பெண் மகப்பேறு மருத்துவ நிபுணர் பற்றி!

   ஒரு காலம் இருந்தது அந்தக் காலத்தில் மருத்துவச்சி என்று சொல்லப்படுகின்ற பாட்டிமார்களின் உதவியை கொண்டு வீட்டிலேலே சுகப் பிரவசம் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் நம் தாய்மார்கள், நாம் எல்லோரும் பெரும்பாலும் அப்படித்தான் பிறந்திருப்போம், ஆனால் இன்று கருவில் குழந்தை

உருவான நாள் முதல் குழந்தை இந்தப் பூமியை தொடும் காலம் வரை எந்த நேரமும் நம் பெண்கள் மகப்பேற்று மருத்துவரையே நாடும் அதிஅவசிய வைத்திய தேவையை கொண்டுள்ளார்கள்.

கணவன்மார்கள் யாரோ ஒரு அந்நிய ஆணிடம் அல்லது பெண்ணிடம் தன் மனைவிமார்களை மகப்பேற்று மருத்துவ ரீதியான அத்தனை செக்கப்புகளுக்கும் அழைத்துச் சென்று செக்கப் முடியும் வரை வெளியில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வைத்தியர் என்ற ரீதியில் அந்நிய ஆணாக இருந்தாலும் அது தவறான விசயமல்ல. ஆனால் ஒரு கணம் நாம் அனைவரும் சிந்திக்க கடைமைப் பட்டுள்ளோம். 10754877-a-pretty-muslim-woman-doctor-checking-syringeஅதாவது இந்த விசயத்தில் முஸ்லிம் பெண்மருத்துவர்கள் இருந்தால் அது எவ்வளவு பெரிய ஆறுதலான ஒரு விஷயமாக இருக்கும்.

மகப்பேற்று மருத்துவம் என்பது வெறுமையாக ஒரு தொழில் மாத்திரமல்ல அது ஒரு பெரிய சமூகப்பணி. இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பர்ளு கிபாயா என்ற பார்வையில் ஒரு நகரத்தை சுற்றியுள்ள ஒட்டு மொத்த சமூகமும் மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆகவே அந்த சமூகப்பணிக்கு நமது பெண் பிள்ளைகளையும் நாம் படிக்க வைக்க வேண்டும், அவர்களை அத்துறைகள் சர்பாக ஊக்குவிக்க வேண்டும்.

ஆனால் பொதுவாக முஸ்லிம் பெண்கள் மருத்துவத் துறையில் மகப்பேற்று சிகிச்சை நிபுணர் துறையை தேர்வு செய்வதில் நாட்டம் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கு முக்கியமாக கருதப்படுவது இந்த மகப்பேற்று துறையானது அதிகளவாக சிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதனாலும்,பெண்கள் இளகிய உள்ளத்தினை (செசிடிவ்) கொண்டதினாலும், இஸ்லாமிய சமூகம் என்ற பார்வையில் பர்ளு கிபாயா என்ற கடமையின் அடிப்படையில் பெண் மகப்பேற்று மருத்துவரின் தேவையை பற்றி இஸ்லாமிய மார்க்கச் சட்டம் சொல்லும் ஆனித்தரமான கருத்துக்களை அறியாதவர்களாக நமது சமூகம் காணப்படுவதினாலும் நமது சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு கூட பெண் மகப்பேற்று மருத்துவர்களின் சேவையினை பெற முடியாதவர்களாக நமது சமூகத்தினர் காணப்படுகின்றனர்.

சாதாரனமாக நாம் மிகத் தூய்மையாகவும் உணர்ச்சிகரமாகவும் இஸ்லாத்தை பின்பற்றுவர்களாக, நமது பெண் பிள்ளைகளையும், தாய்மார்களையும் , மனைவிமார்களையும் இஸ்லாத்தின் வரையறைக்குள் வாழவைத்தது மட்டுமல்லாமல், அந்நிய, மஹ்ரமியான ஆண்களுக்கு மத்தியில் நமது பெண்களை இஸ்லாமிய முறைப்படி ஆடையனியச்செய்து வெளியில் அழைத்துச் செல்கின்றோம். ஆனால் கர்ப்பம் என்றோ, மகப்பேறு என்றோ வந்துவிட்டால் நமக்கிருக்கும் இஸ்லாமிய உணர்ச்சி, பாசம், சமூகநோக்கு என்பவற்றை புறம்தள்ளிவிட்டு அந்த அந்நிய மஹ்ரமியான ஆண் வைத்தியரின் அரைக்குள் எமது மனைவியையோ, சகோதரியையோ செக்கப் என்ற அந்த வைத்திய தேவை கருதி இருக்க வைக்கிறோம், மருத்துவ தேவைக்காக குற்றம் இல்லாவிட்டாலும் எத்தனை நாளைக்கு இதையே காரணமாக சொல்வது? சமூகத்திற்கு செய்ய வேண்டிய பணி என்ற அடிப்படையில், இதற்கு ஒட்டு மொத்த சமூகமே பர்ளுகிபாயா என்ற வகையில் பொறுப்பு கூற வேண்டும்.

நமது சமூகத்தில் அதிதிறமை வாய்ந்த மாணவிகள் காணப்படுகின்றனர்., அவர்கள் வைத்தியராகவும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் மேற்கூறிய முக்கிய காரணங்களினால் மகப்பேற்று நிபுணர்களாக தங்களது மேற்படிப்பினை மேற்கொள்வதில் முற்றிலும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் திறமையான மாணவிகள் நமது பிரதேசத்தில் இருந்தும் அவர்களின் குடும்ப பொருளாதார நிலை கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை காரணமாக மளுங்கடிக்கப் படுகின்றார்கள்., ghtfrஇதை முற்றிலும் உணர்ந்த நமது சமுதாய அறிஞர்களும், தலைவர்களும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் தலை சிறந்த மகப்பேற்று மருத்துவ நிபுணர்களாக நமது பெண்கள் உருவாவதற்கு  முயற்சி செய்யவேண்டும்.

இந்த பிரச்சனைகள் ஒரு புறமிருக்க, இது சமூகத்திற்கு அவசியமான பணி என்ற அடிப்படையில் நமது சமூகத்தில் இருக்கும் செல்வந்தர்கள் மட்டுமல்லாது ஒருமித்த குரலுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது சமூகத்தில் மகப்பேற்று மருத்துவ  நிபுணராகும் கணவுடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவிகளை இனம்கண்டு அவர்களுக்கு பொறுப்பெடுத்து அவர்களில் ஓரிருவரையாவது உயரிய சமூக நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு பெண் மகபேற்று மருத்துவ நிபுனர்களாக உருவாக்க வேண்டும். இது எங்களது ஆசை மட்டுமல்ல, சிசேரியன் என்று காரணம் சொல்லி வியாபார நோக்கில் பெண்களின் வயிற்றை கிழித்து அவர்களை சுகவீனப்படுத்துவது ஒரு புறம், சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பை மட்டுப்படுத்தும் போக்கும் பெருகி வருகிறது. இந்த அபாயகரமான சிசேரியன் முறையை ஒழிக்க வேண்டும். எனவே மனித சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டுள்ள நமக்கு தலை சிறந்த பெண் மகப்பேறு மருத்துவ நிபுணர்களாக நமது பெண்மக்களை உருவாக்குவது மனித சமூகத்திற்கு அடிப்படையான, அவசியப் பணி.

அஹ்மது இர்ஷாத் – முஹம்மது புஹாரி.