சோகத்தின் உறைவிடமான மியான்மர்

 சகததன உறவடமன மயனமர

   மியன்மாரின் ஆராகான் மாநிலத்தில் அமைந்துள்ள மங்க்டோ நகரின் அருகில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள வறிய முஸ்லிம் கிராமங்களை தீவிரவாத கும்பல்கள் தொடர்ந்தும்

பறவைகள் மற்றும் மீன் வடிவத்தில் பலூன்களை செய்து, அதில் இரசாயனப் பொருட்களை நிரப்பி மரப் பலகைகள், வைக்கோல்கள் மற்றும் மூங்கில்களினால் அமைக்கப் பட்ட மிகவும் வறிய முஸ்லிம் வீடுகளின் மீது அவற்றை அந்த தீவிரவாத கும்பல்கள் பறக்க விடுகின்றனர். மிகவும் வெப்பமான பரப்புகளில் அந்த பாலூன்கள் இறங்கும் போது, அவற்றுக்குள் நிரப்பப் பட்டிருக்கும் இரசாயனங்களின் செயற்பாட்டினால் உடன் அந்த வீடுகள் தீப்பற்றி எரிந்து விடுகின்றன.

இவ்வாறு நூற்றுக் கணக்கான வீடுகள் அழிக்கப் பட்டுள்ளன. சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக தெரியவில்லை.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இளம் வயதுடைய ரோஹிங்கிய முஸ்லிம் வாலிபர்கள் தமது கிராமங்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது பௌத்தர்களைச் சேர்ந்த நான்கு பேர் முஸ்லிம்களின் வீடுகளில் தீமூட்டுவதை கவனித்த அந்த இளம் முஸ்லிம் வாலிபர்கள் கடுமையான போராட்டத்தின் பின் அவர்களில் இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களிடம் பல ஆயுதங்கள், கத்திகள், இரண்டு தொலைபேசிகள், தீ மூட்டப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணை நிரப்பப்பட்ட குடுவை போன்றன இருந்துள்ளன.

................................

மீண்டும் துருக்கி?

துருக்கியில்86,700 மஸ்ஜித்கள் உள்ளதாக துருக்கி மத அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நோஷகார் எனும் நகரத்தில் புதிய பள்ளிவாயல் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் நேரத்தில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

துருக்கியில்99% சதவீதம் பள்ளிவாசல்கள் அந்நாட்டு மக்களினாலேயே கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ..................................

யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இந்தப் போரால் அந்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை மிகவும் கடுமையானது. வன்முறைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டச் சத்துக் குறைபாடும், நோயும் அவர்களின் வளர்ச்சியை பாதித்துள்ளன. இந்தப் போர்ச் சூழ்நிலைகள் அவர்களின் மனதில் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அவர்களின் கல்வித் திறனும் தடைப்பட்டுள்ளது. அந்நாட்டில் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளில் பாதி அளவாகக் கருதப்படும் 28 இலட்சம் குழந்தைகள் இந்தப் போரால் தங்களது கல்வியை இழந்துள்ளனர்.

குழந்தைகள் வாழ்வதற்கு ஆபத்து நிறைந்த இடங்களில் தற்போது சிரியாவும் ஒன்று. ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது வாழ்க்கை, கல்வி, உறவினர்கள், நண்பர்கள், வீடு ஆகியவற்றை இழந்துள்ளனர். இளைஞர்கள் தங்கள் தலைமுறையை இழந்துள்ளனர். சுமார் 30 இலட்சம் குழந்தைகள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 12 இலட்சம் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

குடிநீர் மற்றும் உணவுக்காக பல குழந்தைகள் அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று யுனிசெஃப் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

.....................................

தென்ஆஃப்ரிக்காவில் இந்திய மொழிகள்.

தென்ஆஃப்ரிக்காவின் அரசுப் பள்ளிக் கூடங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 5 இந்திய மொழிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தென் ஆஃப்ரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென் ஆஃப்ரிக்காவில் 14 லட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கின்றனர்.

இந்த மொழிகள் முதற்கட்டமாக இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வாழும் கவாசுலு நடால் மாகாணத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக, விருப்பப் பாடமாக கற்பிக்கப்படவுள்ளது.

……………………………………….

காற்று மாசடைவதே உலகின் சுகாதாரத்திற்கு ஒரே பெரிய அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2012 ஆண்டில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலான மரணங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள ஏழை, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்பட்டுள்ளன.

மாசடைதல்

வீடுகளின் உட்புறச் சமையல் அறைகளில் சமையல் நெருப்புடன் வேலை செய்யவேண்டியிருக்கும் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அளவிற்கு மீறி பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா போன்ற அதிவேகமாக தொழில் வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இந்த வெளிப்புற காற்று மாசுபாடு ஒரு முக்கிய பிரச்சனை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வீடுகளில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களை காப்பாற்ற சுத்தமான, குறைந்த தொழில்நுட்ப மிகுந்த அடுப்புகள் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் வெளிப்புற காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகளை அரசாங்கங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

………………………………….

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது என சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- உலக நாடுகளில் ஆயுத இறக்குமதியில் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் பாகிஸ்தான், மற்றும் சீனாவுக்கு இணையாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது. 2004-2008ம் ஆண்டுகளை விட கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் ஆயுத இறக்குமதி 7 முதல் 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2009-2013ம் ஆண்டு காலங்களில் இந்தியாவுக்கு ஆயுதம் வழங்கிய மிக முக்கிய நாடாக ரஷ்யா விளங்குகிறது. 75 சதவீதம் ஆயுதங்கள் ரஷ்யாவில் இருந்துதான் வாங்கப்பட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

……………………………..

கத்தார் நாட்டின் வெளியுறவு கொள்கை!

கத்தார் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சரியானதே. அதனை எவரும் பேரம் பேச முடியாது என கத்தார் வெளியுறவு அமைச்சர் காலித் பின் முஹம்மத் அல் அதிய்யாஹ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் போன்ற நாடுகள் தோஹாவில் இருந்து தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்தது தொடர்ப்பாக கூறுகையில் இதைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், கத்தாரில் இருந்து குறிப்பிட்ட நாடுகள் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்தது வருத்தம் அளிக்கும் நிலைப்பாடாக உள்ளதோடு வளைகுடா மக்களின் நலன்கள், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை என்பவற்றோடு அதற்கு எந்த தொடர்ப்பும் இல்லை எனத் தெளிவு படுத்தி உள்ளார்.

மத்திய ஆப்பிரிக்காவை பாதுகாக்க 11 ஆயிரம் ஐ.நா. துருப்புக்கள்

தனது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைகள் மற்றும் இன அழிப்பை நிறுத்த சர்வதேச சமாதான படையை அனுப்புமாறு மத்திய ஆபிரிக்க குடியரசு வெளியுறவு அமைச்சர்ஐ.நா. பாதுகாப்பு சபையில் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் நோக்கமாக மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு 11 ஆயிரம் அமைதிகாக்கும் படைகளை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்துள்ளது. மேலும் ஆரம்ப கட்டத்தில் ஐ.நா. சபை பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கே முன்னுரிமை வழங்கும், தொடர்ந்தும் இப்பணி விரிவாக்கம் செய்யப்பட்டு இடைக்கால அரசை உருவாக்கும் நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் எனவும்ஆஃப்ரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் ஐ.நா சபையின் செயலாளர் பான் கீ மூன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேசம் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் மத்திய ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவ தீவிரவாதிகளால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன ஒழிப்பு மற்றும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டு வருவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் அந்தோனியோ ஜோதிரிஸ் தெரிவித்துள்ளார்.

.

ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக இஸ்லாமிய அருங்காட்சியகம்

ஆஸ்திரேலியா வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய அருங்காட்சியகம் ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அஞ்சல் நிலையப் பணிப்பாளர் அஹ்மத் வாஹூரினால் கட்டி முடிக்கப்பட்ட அருங்காட்சியகம் ஆஸ்திரேலிய நிதி அமைச்சர் ஜோய் ஹோகி மற்றும் பல்கலாச்சார அமைச்சர் நிக்கோலஸ் கொத்சிராஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

இது பற்றி அஹ்மத் வாஹூர் கருத்து கூறுகையில்,

இந்த ஆஸ்திரேலிய இஸ்லாமிய அருங்காட்சியகம் வரலாறுகளை கட்சியப்படுத்துவதற்காக மாத்திரம் உருவாக்கப்படவில்லை, மாற்றமாக பார்வையாளர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவை வழங்குகிறது, இஸ்லாமிய பண்பாட்டை காட்சிப்படுத்துகிறது. மேலும் இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களுக்கு சரியான தெளிவைத் தருகிறது என குறிப்பிட்டார்.

ஜப்பானின் மற்றுமொரு விமான நிலையத்திலும் தொழுகை அறை!

ஜப்பானில் காணப்படுகின்ற ஏனைய பல விமான நிலையங்களைப் போன்று, ஜப்பான் மத்திய பிராந்தியத்தில் நகோயா நகரில் அமைந்துள்ள மிகப் பெரிய விமான நிலையமான சூபு சர்வதேச விமான நிலையமும் முஸ்லிம் பயணிகளுக்காக தொழுகை அறைகள் மற்றும் ஹலால் உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நரித்தா, கன்சை, நியூ சிடோசீ உட்பட ஜப்பானில் உள்ள பல விமான நிலையங்களில் முஸ்லிம்களை திருப்திபடுத்த,  தொழுகை அறைகள், ஹலால் உணவகங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது