தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு

தமிழ்நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக புட்டில் பால் புகட்டி வளர்ப்பத்தற்கு நாட்டுப் பசுவின் பால் பரவலாக பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் விளையும் சிறுதானியங்கள் வைக்கோல் தழைகள் முதலியவற்றை உண்டு நாட்டுப் பசுக்கள் பாலை பொழிந்தன. இந்தப் பால் தரமானதாக உடலுக்கு உரம் தந்து ஊறு விளையாத வண்ணம் இருந்தது. இந்தப் பாலை

அருந்தியவர்களுக்கு இன்று இருப்பது போன்று சர்க்கரை நோய், கல்லீரல் நோய், மாரடைப்பு, புற்று நோய் எதுவும் வரவில்லை. நீண்ட ஆயுளுடன் உடலுக்குத் தேவையான போதிய சுண்ணாம்புச் சத்து பெற்று இறக்கும் வரை கண் பார்வை மங்காமல் பல் விழாமல் இருந்தனர்.
நாட்டுப் பசுக்கள் உற்பத்திக்காக நாட்டுக் காளைகள் ஊர்தோறும் வளர்க்கப்பட்டன. காலப் போக்கில் ஒவ்வொரு நாட்டுப் பசு இனமும் நம் மண்ணை விட்டு மறைந்து போனது. தற்போது நம் கைவசம் ஒரு சில நாட்டுக் காளை இனம்தான் உள்ளது. இவற்றை மறையாமல் பராமரிக்க அவ்வப்போது அதனை பிறர் அறிந்து கொள்ள நடத்தப்படுவது சல்லிக் கட்டு. மென்மையான பருத்தித் துண்டில் மோதிரம் தங்கக் காசுகள் முடிச்சிட்டு மாட்டுக் கொம்பின் இடையில் இதனை கட்டுவார்கள். மாடுபிடி வீரர்கள் துணிச்சலோடு துள்ளி வரும் மாட்டை பிடித்து பரிசுப் பொருளாக முடிந்து வைக்கப்பட்ட மோதிரம் தங்கக் காசுகளை அவிழ்த்து எடுப்பார்கள். இந்த நிகழ்வில் ஒரு மாடு தன்னை பிடிக்க வருபவரிடம் சிக்காமல் தப்பிச் செல்லும். துணிந்து மாட்டின் திமிலை சில நிமிடங்கள் பிடித்து தொங்கினால் மாடு தன் முரட்டுத் தனத்தை தளர்த்தும் அந்த சந்தர்ப்பத்தில் அதன் துணி முடிச்சி அவிழ்க்கப்படும். வீரருக்கு பரிசு கிடைக்கும். அப்போது மாடு பிடித்த வீரர் மாடு வளர்த்த குடும்பத்தினர் மாட்டு ரகம் அதன் பெயர் என்ற பல தகவல்களும் மக்களுக்கு தெரிவிக்கப்படும். மாட்டின் உருவம் அதன் கம்பீரமான தோற்றம் போன்றவை பிறரைக் கவரும் போது அந்த மாட்டின் மூலம் தங்கள் பசுமாட்டிற்கு இனவிருத்தி செய்ய நாட்டம் கொள்வர். இப்படித்தான் நாட்டு மாடுகள் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டன. இவை மீதான சமூகத்தின் பார்வை குறைந்த காரணத்தால் தமிழகத்திலிருந்து சுமார் 87 நாட்டுக் காளை இனங்கள் அடியோடு காணவில்லை. அவை :
அந்தக் கருப்பன் - அழுக்கு மறையன் – ஆணறிகாலன் - ஆளை வெறிச்சான் - ஆணைச் சொறியன் - கருமறைக் காளை - கண்ணன் மயிலை - கத்திக் கொம்பன் - கழர் வாய் வெறியன் – கருப்பன் – கார்ச்சிலம்பன் - கொட்டைச் செவியன் - குட்டை நிரம்பன் - குள்ளச் சிவப்பன் - கூடு கொம்பன் - கொண்டைத் தலையன் - கூழைச் சிவலை - ஏறிச் சொழியன் - ஏறு வாலன் - கொட்டைப் பாக்கன் - கூழை வாலன் - குத்துக் குலம்பன் - குண்டுக் கண்ணன் - காராம் பசு - காரிக் காளை - கழர்ச்சிங் கண்ணன் – கருங்கூழை - கட்டைக் கொம்பன் - சுள்ளக் காளை - சுள்ளக் காடன் - கட்டை வால் கூழை - கட்டுக் கொம்பன் - கட்டைக் காரி - கட்டைக் காளை – கருமறையான் - தாரை கழுத்தன் - நெட்டைக் கொம்பன் - நெட்டை காளன் - படப்பு பிடிங்கி - படலைக் கொம்பன் - பட்டிக் காளை - பனங்காய் மயிலை – பசுங்கழுத்தன் - பால் வெள்ளை – செங்கழுத்தன் - பொட்டைக் கண்ணன் -பொங்கு வாயன் - போருக் காளை - மட்டைக் கொம்பன், மஞ்சள் வாலன், மறைச் சிவலை, மஞ்சலி வாலன், மஞ்ச மயிலை, மயிலை, வர்ணக் காளை, வர்ணக் கரியன், வெள்ளைக் குடும்பன், வெள்ளைக் காளை, வெள்ளைக் கண்ணன், வெள்ளைப் போறான், வெள்ளை, கருத்திகா பிள்ளை, கருக்கா மயிலை, பனங்காரி, சந்தனப் பிள்ளை, செம்பூந்துக் காரி, காரி மாடு, புலி வலம், மேக வண்ணன், முறி கொம்பன், முட்டிக் காளை, முரி காளை, செம்மறைக் காளை, செம்மறையன், சங்கு வண்ணன், செவலை எருது, செஞ்சாலை வைரன், தலையன் காளை, துடை சேர் கூழை, வட்டப் புகழை, வலை கொம்பன், கொறியன், தளப்பன், தறி கொம்பன், தூங்கச் செழியன், வட்டச் செழியன், வள்ளிக் கொம்பன் போன்ற காளை இனங்கள் கிராமப்புற வேளாண் பெருமக்களின் நாவில் நடமாடும் வழக்காற்று பொன்மொழி பழமொழி சொற்களுக்குள் அவரவர் ஊரின் பெருமையை பறைசாற்றிய காளை இனங்கள் மறைந்தும் மறையாமல் இன்றும் உயிர்ப்போடு உள்ளன. அறிவார்ந்த நம் சமூக இளைஞர்கள் இவற்றைக் கண்டறிந்து இவற்றின் டி.என்.ஏ. க்களை சேகரித்து மறுபடியும் இந்த மண்ணில் நாட்டு இனங்களை உருவாக்குவது அனைவரின் கடமை.