இஸ்லாமிய மழலையர் பள்ளிகள் குறித்த பயிலரங்கம்

akc3
இஸ்லாமிய மழலையர் பள்ளிகள் துவங்குவது குறித்த பயிலரங்கம்
அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில்
பிப்ரவரி 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது
சென்னை புதுக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் நாசர், பெங்களூரு DIET அறக்கட்டளையின் தலைவர் உமர் ஷரீஃப், காந்தி கிராம் பல்கலையின் கல்வியியல் துறை தலைவர் ஜாஹிதா பேகம்,மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மன்சூர், சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம், அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் தலைவர் ஷாஹிதா பானு ஆகியோர் பயிற்சியளித்தனர்
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கல்வியாளர்கள் இஸ்லாமியப்பள்ளிகளை
நடத்திவருபவர்கள் ஆசிரியர்கள் என்று அறிவுத்துறையில் திறன் வாய்ந்தவர்கள்..... உம்மத்தின் மீது அக்கறையுடைய பெருமக்கள் கலந்து கொண்டனர்

banu

சமூகத்தின் கல்வி முறையில் அவசரமாக அவசியமாக செய்ய வேண்டிய
பணிகளை அவர்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும் எங்களால் இயன்ற அளவு
கொண்டு சேர்த்துள்ளோம் இனி அவரவர் பிறந்த ஊரில் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்ட பள்ளிகளை உருவாக்கி....முஸ்லிம் சமூகத்தின் அறிவை ஹலாலாக மாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.