரியாக நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் பயங்கரமான முடிவுகளை சந்திக்கவேண்டியது வரும். நபி(ஸல்)அவர்கள்
``
எந்த ஓர் அடியானை அல்லாஹ் ஒரு சமூகத்தின் பொறுப்பாளனாக நியமித்து, அந்த அடியான் இறக்கும் நாளில் அந்த சமூகத்தை ஏமாற்றிவிட்டு இறந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குவான்``என்றார்கள்.
நூல் : முஸ்லிம்
பொறுப்புக்களை வகிப்பவர்களிடம்:-
1.
தக்வா
2.
ஆழ்ந்த சமூகப் பற்று
3.
பரந்த மனப்பாங்கு
4.
தியாகம்
5.
பிறரது கருத்துக்களுக்கு செவிமடுக்கும் தன்மை.போன்ற பண்புகள் கட்டாயத் தேவை.
பொது மக்களில் பலரைப் பொறுத்தவரை தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுவதன் அவசியம் பற்றியும் தலைவர்களை தேர்வு செய்வதில் கையாளப்பட வேண்டிய ஒழுங்குகள் பற்றியும் அறியாதிருக்கிறார்கள்.
எனவே, சமூக்கட்டுக்கோப்பை சிறந்த அடிப்படைகளின் மீது கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றி நாம் அனைவரும் தீவிரமாக சிந்திக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். வல்லா அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

எஸ்.ஹெச்.எம். ஃபழீல். பேராசிரியர் நளீமிய்யா மதரஸா, இலங்கை.