சவூதியில் 9 சீனர்கள் இஸ்லாத்தை தழுவினர் !

indonisha
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில்….
ஜித்தாவிலுள்ள பள்ளிவாசல் வாசலில் நிர்கதியாக படுத்துறங்கினோம். பள்ளிவாசல் இமாம் எங்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை, சாப்பிட்டீர்களா என்று கனிவுடன் கேட்டு எங்களை உபசரித்தார்.
இமாம் அவர்களின் கனிவு, முஸ்லிம்களின் ஒழுக்கமும் நேர்மையும் எங்களை இஸ்லாத்தை நேசிக்க தூண்டுதலாக அமைந்தது. இஸ்லாம் பற்றி ஆராய்ந்தோம், இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதை உணர்ந்து இஸ்லாத்தை எங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று கூறினர்.
இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பை கூட வைக்கக்கூடாது என்று சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சின்ஜியாங் மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம் ஊழியர்கள், முஸ்லிம் மாணவர்கள் நோன்பு நோற்கிறார்களா என்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் போடப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் கடமையை முஸ்லிம்கள் செயல்படுத்துவதற்கு கூட சீனாவில் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அதே சீனாவை சேர்ந்த மக்கள் நாளுக்கு நாள் இஸ்லாத்தை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.