காலனியாதிக்கத்தால் இந்தியா இழந்தது?

Illuminati-Rothschild-british-loot-great-game-indiaலண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசியவர்கள், பிரிட்டன் ஆட்சியால் இந்தியாதான் பலன் அடைந்ததாக

தெரிவித்தனர். இதற்குப் பதில் அளித்துப் பேசிய சசி தரூர் அவர்களது உரையின் சுருக்கம் தான் கீழே நாம் வாசிக்க இருப்பவை.
காலனியாதிக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரச் சூழ்நிலைகள் மோசமடைந்தன என்பதே உண்மை. பிரிட்டன் ஆதிக்கவாதிகள் இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 23%. பிரிட்டன் நாட்டைவிட்டு வெளியேறியபோது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 4%. இதைவிடச் சான்று வேண்டுமா? பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும் தொழிற்புரட்சி, இந்தியத் தொழில் துறையை அழித்ததன் மூலமே உருவானது.
இந்தியாவின் பருத்தி உற்பத்தி நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு பிரிட்டன் பொருளாதாரம் வளர்ந்தது. கச்சாப் பொருட்களை இந்தியா
விலிருந்து கொள்ளை அடித்து பிரிட்டன் கொண்டுசென்று உற்பத்திசெய்து, ஆடைகளாக அவற்றை மீண்டும் இந்தியா விற்குக் கொண்டுவந்து விற்றது. இதன் மூலம் இந்தியாவைத் தன் சந்தையாக்கியது. இந்திய நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறினர், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளராகக் கோலோச்சிய இந்தியா, இறக்குமதி நாடானது. உலக பருத்தி ஏற்றுமதியில் 27% பங்களிப்பு செய்த இந்தியா வின் ஏற்றுமதி 2% ஆகக் குறைந்தது.
ராபர்ட் கிளைவ் இந்தியிலுள்ள ‘லூட்’ (கொள்ளை) எனும் சொல்லை ஆங்கில அகராதிக்கு அளித்தார். கூடவே கொள்ளை யிடும் பழக்கத்தையும் பிரிட்டனுக்கு அளித்தார்.
19 ஆம் நூற்றாண்டின் முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப் பெரிய கறவை மாடானது.
பிரிட்டிஷ் அரசு ஊழியர்களுக்கு நாம் பெரிய அளவில் சம்பளம் கொடுத்தோம், நம்மை அடக்குமுறைக்கு உட்படுத்த நாமே கொடுத்துக்கொண்ட சம்பளம் அது.
செல்வ வளம் கொழித்த இங்கிலாந்தின் செல்வந்தர்கள், அடிமைப் பொருளாதாரத்தின் மூலமே தங்களது செல்வங்களை ஈட்டியுள்ளனர். அடிமைப் பொருளாதாரம் மூலம் ஐந்தில் ஒரு பங்கு இங்கிலாந்து மக்கள் பணக்காரர்களானார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலப் பெரும்
பஞ்சத்துக்கு 1.5 கோடி முதல் 2.9 கோடி மக்கள் மடிந்தனர். வங்காள வறட்சிக்கு மட்டும் 40 லட்சம் மடிந்தனர். காரணம், வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடூரமான கொள்கைகள். இரண்டாம் உலகப் போரின்போது அத்தியா
வசியப் பொருட்கள் பிரிட்டன் ராணுவத்துக்
காகப் பதுக்கப்பட்டன. இதற்கான உத்தர
வைப் பிறப்பித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். மக்கள் இந்தியாவில் உணவின்றிச் செத்து மடிகின்றனர் என்று ஓரளவு ஈரமுள்ள பிரிட்டன் அதிகாரிகள் சர்ச்சிலுக்கு எழுதினார்கள். அந்தக் கோப்பின் விளிம்பில் சர்ச்சில் எழுதினார்: “ஏன் காந்தி இன்னும் சாகவில்லை?”
இங்கு எனக்கு முன்னால் பேசிய எதிர்த் தரப்பாளர் அடக்குமுறையையும், இழப்பை
யும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாது என்றார். பல உதாரணங்களில் ஒன்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் இரண்டாம் உலகப் போர்
காலகட்டத்தில் இந்தியா
விலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட் களின் மதிப்பு இன்றைய மதிப்பின்படி 8 பில்லியன் பவுண்டுகள்.
ஸ்காட்லாந்தை வறுமை யிலிருந்து மீட்க இந்தியாவில் செய்த சுரண்டல்களே உதவின.
காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டன் அரசு ரயில்
பாதைகளையும் சாலைகளை அமைத்ததைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகி
றார்கள். பிரிட்டனின் தொழில் துறைத் தேவைகளுக்காக, கொள்ளைக்காகக் கொண்டு
வரப்பட்டவைதான் ரயில்வேயும், சாலைக
ளுமே தவிர, உள்ளூர் மக்களின் பயன்பாடுக ளுக்காக அல்ல. கச்சாப் பொருட்களை உள்ளூ ரிலிருந்து துறைமுகத் துக்கு கொண்டுசெல்ல வேண்டும். அதற்காகவே போக்குவரத்து பெரிதும் பயன் பட்டது.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிபற்றிப் பேசப்படுகிறது. சித்ரவதைகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறைகள்ஞ் இப்படி 200 ஆண்டு காலம் ஓட்டிவிட்டு எல்லாம் முடிந்ததும் ‘ஜனநாயகம்‘ பற்றி எப்படிப் பேச முடிகிறது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டது. அதை நாங்கள் உங்களிடமிருந்து பறிக்கப் போராட வேண்டியதாக இருந்தது.
இவற்றையெல்லாம் மீறி பிரிட்டன், இந்தியாவுக்கு நிதியுதவி அளித்தது என்று பேசப்படுகிறது. ஆம் உதவி அளிக்கப்பட்டது. எவ்வளவு அளிக்கப்பட்டது? அந்த உதவியை எங்கள் உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட்டால், வெறும் 0.4%. நாங்கள் உரங்களுக்குக் கொடுக்கும் மானியம் மட்டும் இதைவிடப் பல மடங்கு அதிகமானது.
இதற்கெல்லாம் பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்றும் அதற்கான நிதி இழப்பீடு எவ்வளவு என்றெல்லாம் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. ஆனால், காலனியாதிக்க காலத்தில் எம் மக்கள் அனுபவித்த பயங்கரங்களுக்கு எந்தத் தொகை ஈடாகும்?
-... முத்து கிருஷ்ணன்