சவுதி அரேபியாவின் ஜிஸான் மாகாணம்

சவுதி அரேபியாவின் ஜிஸான் மாகாணம் கடும் வெப்பம் நிறைந்த பகுதி ஆனால் அங்கு ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. 
cmncmnsaleemcnmsaleemsaleem
மா, மல்லிகை, பப்பாளி, சோளம் போன்றவை விளைவிக்கப் படுகின்றன.

அந்த தோட்டங்களை பார்வையிடச் சென்றிருந்தோம்..... 

ஓரளவிற்கு விவசாயத்திற்கு ஏற்ற மண்.
நிலத்தடி நீரும் நன்றாக உள்ளன.

எங்களுக்கு தோட்டங்களை காட்டித்தந்த ஏமன் நாட்டைச்சேர்ந்த அப்துல்லா என்பவர் பாலை மண்ணில் விவசாயம் பார்க்கும் அற்புதமான அறிவைப் பெற்றவர்....

மேலும்..... மகரிப் நேரம் வந்தவுடன் அவரே இமாமத்தும் செய்தார்.முறைப்படி பயிற்சிபெற்ற ஆலிம் போல தொழுகை நடத்தினார்.

இதற்குப்பெயர் தான் கல்வி. (இஸ்லாமியக் கல்வி ) 

இறைவனின் அருள் நிறைந்த..... உலகிற்கு உணவளிக்கும் விவசாயத்தின் நுட்பத்தை அறிந்தவர்.....கூடவே மக்களுக்கு தொழ வைக்கும் அளவிற்கு இஸ்லாமிய அறிவையும் பெற்றவர்.

தமிழக முஸ்லிம்களின் கல்வியும் பயிற்சியும் இன்ஷா அல்லாஹ் இதுபோலத் தான் அமைய வேண்டும்.

இன்றைய முஸ்லிம்களிடம் இதில் ஒன்று இருந்தால் மற்றொண்டு இல்லை என்ற அளவிற்கு அறிவு ரீதியாக முடமாகிப் போய்விட்டோம். 
..........................

ஒவ்வொரு அனுபவமும் பல உண்மைகளை நினைவுபடுத்தும்.

முக்கனிகளில் ஒன்றான " மாங்காய்" யை அரபியில் " மங்காய் " என்று அழைக்கின்றனர்.தமிழ் மற்றும் அரபு மொழிகளுக்கிடையே ஏராளமான உறவுகள் இருக்கின்றன.

ஆய்வு செய்தால்..... முதல் இறைதூதர் ஆதம் ( அலை ) அவர்களுக்கும் இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களுக்கும் மொழி ரீதியான உறவுகளை கண்டறிய முடியும்