ஒட்டு மொத்த தமிழர்களையும் அழிக்கும் மீத்தேன் திட்டம்.

மததன

    காவிரி டெல்டா தமிழகத்தின் இதயம் போன்றது. ஏனெனில் சென்னை, திருப்பூர், திண்டுக்கல், இராமேஸ்வரம் வரை குடிநீர் வழங்குவது இந்த டெல்டா

பகுதிதான்.

11,91,762 ஏக்கர் நெல் சாகுபடியும், 29,415 ஏக்கர் நிலக்கடலை சாகுபடியும், 14,429 ஏக்கர் எள் சாகுபடியும், 1,76,802 ஏக்கர் பச்சைப் பயிறு சாகுபடியும், 3,37,029 ஏக்கர் உளுந்து 31,391 ஏக்கர் கரும்பு சாகுபடி என தமிழகத்திற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் மகத்தான பங்கு காவிரி டெல்டாவிற்கு உண்டு.

புதுவை ௲ பாகூர் முதல் நெய்வேலி, ஜெயங்கொண்டம், சோழபுரம், கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், அடியக்கமங்களம் முதல் மன்னார்குடி வரை 1,70,000 ஏக்கர் நிலப்பரப்பில் மீத்தேன் ௲ நிலக்கரி இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக ONGC என்ற நிறுவனம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி மேற்கூறிய இடங்களில் ஆழ்த்துளை பைப்புகளை பதித்து வருகிறது.

இந்த கொடிய திட்டத்திற்கு முந்திய தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. விவசாயிகளின் எதிர்ப்பு எழுந்தவுடன் தற்போதைய தமிழக அரசு ஆய்வுக் குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யக் கூறியது 8 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால் மீத்தேன் எடுப்பதற்காக இந்தப் பகுதிகளில் ONGC நிறுவனம் தொடர்ந்து குழாய்களை அமைத்து வருகிறது.

2500 அடிக்கு கீழ் உள்ள நீர் அனைத்தையும் வெளியேற்றி விட்டு நிலக்கரியின் இடுக்குகளில் உள்ள மீத்தேன் வாயுவை வெளியில் எடுப்பதற்காக நீரியல் விதிமுறை (Hydraulic fracture) எனும் புதிய தொழில் நுட்பத்தைக் தொண்டு ஈயம், யுரேனியம், ரேடியம், மெத்தனால், பென்சீன், சயனைடு மற்றும் Btex  எனும் 600 வகையான விஷம் கலந்த இரசாயன கலவையை பூமியில் செலுத்தி மீத்தேன் வாயுவை எடுக்க உள்ளனர். மீத்தேன் வாயுவை எடுக்கும் போது 3040  சதவீத விஷம் கலந்த இரசாயனத்திலிருந்து மீத்தேன் பிரிக்கப்பட்டு மீதமுள்ள இரசாயன கலவைகளை நிலத்திலும், ஆற்றுபடுகைகளிலும் விடத் திட்டமிட்டுள்ளனர். மேலும்அவைகள் பூமியிலேயே தங்கிவிடும் இந்த விஷத்தால் (இரசாயன கலவைகளால்) நிலத்தடி நீர், சுவாசிக்கும் காற்று, நீர் திவளைகளாக வலம் வரும் மேகம், விவசாய நிலம் அனைத்தும் விஷமாகும்.

     இந்த கொடிய திட்டம் நிறைவேற்றப்பட்டால்... தஞ்சை, நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் வசிக்கும் 50,00,000 மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவர். இவர்களுடன் 30 லட்சம் பசுக்கள், 6லட்சம் எருமைகள், 27 லட்சம் ஆடுகள், 2.5 கோடி கோழிகள், இன்னும் லட்சகணக்கான பறவைகள் என பல்லுயிர்களும், இயற்கை வளங்களும் அழிந்துவிடும் பேரபாயம் ஏற்படும்.

  1.      

$1·        தர்மபுரி முதல் கடலுர், பூம்புகார் வரை நிலத்தடிநீர் விஷமாக மாறும்.

$1·        இங்கு வசித்துவரும் மக்கள் குடிநீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஆகியவற்றால் அகதிகளாக வெளியேறும் நிலை உண்டாகும்.

$1·        மக்கள் புற்றுநோய், மூளை கோளாறு, தோல் நோய், கண் பார்வை                   இழப்பு, சுவாசக்குழாய் பாதிப்பு, ஈரல் பாதிப்பு என பல்வேறு நோய்களுக்கு ஆளாவார்கள்.

$1·        நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அடிக்கடி நிகழும்.

$1·        கலை கலாச்சாரம் என வாழ்ந்து வரும் நம் தமிழ் இனம் முற்றிலும் அழிந்துவிடும்.

இத்திட்டத்தால் முதலில் பாதிக்கபடுவது மேற்கூறிய நான்கு மாவட்டங்கள் என்றாலும், நமது நிலத்தடி நீர் பரவலாக தமிழகம் முழுவதும் விஷமாகிவிடும். நீர் திவளைகளை சுமந்து செல்லும் மேகமூட்டங்கள் மழை பெய்யும் இடங்களில்  நோயினை பரப்பும் அபாயம் உள்ளது.

      ஒட்டு மொத்த தமிழகத்தையும், தமிழர்களையும் அழிக்கும் இந்த கொடிய திட்டம் வேண்டவே வேண்டாம் எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம், ஆர்பாட்டம், போராட்டம் என தனது வாழ்வின் இறுதி நாட்களை போராட்டக் களத்திலேயே கழித்த அமரர் கோ.நம்மாழ்வார் மறைந்துவிட்டார். அவர் விதைத்த எண்ணங்களை உள்வாங்கிய சமூக அக்கரையுள்ளவர்கள் இக்கொடிய திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

  இந்த அரசு மக்களுக்காக இந்த மண்ணையும், நம்மையும் காக்குமா? நம்மை பலி கொடுத்து பன்னாட்டு கம்பெனிக்கு ஆதரவளிக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்.

                                                                                                                        A.அல்லீஸ்பாக்

                                     மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு