விட்டில் பூச்சிகள்

இந்தக் கோடை விடுமுறை ஒரு மாத காலம் வெம்மை தாங்காமல் மக்கள் தவித்தனர் அது வெயிலின் கொடுமை. ஆனால் பெற்றோர் பலரும் தங்களை உயிரோடு பிள்ளைகள் நெருப்பில் போட்டது போல உணர்ந்தனர். ! அழுதனர்.!! ஆம் !

சென்னை புற நகரின் ஒரே ஒரு காவல் நிலையத்தில் மட்டும் ஓடிப்போன பெண் பிள்ளைகள் பற்றிய புகார் 22 பதிவாகியுள்ளது ஒரே ஒரு மாதக் கணக்கு மட்டும் இது. அதுவும் ஒரு காவல் நிலைய எல்லைக்குள் மட்டும் !.

இன்னும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அவனுடன் ஓடினாள், இவனுடன் ஓடினாள் என்ற புகாரை பட்டியலிட்டால் நிச்சயம் நம் எல்லோருக்கும் நெருப்பில் வீழ்ந்த வதை உணர்வு மேலிடும். இதில் துணிந்து என்னவானாலும் சரி புகாரைப் பதிவு செய்தே தீர வேண்டும். என்ற நினைப்பில் பதிவானவை தவிர, குடும்ப மானம் போலிசிலும் நாற வேண்டுமா ? தேடிப் பார்ப்போம் என்று சிலரும், அட போன கழுதை தானாக வரட்டும் என புகாரைப் பதிவு செய்யாமல் விடுபவர்களும் கணிசமானவர்கள் கட்டாயம் இருப்பார்கள்.நிச்சயம் !

இந்த ஒரு மாதம் மட்டும் அல்ல ஆண்டு தோறும் இப்படி நடப்பதற்கு என்னதான் காரணம். என்னதான் தீர்வு. ஏன் இப்படி நடக்கிறது.? இது முழுக்க முழுக்க பெற்றோர்களுக்கு பெண் பிள்ளைகள் செய்யும் நம்பிக்கை மோசடிதானே ! ஒரு பெண்ணை அவளின் தாயார் வீட்டு மொட்டை மாடியில் தண்ணீர் நிரம்பி விட்டதா ? எனப் பார்த்து வரச்சொன்னார். அந்தப் பெண் மொட்டை மாடிக்கு போனாள். ஆனால் திரும்ப வரவேயில்லை இன்று வரை. யாருடன் ? எப்படி ? அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் சிட்டாகப் பறந்தாள் என இன்னமும் சிந்திக்கிறது அந்தக் குடும்பம்.

முதல் நாள் ஹாய் ! மறுநாள் மொபைல் எண் பரிமாற்றம். மூன்றாம் நாள் ஓட்டம். 72 மணி நேரத்தில் அப்படி என்னதான் அவர்களுக்குள் புரிதல் இருக்கும் இதுதான் காதலா ? என்ன கருமமோ ? சே !

இப்படியும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. பெற்றோர் நம்பிக்கையுடன் பி,இ. படித்த பின் தம் மகளை எம்.இ. படிக்க சென்னை அண்ணா பல்கலையில் சேர்த்து விட்டு உறவினர் வீட்டில் தங்க வைக்கின்றனர். எம்.இ. இரண்டாம் ஆண்டில் நான்காவது வீட்டுப் பையனுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தாள், பின் பட்டம் பெற்றாளோ இல்லையோ வயிற்றுக்குள் பாரம் தங்கிவிட்டது. இன்னமும் பெற்றோருக்குத் தெரியாது !. அந்தக் காமுகன் இவளைப் போல இன்னொருத்தியுடன் ஓடி விட்டான் !. இவளோ கண்ணீரில் மிதக்கிறாள் இப்போது ஓடிப்போனவர்கள் பட்டியலில் அவனும் அவனுடன் ஓடிப்போன பெண்ணும் போலீஸ் புகாரில் சிக்கியுள்ளனர். இப்படி பல துரோகக் கதைகள்.

இப்போதெல்லாம் பையன்கள் பலருக்கு ஒரே பெண்ணை காதலிப்பதும் அவளையே கல்யாணம் செய்து கொள்வதும் அவமானமாம் ! அவன் வேலைக்கு ஆகாதவனாம். காலை ஒரு சந்திப்பு. மாலை ஒரு சந்திப்பு என ஏமாறும் பெண்களுடன் வித விதமாக சுற்றுவதுதான் கவுரவமாம். என்று பேசிக்கொள்கிறார்கள்.! பஸ்ஸில், வெளியில், நண்பர்களுடன் என ஆண்பிள்ளைகள். ஒருத்திக்கு தெரியாமலேயே இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்துள்ளனர். இப்படி ஏமாற்றும் ஆண்களிடம் தங்களை பறிகொடுத்த பெண் பிள்ளைகள் பட்டியல் ஒரு புறம்.

செல்போன், சினிமாக்கள், சின்னத்திரை, கோ எஜுகேஷன், பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமை, சரியான வழிகாட்டலின்மை, பெற்றோருடன் மனரீதியாக வேறுபாடு, வெறுப்பூட்டும் உறவினர்களின் பேச்சு, சதா சர்வ காலமும் பெண் பிள்ளைகளை ஆபாச வார்த்தைகளால் திட்டும் அம்மாக்கள், பிள்ளைகளை சரி வர புரிந்து கொள்ளாத பெற்றோர், தவறான நோக்கத்துடன் வீட்டுக்கு வரும் உறவினர்களை தடுக்காமை, வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்பு இல்லாமை, ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம், கணக்கின்றி செலவுக்கு பணம் தருவது, ஒழுக்கத்தை கற்பிக்கும் ஆசிரியர் - கல்வி - நீதி போதனை இல்லாமை, பணம் திரட்ட பெற்றோர் படும் சிரமம் தெரியாமல் வளர்க்கப்படும் குழந்தைகள், எதிர் கால நம்பிக்கையின்மையுடன் மேம்போக்கான பெற்றோர். தவறான நட்பு என நாம் பெண்கள் ஓடிப்போவதற்கான பல காரணங்களை அடுக்கிய படி சொல்லலாம். ஆனால் ! இதற்கு தீர்வு தான் என்ன ?

இது ஒருபுறமிருக்க. இன்னொருபுறம் ஒரே உறவினர்களுக்குள் முதுநிலை உடற்பயிற்சி படித்த பெண் அவளை விட குறைவான பத்தாம் வகுப்பு படித்து விட்டு டிரைவர் வேலை பார்பவனை விரும்பியதால். முதுநிலை பட்டம் பெற்ற சகோதரனால் குத்திக் கொல்லப்படுகிறாள். கொலைக்குக் காரணமாக இங்கு படிப்பு வித்தியாசம் காட்டப் படுகிறது.

சாதி மறுத்து திருமணம் முடித்து மூன்றாண்டுகள் கழித்து இரண்டு பிள்ளைகளுடன் வீடு திரும்பிய சகோதரியின் கணவன் நயமாகப் பேசி அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறான். சகோதரி விதவையானாலும் பரவாயில்லை சாதி கவுரவம் காக்கப்பட்டதாக கொலை செய்த அவளின் சகோதரன் கூறுகிறான். 21 ஆம் நூற்றாண்டிலும் சாதி வெறி, சாதித் திமிர் சமூக நீதிக்கு எதிராக, மனித நீதிக்கு எதிராக நச்சரவம் போல் படம் எடுத்து ஆடுகிறது.!

இன்னொருபுறம் 1067 மதிப்பெண் எடுத்த பெண் தன்னை மருத்துவக் கல்லூரியில் பெற்றோர் சேர்க்கவில்லை என தற்கொலை செய்து கொள்கிறாள். இன்னொரு பெண் தான் சரியாக தேர்வு எழுதவில்லை பெயிலாகி விடுவோம் என பயந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் ரிசல்ட் வந்த போது அவள் 890 மதிப்பெண் எடுத்து பாசாகி விட்டாள்.!

இன்னொரு பெண் குறைந்த மதிப்பெண் எடுத்த தனக்கு மேற்படிப்பில் உரிய இடம் கிடைக்காது என்று தற்கொலை செய்து கொள்கிறாள். ஆக மென்மையான மனம் படைத்தவர்கள் பெண் பிள்ளைகள் எனக் கூறப்பட்டவர்கள் மனம் குரூரமாக கொலை வெறியோடு புத்தி பேதலித்தவர்களாய். இன்று நாகரீக உடைக்கவசத்துடன் உலா வருவது போல்தான் நினைக்கத்தோன்றுகிறது. ஏன் ?

மனநல நிபுணர்களைக் கேட்டால் இது ஒரு "பயாலஜிக்கல் ஃபாக்ட்" என்கிறார்கள். அதே நேரம் வயதான மூத்த பெண்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வது அதிர்ச்சியாக உள்ளது.!

வயதுப்பெண் உள்ள இடத்தில் மூத்தவர்கள் மறைமுகமாக இருக்க வேண்டியதை பகிரங்கமாகப் பழகுவதைப் பார்ப்பது, திருமண வயதில் பெண் இருக்க ஆண்களுக்கு திருமணம் செய்வது, பிற தவறான பெண்களைப் பற்றி சிலர் கூடி புறங் கூறிப் பேசுவது இவை இப்படிச் செய்வது தவறில்லை போலும் சகஜமானது தான் என்ற நினைப்பை இளம் பெண் மனதில் உருவாக்குகிறது. இதை விட இன்னொரு முக்கிய விசயம். தவறாக ஏற்கனவே நடந்து கொண்டதால் விமர்சிக்கப்பட்ட பெண்கள் சமூகத்தை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அப்பாவி குடும்பப் பெண்களுக்கு தவறாக வழிகாட்டுவது. இப்படி நடப்பது தவறில்லை. கொஞ்ச காலம் பேசுவார்கள் பின்னர் அமைதியாவர்கள் எனக் கட்டுப்பாட்டுடன் உள்ள பெண் மனதையும் உடைப்பவர்கள் சூழ வாழ்வதும் காரணம். ஒரு என்கின்றனர்.

குறிப்பாக ஒரு பெண்ணின் நட்பு வட்டத்தில் பழகுகிறவர்கள் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். தவறான நட்பாகத் தெரிந்தால் தங்கள் பிள்ளைகளிடம் மனம் நோகாத வகையில் பக்குவமாக எடுத்துக் கூறி விலகி விடக் கூற வேண்டும். மாறாக அதட்டி, உருட்டி, மிரட்டினால் இதை மீறினால் தான் என்ன என்கிற சிந்தனை மேலோங்கும். ஏனெனில் இது பருவக் கோளாறு மட்டுமல்ல எதையும் எதிர்ப்பது என்ற சிந்தனை மேலோங்கும் பருவமும் கூட. !

இந்தத் தொல்லையிலிருந்து விடுபட முஸ்லிம் ஷரீஅத் சட்டப்படி பருவமடைந்த பெண் திருமணம் செய்யும் உரிமை பெற்றவள். பிற சட்டத்தைப் போல் 18 வயது ஆகவேண்டும் என்ற விதி இல்லை எனவே பெண் பருவமடைந்த உடனேயே திருமணம் செய்வதுதான் சரியான வழி. பின்னர் படிப்பை தொடரலாம். ஆனால் பெரும்பான்மை தவறுகள் சட்டம் குறிப்பிடும் 18 வயதுக்குள்தான் நடக்கின்றன. அதனால் தேவையற்ற சிக்கல்கள் குடும்பத்தையே வீதிக்கு கொண்டு வந்த விடுகிறது.

ஆக இந்த பயாலஜிகல் சிக்கலை தீர்க்க ஒரே வழி ஷரீஅத்தை நாடுவதுதான். இதைத்தான் சமீபத்தில் டெல்லி உயர் நீதி மன்ற தீர்ப்பும் சுட்டிக்காட்டுகிறது. முதலில் முஸ்லிம்கள் முழுமையாக ஷரீஆவை பின் தொடர்ந்து இந்தப் பருவக் கோளாறுகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் இதர சமூகங்களும் தங்கள் பிரச்சனைகளுக்காக சட்ட விதிகளில் மாற்றம் கோருவார்கள். அதன் வாயிலாகத்தான் ஓடிப்போகும் வழக்கத்தை ஒழிக்க இயலும். கோரிக்கைகளின் சத்தம் கூடினால் சட்டம் அமைதியாகி விடும்.

எங்கோ உள்ள விளக்கு வெளிச்சத்தை நோக்கி விட்டில் பூச்சிகளாய் பெண்கள் ஓடுவதைத் தடுக்க ஒரு வெளிச்சத்தை பெற்றோர்களே கவுரமாக உருவாக்கித் தந்தாலே ஓட்டங்கள் தடைபடும் ! பலரின் மன உளைச்சலும் தீரும். எப்படிப்பட்ட வெளிச்சம் என்பதை பெற்றோரும், சமூகமும் தான் தீர்மானிக்க வேண்டும்.

- க. குணசேகரன்