வீணாகும் பொருட்களின் மறுசுழற்சி மேலாண்மையியல்

Commercial-Waste-Management-Diagram1

WASTAGE MANAGEMENT
ஒரு குறிப்பிட்ட இடத்தை எடுத்துக்கொள்வோம். அங்கே சேருகின்ற குப்பைகளை வகைப்படுத்த வேண்டி இருக்கிறது என்று நினைப்பீர்கள். ஒவ்வொரு குப்பையும் என்ன வகையானது என்று பிரிக்க வேண்டும். அப்படிப் பிரிக்கப்பட்ட குப்பைகளை வகைக்கு ஏற்றபடி அப்புறப்படுத்த வேண்டும். மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். குப்பைகளின் அளவு கூடிக் கொண்டே தான் போகுமே தவிர குறையாது. எனவே இவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை எப்போதும் இருக்கும். குப்பையை எரித்து மின்சாரம், உரம் தயாரிப்பது போன்ற பல வேலைகளைச் செய்கிறோம்.
கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய குப்பைகளை, அவற்றின் வீரியத்தைக் குறைத்து வேறு வழிகளில் பயன்படுத்தப் பார்க்கிறோம். இந்தத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வளர்ந்து வரும் தேவைகளைக் கொண்டது என்பதால், வேலை வாய்ப்பும் அதிகமாகவே இருக்கும். குப்பைகள் புதுப்புது பிரச்சனைகளைக் கொண்டு வருவதால், அவற்றை கையாளவும் திறமையானவர்கள் தேவைப்படுகிறார்கள். வேலை வாய்ப்பு தொடர்ந்து அதிகரிக்கும்.
யாரெல்லாம் படிக்கலாம்?
நீங்கள் 10,+2 அளவிலேயே இந்தத் துறைக்குப் போவதாக முடிவு செய்து விட்டால் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எளிது. அறிவியல், புவியியல் பாடங்களை +2வில் எடுத்துப் படிப்பது பயனுள்ளது. பட்டப் படிப்பைச் சுற்றுச் சூழல் தொடர்பான பாடங்களில் முடிக்கலாம். பட்ட மேற்படிப்பும் சாத்தியமே. தொழில் நுட்பத்தின் முதுநிலை பட்டம் பெறவும் முடியும்.
பட்டயப் படிப்புப் படிப்பதானாலும் படிக்கலாம். இதே துறையில் சிறப்புப் பயிற்சி பெறும் வகையில் குறுகிய காலப் படிப்புகளையும் படிக்கலாம். என்ன வேலைக்குப் போகப் போகிறீர்கள் என்பதை வைத்துத் தேர்வு செய்யலாம். வேலை வாய்ப்பு அரசுத் துறையிலும் மாசு கட்டுப்பாடு அதிகாரியாகலாம். சுற்றுப்புறச் சூழல் விதிகள் கடுமையாக்கப்பட்டு இருப்பதால், பற்பல தொழிற்சாலைகளிலும் கழிவுகளைக் கவன மாகக் கையாளவேண்டி இருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள், முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. அங்கும் ஏராளமான வாளிணிப்பு இருக்கிறது. குப்பைகளைக் கையாள்வதையே தொழிலாகக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றிலும் வேலை பார்க்கலாம். சொந்தமாகவும் பல ஆட்களை வைத்து வேலை வாங்கலாம்.
எங்கு படிக்கலாம்?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் பலவற்றில் சுற்றுச் சூழல் தொடர்புடைய பாடங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர்ந்தும் படிக்கலாம். வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் பயிலலாம். தனிப்பட்ட தொழிற்சாலைகள் தங்கள் தேவைக்காக நடத்தும் சுற்றுச் சூழல் பயிற்சிப் பட்டறைகளிலும் கலந்து கொள்ளலாம்.
பலதுறைத் திறமை
நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் திறமை கொண்டவராக இருந்தால் இந்த துறையில் சிறப்பாக முன்னுக்கு வரலாம். சொந்தத் தொழிலிலும் கொடி கட்டிப் பறக்கலாம். அவசியம் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டிய துறை என்ற வகையில் இதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று உறுதிபடச் சொல்லலாம். மூலப் பொருள் உங்களுக்கு மலிவாகக் கிடைக்கப் போகிறது. அதை மறு சுழற்சி செய்து அதிக விலைக்கு விற்க முடியும். மூலப் பொருளை எப்படியாவது அப்புறப்படுத்தினாலே போதும் என்று தருவதற்குத் தயாராக இருப்பவர்கள் அதிகம். அவற்றை எல்லாம் கணக்குப் போட்டு இந்தத் துறையில் இறங்குங்கள்..
கழிவுகள் நிர்வாகம் தொடர்புடைய படிப்புகள், வாய்ப்புகள், கல்வி நிறுவனங்கள் பற்றி உங்களுக்குத் தேவைப்படும் குறிப்புகள்.
1. Waste Management M.Sc. B.Sc., Botany, Chemistry, 2 Yrs. University of Madras
Centenary Building Chepauk, Triplicane Po, Chennai, Tamil Nadu.