நபி வழியில் கிருத்துவர்கள்!

imagesimages 2

இஸ்லாமிய மார்க்கத்தின் உயர்ந்த குணமும் உள்ளங்களை வசீகரிக்கும் அதன் நறுமணமும்,

உலகத்தை உண்மையின் பக்கம் திருப்பும் ஆற்றல் கொண்ட ஒப்பு உயர்வு அற்ற
அதன் கொள்கை முழக்கங்களும், ஒன்று சேர்ந்து உலக மக்களின் உள்ளங்களில் வலிமையான
அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.
 
வாழ்க்கையின் எதார்த்தத்தை தேட முற்படும் தத்துவவியலாளர்கள், அறிவியல் ஆய்வின் மூலம்
உலகை வழிநடத்த துடிக்கும் விஞ்ஞானிகள், ஆன்மீகத்தின் மூலம் ஆனந்த நிலையை அடைந்து
இறை நெருக்கம் என்ற இன்பத்தை அனுபவிக்கத் துடிக்கும் பக்திமான்கள், தேடல் நிறைந்த
கல்வியாளர்கள், சமூகத் தீமைகளுக்கு எதிராகக் களம் காணும் போராளிகள், உண்மையான
பெண் விடுதலை விரும்பிகள், இவ்வாறு மனித இனம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும்
அறிவின் மூலம் ஆற்றலின் மூலம் தீர்வைத் தேடி அலையும் பெரும்பாலோர் இறுதியாக வந்து
சேருமிடம் இஸ்லாமாக இருக்கிறது.
 
உலக மக்கள் தொகையில் இதுபோல அறிவைக் கொண்டு தெளிந்து, உண்மையை
(இஸ்லாத்தை) ஏற்றுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவுதான்.
முஸ்லிம்களின் எவ்வித பெரும் முயற்சியும் இல்லாமலேயே இந்த வகை அறிஞர்கள்
இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
 
அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் நேரிடையாக இந்த அறிவு ஜீவிகளின்
உள்ளங்களை இஸ்லாத்தின் பக்கம் திருப்புகிறது. ஆழ்ந்த வாசிப்பு மூலம் இஸ்லாத்தை நேசிக்கும்
மக்கள் இவர்கள்.
 
ஆனால் உலகில் பெரும் எண்ணிக்கையில் வாழும் படிப்பறிவு இல்லாத சாதாரண உழைக்கும்
மக்கள் இஸ்லாம் குறித்து அறியாமலேயே அதன் உன்னதமான குணம் குறித்து உணராமலேயே
வாழ்ந்து மரணிக்கின்றனர்.
 
இவர்கள் பெரும்பாலும் படித்து சிந்தித்து உணரும் ஆற்றல் இல்லாதவர்கள். கொள்கை
கோட்பாடு தத்துவம் போன்ற அறிவுஜீவிகளுக்கு மட்டுமே விளங்கும் வார்த்தைகளை இவர்கள்
விரும்பாதவர்கள். சொல்வதை செய்யும் வாழ்க்கை முறையை கொண்டவர்கள். அறிவின்
படித்தளத்தில் அடிநிலையில் இருப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை தான் உலக அரங்கிலும்
இந்திய அரங்கிலும் அதிகம்.
 
இவர்கள் ஒரு விசேடமான குணத்தை உடையவர்கள். தங்கள் வாழ்விற்கு நலன் சேர்க்கும்
அனைவரையும் இறைவனாகக் கருதி வணங்கும் உணர்வுபூர்வமான குணமுடையவர்கள்.
தன்னுடைய கவலை மறக்க உபதேசிக்கும் ஆன்மீக சொற்பொழிவாளனே இவர்களின் இறைவன்.
தன்னுடைய நோய் தீர்த்த மருத்துவனே இவர்களின் தெய்வம். வறுமை ஒழித்து பசி பிணியை
போக்கியவனே இவர்களின் குலதெய்வம். வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை தன் கண்முன்
களைபவனே இவர்களின் கண்கண்ட கடவுள்.
 
இப்படி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக கையாளும் இத்தகைய குணமுடைய மக்கள்
அதிகம் வாழும் நாடு நம் நாடுதான். இந்த உண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொண்டார்களா
என்பதுதான் கேள்விக்குறி. புரிந்து கொண்டிருந்தால் முஸ்லிம்களின் அழைப்புப் பணியின்
வடிவம் வேறுவிதமாக இருந்திருக்கும்.
 
உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக அணுகும் குணமுடைய சமூகநீதி முரசு  2  ஜூன் 2013
இந்திய மக்களிடம் இஸ்லாத்தின் ஈர்ப்பை ஏற்படுத்திடும் அழைப்புப் பணியின் வடிவம் மாற
வேண்டும்.
 
இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்திட என்று பல ஆயிரக்கணக்கான வழிமுறைகளை இறைவ
னும் இறைத்தூதரும் பின்னாள் வந்த கலீஃபாக்களும் காட்டித்தந்துள்ளனர். வரலாற்றில் அவற்றை
நடைமுறைப்படுத்தியதின் மூலம் மிக குறுகிய காலத்தில் (1434 ஆண்டுகளில்) "அல்லாஹு
அக்பர்" (இறைவன் மிகப்பெரியவன்) "லாஇலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வை தவிர வேறு
இறைவன் இல்லை) என்ற உயிரின் உயிரான வார்த்தைகள் உலகமெங்கும் ஒலித்து வருகின்றன.
ஆனால், இந்தியாவில் இஸ்லாத்தை தழுவும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.
இந்திய கிருத்துவ மிஷனரிகள் தங்கள் மதத்தை மக்களிடம் கொண்டு சென்ற, செல்லும்
வழிமுறைக்கும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை கொண்டு செல்லும் வழிமுறைக்கும் மலையளவு
இடைவெளி உள்ளதை காணலாம்.
 
உணர்வுபூர்வமாக சிந்திக்கும் இந்திய மக்களிடம் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை
கொள்ளும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், கலை, இலக்கியம் போன்ற சேவைகள் மூலம்
மிஷனரிகள் கிருத்துவ மதத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
முஸ்லிம்களோ அழைப்புப்பணியின் அவசியத்தைக்கூட இன்னும் உணரவில்லை.
அணுகுமுறையில் கூட கருத்தியல் ரீதியான சொற்பொழிவு மட்டுமே செய்கின்றனர்.
"என்னுடைய மார்க்கம் ஓரிறை மார்க்கம். பகுத்தறிவு ரீதியான மார்க்கம் அதனால் அதை நீ
ஏற்றுக்கொள். என்னைப் பார்க்காதே என் மார்க்கத்தின் கொள்கைகளைப்பார்''. இது தான்
முஸ்லிம்கள் காட்டும் அழைப்புப் பணியின் முகம்.
 
மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வியல் துன்பங்களை
நீக்கி அதன் மூலம் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்
முஸ்லிம்களிடம் "மிஸ்ஸிங்". இந்த விசயத்தில் நபி (ஸல்) அவர்களை கிருத்துவர்கள் முழுமையாக
பின்பற்றுகின்றனர். அதனால் இந்திய சமூகத்தில் ''கிருத்துவ விருப்பும்'' ''இஸ்லாமிய வெறுப்பும்''
மேலோங்கி வருவதை அனுபவித்து வருகின்றோம்.
 
பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக் கூடங்கள்,
ஆதரவற்றோர் காப்பகம், விதவைகள் காப்பகம், முதியோர் இல்லம், உடல் ஊனமுற்றோர்
இல்லம், பொது மருத்துவமனைகள், காசநோய், தொழுநோய், சர்க்கரை, எய்ட்ஸ், புற்றுநோய்,
சிறப்பு மருத்துவமனைகள், இரத்த வங்கி, ஆராய்ச்சி நிலையம் இன்னும் ஏராளம்...
இறைவனுடைய படைப்புக்களுக்கு சாதி மதம் பாராமல் சகல வசதிகளோடு கிருத்துவ
மிஷனரிகள் மிகக் குறைவான கட்டணத்தில் சேவை செய்து கூடவே கிருத்துவ ஊழியமும்
செய்கின்றனர். இதைச் செய்ய வேண்டிய மார்க்கச் சட்டம் முஸ்லிம்களுக்கு இருக்கிறதா
இல்லையா என்பதை கண்ணாடி முன் நின்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
நாங்கள் எந்த சேவைக்கும் எந்த தியாகத்திற்கும் தயாரில்லை, ஆனால் எங்களுக்கு இந்த
நாட்டில் எந்த சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடியும் வரக்கூடாது, எங்களது
மார்க்கத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்!
இந்த எதிர்பார்ப்பு இஸ்லாத்திற்கு எதிரான, சுயநலமும் அலட்சியமும் சேர்த்து செய்யப்பட்ட
வடிகட்டிய முட்டாள்தனம் இது என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
இனிவரும் காலங்களிலாவது நமது வாழ்வும் வழிமுறைகளையும் அழைப்புப் பணியை
மையப்படுத்தி செல்ல வேண்டு தமிழகம் முழுவதும் முன்னோர்களின் தியாகத்தால்
கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களை மனித சமூகத்தின் அன்றாட அடிப்படைத்
தேவைகளை பூர்த்தி செய்தும் விழிபிதுங்கி நிற்கும் மக்களுக்கு வழி காட்டும் கலங்கரை
விளக்காக தரம் உயர்த்த வேண்டும்.
 
இந்தக் கருத்தில் கூடும் கூடாது என்ற வெட்டி விவாதம் நம்மிடம் ஏற்படாது என்று
நம்புவோம்.
 
இன்றைக்கு மக்களிடையே பெருகி வரும் நோய்களுக்கு சிகிச்சை செய்து தீர்வு தரும் இடமாக
பள்ளிவாசலின் ஒரு பகுதி தரம் உயர்த்தப்பட்டால் முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப்
பற்றியுமான நல்ல புரிதல் முஸ்லிம் அல்லாத மக்களிடம் ஏற்படும். நமது முன்னோர்கள்
இதற்கான வழிகாட்டுதலை திட்டமிட்டு முறையாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.
நம்முடைய அலட்சியத்தால் அதை மறந்து விட்டோம்
இன்றும் மாலை நேரங்களில் பள்ளிவாசலில் ஓதி பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் வருவது இன்று
நேற்று ஏற்பட்டதல்ல, வரலாற்றில் பள்ளிவாசல் இமாம் தான் மருத்துவராகவும் இருந்துள்ளார்.
மதரஸாவில் மருத்துவ பாடமும் சேர்த்தே கற்பிக்கப்பட்டது. இடைக்காலத்தில் அதை
மதரஸாக்கள் தவிர்த்ததின் விளைவாக ஆன்மீக சிகிச்சை மட்டும் பார்க்கப்படுகிறது. அதுவும்
குறைந்து கொண்டே வருகிறது. மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவ பாடத்தை
இன்றைய மதரஸாக்கள் பட்டம் பெறும் மாணவர்களுக்கு கற்பித்தால் பள்ளிவாசல் இமாம்
மருத்துவராக சேவைசெய்யும் பொன்னான காலம் மீண்டும் மலரும். ஆலிம்களின் அவசியமும்
பள்ளி நிர்வாகத்திற்கு புலப்படும். ஆலிம்களும் சமூகத்தின் பிரச்சனைகள் தேவைகள் குறித்து
அதிகம் படிக்கும் சூழல் உருவாகும்.
 
மேலும் தமிழகத்தில் 1960 களிலும் அதற்கு முன்பும் இருந்தது போன்ற வெளிப்படையான சாதிய
நெருக்கடிகள் இன்று குறைந்துள்ளது. சாதிய குரோதங்களும் இழிவுகளும் மிகைந்திருந்த காலத்
தில் இழிவிலிருந்து விடுதலை பெறுவது தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முதன்மை சிந்தனையாக
இருந்தது. அதற்கு தந்தை பெரியார் போன்ற சமூக சிற்பிகள் சரியாக வழிகாட்டினர். 1925 - 1950
வரையான காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கிராமம் கிராமமாக இஸ்லாத்தை தழுவினர்.
சமூக சூழ்நிலை மாறக்கூடியது. ஆனால் இந்தியாவில் சாதிய இழிவுகள் மாறக்கூடியதோ
அல்லது மறையக்கூடியதோ அல்ல.
 
குடியரசு இந்தியாவின் சட்டதிட்டங்களும் முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரமும் மக்களின்
வாழ்வியலில் முதன்மைச் சிந்தனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
நகரமயமாக்கல், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, நவீன
ஊடகங்கள், கேளிக்கைகள், மது ஆகியவை இந்திய மக்களிடம் குறிப்பாக இந்துக்களிடம்
நிலவி வந்த சாதிய இறுக்கத்தை சற்று தளர்த்தியது போல தோற்றமளிக்கிறது. ஆனால் உள்ளே
சாதிய மிருகம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் வீறு கொண்டு
எழலாம் அவ்வப்போது சாதி மோதல் நடைபெற்று வருவதே அதற்கு உதாரணம்.
இன்றைய இந்திய மக்களின் முதன்மை தேவை கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம்,
சுற்றுச்சூழல், அறிவியல் தொழில் நுட்பம் போன்றவைதான். இவற்றில் தங்களுக்கு யார்
வழிகாட்டுகின்றனரோ அல்லது உதவி செய்கின்றனரோ அவர்களின் கொள்கைகளில் தங்களை
இணைத்துக் கொள்வதற்கு தயாராக உள்ளனர். கிருத்துவர்கள் இதை முறையாக தெளிவாக
தொலைநோக்கு திட்டத்தோடு செய்கின்றனர்.
 
முஸ்லிம் ஜமாஅத்கள் கல்வி நிறுவனங்களை தொடங்குவது, முடிந்தவரை கல்வியை
குறைவான கட்டணத்தில் கொடுப்பது, இன்னும் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி
செய்யும் விதமாக ஆறுகளை காப்பது, குளம் வெட்டி பாதுகாப்பது, மரங்கள் நட்டு சுற்றுச்
சூழலை பாதுகாப்பது போன்ற மக்களோடு மக்களாக மக்களின் வாழ்வியலோடு கலந்து வாழும்
முஸ்லிம் சமூகம் உருவாகின்ற போது இஸ்லாத்தின் உண்மை வடிவத்தை முஸ்லிம்மல்லாத
மக்கள் உணர்ந்து கொள்வர்.
 
கூட்டம் கூட்டமாக கிராமம் கிராமமாக யார் தடுத்தாலும் தயங்காமல் எந்த அவதூறு
பிரச்சாரங்களும் எடுபடாமல் மக்கள் இஸ்லாத்தை நேசிக்கும் காலம் உருவாகும்.

நபி வழியில் கிருத்துவர்கள்!இஸ்லாமிய மார்க்கத்தின் உயர்ந்த குணமும் உள்ளங்களை வசீகரிக்கும் அதன் நறுமணமும், உலகத்தை உண்மையின் பக்கம் திருப்பும் ஆற்றல் கொண்ட ஒப்பு உயர்வு அற்ற அதன் கொள்கை முழக்கங்களும், ஒன்று சேர்ந்து உலக மக்களின் உள்ளங்களில் வலிமையான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.வாழ்க்கையின் எதார்த்தத்தை தேட முற்படும் தத்துவவியலாளர்கள், அறிவியல் ஆய்வின் மூலம் உலகை வழிநடத்த துடிக்கும் விஞ்ஞானிகள், ஆன்மீகத்தின் மூலம் ஆனந்த நிலையை அடைந்து இறை நெருக்கம் என்ற இன்பத்தை அனுபவிக்கத் துடிக்கும் பக்திமான்கள், தேடல் நிறைந்த கல்வியாளர்கள், சமூகத் தீமைகளுக்கு எதிராகக் களம் காணும் போராளிகள், உண்மையான பெண் விடுதலை விரும்பிகள், இவ்வாறு மனித இனம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் அறிவின் மூலம் ஆற்றலின் மூலம் தீர்வைத் தேடி அலையும் பெரும்பாலோர் இறுதியாக வந்து சேருமிடம் இஸ்லாமாக இருக்கிறது.உலக மக்கள் தொகையில் இதுபோல அறிவைக் கொண்டு தெளிந்து, உண்மையை (இஸ்லாத்தை) ஏற்றுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவுதான்.முஸ்லிம்களின் எவ்வித பெரும் முயற்சியும் இல்லாமலேயே இந்த வகை அறிஞர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர். அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் நேரிடையாக இந்த அறிவு ஜீவிகளின் உள்ளங்களை இஸ்லாத்தின் பக்கம் திருப்புகிறது. ஆழ்ந்த வாசிப்பு மூலம் இஸ்லாத்தை நேசிக்கும் மக்கள் இவர்கள்.ஆனால் உலகில் பெரும் எண்ணிக்கையில் வாழும் படிப்பறிவு இல்லாத சாதாரண உழைக்கும் மக்கள் இஸ்லாம் குறித்து அறியாமலேயே அதன் உன்னதமான குணம் குறித்து உணராமலேயே வாழ்ந்து மரணிக்கின்றனர்.இவர்கள் பெரும்பாலும் படித்து சிந்தித்து உணரும் ஆற்றல் இல்லாதவர்கள். கொள்கை கோட்பாடு தத்துவம் போன்ற அறிவுஜீவிகளுக்கு மட்டுமே விளங்கும் வார்த்தைகளை இவர்கள் விரும்பாதவர்கள். சொல்வதை செய்யும் வாழ்க்கை முறையை கொண்டவர்கள். அறிவின் படித்தளத்தில் அடிநிலையில் இருப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை தான் உலக அரங்கிலும் இந்திய அரங்கிலும் அதிகம்.இவர்கள் ஒரு விசேடமான குணத்தை உடையவர்கள். தங்கள் வாழ்விற்கு நலன் சேர்க்கும் அனைவரையும் இறைவனாகக் கருதி வணங்கும் உணர்வுபூர்வமான குணமுடையவர்கள். தன்னுடைய கவலை மறக்க உபதேசிக்கும் ஆன்மீக சொற்பொழிவாளனே இவர்களின் இறைவன். தன்னுடைய நோய் தீர்த்த மருத்துவனே இவர்களின் தெய்வம். வறுமை ஒழித்து பசி பிணியை போக்கியவனே இவர்களின் குலதெய்வம். வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை தன் கண்முன் களைபவனே இவர்களின் கண்கண்ட கடவுள்.இப்படி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக கையாளும் இத்தகைய குணமுடைய மக்கள் அதிகம் வாழும் நாடு நம் நாடுதான். இந்த உண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொண்டார்களா என்பதுதான் கேள்விக்குறி. புரிந்து கொண்டிருந்தால் முஸ்லிம்களின் அழைப்புப் பணியின் வடிவம் வேறுவிதமாக இருந்திருக்கும். உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக அணுகும் குணமுடைய சமூகநீதி முரசு  2  ஜூன் 2013இந்திய மக்களிடம் இஸ்லாத்தின் ஈர்ப்பை ஏற்படுத்திடும் அழைப்புப் பணியின் வடிவம் மாற வேண்டும்.இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்திட என்று பல ஆயிரக்கணக்கான வழிமுறைகளை இறைவனும் இறைத்தூதரும் பின்னாள் வந்த கலீஃபாக்களும் காட்டித்தந்துள்ளனர். வரலாற்றில் அவற்றைநடைமுறைப்படுத்தியதின் மூலம் மிக குறுகிய காலத்தில் (1434 ஆண்டுகளில்) "அல்லாஹு அக்பர்" (இறைவன் மிகப்பெரியவன்) "லாஇலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை) என்ற உயிரின் உயிரான வார்த்தைகள் உலகமெங்கும் ஒலித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் இஸ்லாத்தை தழுவும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.இந்திய கிருத்துவ மிஷனரிகள் தங்கள் மதத்தை மக்களிடம் கொண்டு சென்ற, செல்லும் வழிமுறைக்கும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை கொண்டு செல்லும் வழிமுறைக்கும் மலையளவு இடைவெளி உள்ளதை காணலாம்.உணர்வுபூர்வமாக சிந்திக்கும் இந்திய மக்களிடம் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், கலை, இலக்கியம் போன்ற சேவைகள் மூலம் மிஷனரிகள் கிருத்துவ மதத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.முஸ்லிம்களோ அழைப்புப்பணியின் அவசியத்தைக்கூட இன்னும் உணரவில்லை. அணுகுமுறையில் கூட கருத்தியல் ரீதியான சொற்பொழிவு மட்டுமே செய்கின்றனர். "என்னுடைய மார்க்கம் ஓரிறை மார்க்கம். பகுத்தறிவு ரீதியான மார்க்கம் அதனால் அதை நீ ஏற்றுக்கொள். என்னைப் பார்க்காதே என் மார்க்கத்தின் கொள்கைகளைப்பார்''. இது தான் முஸ்லிம்கள் காட்டும் அழைப்புப் பணியின் முகம்.மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வியல் துன்பங்களை நீக்கி அதன் மூலம் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் முஸ்லிம்களிடம் "மிஸ்ஸிங்". இந்த விசயத்தில் நபி (ஸல்) அவர்களை கிருத்துவர்கள் முழுமையாக பின்பற்றுகின்றனர். அதனால் இந்திய சமூகத்தில் ''கிருத்துவ விருப்பும்'' ''இஸ்லாமிய வெறுப்பும்'' மேலோங்கி வருவதை அனுபவித்து வருகின்றோம்.பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக் கூடங்கள், ஆதரவற்றோர் காப்பகம், விதவைகள் காப்பகம், முதியோர் இல்லம், உடல் ஊனமுற்றோர் இல்லம், பொது மருத்துவமனைகள், காசநோய், தொழுநோய், சர்க்கரை, எய்ட்ஸ், புற்றுநோய், சிறப்பு மருத்துவமனைகள், இரத்த வங்கி, ஆராய்ச்சி நிலையம் இன்னும் ஏராளம்...இறைவனுடைய படைப்புக்களுக்கு சாதி மதம் பாராமல் சகல வசதிகளோடு கிருத்துவ மிஷனரிகள் மிகக் குறைவான கட்டணத்தில் சேவை செய்து கூடவே கிருத்துவ ஊழியமும் செய்கின்றனர். இதைச் செய்ய வேண்டிய மார்க்கச் சட்டம் முஸ்லிம்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை கண்ணாடி முன் நின்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.நாங்கள் எந்த சேவைக்கும் எந்த தியாகத்திற்கும் தயாரில்லை, ஆனால் எங்களுக்கு இந்த நாட்டில் எந்த சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடியும் வரக்கூடாது, எங்களது மார்க்கத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்!இந்த எதிர்பார்ப்பு இஸ்லாத்திற்கு எதிரான, சுயநலமும் அலட்சியமும் சேர்த்து செய்யப்பட்ட வடிகட்டிய முட்டாள்தனம் இது என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.இனிவரும் காலங்களிலாவது நமது வாழ்வும் வழிமுறைகளையும் அழைப்புப் பணியை மையப்படுத்தி செல்ல வேண்டு தமிழகம் முழுவதும் முன்னோர்களின் தியாகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களை மனித சமூகத்தின் அன்றாட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தும் விழிபிதுங்கி நிற்கும் மக்களுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்காக தரம் உயர்த்த வேண்டும்.இந்தக் கருத்தில் கூடும் கூடாது என்ற வெட்டி விவாதம் நம்மிடம் ஏற்படாது என்று நம்புவோம்.இன்றைக்கு மக்களிடையே பெருகி வரும் நோய்களுக்கு சிகிச்சை செய்து தீர்வு தரும் இடமாக பள்ளிவாசலின் ஒரு பகுதி தரம் உயர்த்தப்பட்டால் முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியுமான நல்ல புரிதல் முஸ்லிம் அல்லாத மக்களிடம் ஏற்படும். நமது முன்னோர்கள் இதற்கான வழிகாட்டுதலை திட்டமிட்டு முறையாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். நம்முடைய அலட்சியத்தால் அதை மறந்து விட்டோம்இன்றும் மாலை நேரங்களில் பள்ளிவாசலில் ஓதி பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் வருவது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, வரலாற்றில் பள்ளிவாசல் இமாம் தான் மருத்துவராகவும் இருந்துள்ளார். மதரஸாவில் மருத்துவ பாடமும் சேர்த்தே கற்பிக்கப்பட்டது. இடைக்காலத்தில் அதை மதரஸாக்கள் தவிர்த்ததின் விளைவாக ஆன்மீக சிகிச்சை மட்டும் பார்க்கப்படுகிறது. அதுவும் குறைந்து கொண்டே வருகிறது. மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவ பாடத்தை இன்றைய மதரஸாக்கள் பட்டம் பெறும் மாணவர்களுக்கு கற்பித்தால் பள்ளிவாசல் இமாம் மருத்துவராக சேவைசெய்யும் பொன்னான காலம் மீண்டும் மலரும். ஆலிம்களின் அவசியமும் பள்ளி நிர்வாகத்திற்கு புலப்படும். ஆலிம்களும் சமூகத்தின் பிரச்சனைகள் தேவைகள் குறித்து அதிகம் படிக்கும் சூழல் உருவாகும். மேலும் தமிழகத்தில் 1960 களிலும் அதற்கு முன்பும் இருந்தது போன்ற வெளிப்படையான சாதிய நெருக்கடிகள் இன்று குறைந்துள்ளது. சாதிய குரோதங்களும் இழிவுகளும் மிகைந்திருந்த காலத்தில் இழிவிலிருந்து விடுதலை பெறுவது தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முதன்மை சிந்தனையாக இருந்தது. அதற்கு தந்தை பெரியார் போன்ற சமூக சிற்பிகள் சரியாக வழிகாட்டினர். 1925 - 1950வரையான காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கிராமம் கிராமமாக இஸ்லாத்தை தழுவினர்.சமூக சூழ்நிலை மாறக்கூடியது. ஆனால் இந்தியாவில் சாதிய இழிவுகள் மாறக்கூடியதோ அல்லது மறையக்கூடியதோ அல்ல.குடியரசு இந்தியாவின் சட்டதிட்டங்களும் முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரமும் மக்களின் வாழ்வியலில் முதன்மைச் சிந்தனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. நகரமயமாக்கல், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, நவீன ஊடகங்கள், கேளிக்கைகள், மது ஆகியவை இந்திய மக்களிடம் குறிப்பாக இந்துக்களிடம் நிலவி வந்த சாதிய இறுக்கத்தை சற்று தளர்த்தியது போல தோற்றமளிக்கிறது. ஆனால் உள்ளே சாதிய மிருகம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் வீறு கொண்டு எழலாம் அவ்வப்போது சாதி மோதல் நடைபெற்று வருவதே அதற்கு உதாரணம்.இன்றைய இந்திய மக்களின் முதன்மை தேவை கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல் தொழில் நுட்பம் போன்றவைதான். இவற்றில் தங்களுக்கு யார் வழிகாட்டுகின்றனரோ அல்லது உதவி செய்கின்றனரோ அவர்களின் கொள்கைகளில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு தயாராக உள்ளனர். கிருத்துவர்கள் இதை முறையாக தெளிவாக தொலைநோக்கு திட்டத்தோடு செய்கின்றனர்.முஸ்லிம் ஜமாஅத்கள் கல்வி நிறுவனங்களை தொடங்குவது, முடிந்தவரை கல்வியை குறைவான கட்டணத்தில் கொடுப்பது, இன்னும் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆறுகளை காப்பது, குளம் வெட்டி பாதுகாப்பது, மரங்கள் நட்டு சுற்றுச் சூழலை பாதுகாப்பது போன்ற மக்களோடு மக்களாக மக்களின் வாழ்வியலோடு கலந்து வாழும் முஸ்லிம் சமூகம் உருவாகின்ற போது இஸ்லாத்தின் உண்மை வடிவத்தை முஸ்லிம்மல்லாத மக்கள் உணர்ந்து கொள்வர். கூட்டம் கூட்டமாக கிராமம் கிராமமாக யார் தடுத்தாலும் தயங்காமல் எந்த அவதூறு பிரச்சாரங்களும் எடுபடாமல் மக்கள் இஸ்லாத்தை நேசிக்கும் காலம் உருவாகும்.