பழகும் பாங்கு...

    Speakig-imageவளர்ச்சியடைந்த மனிதன் என்பதன் அடையாளது? அவரின் உருவமா? பருமனா? அவர் அணியும் ஆடையா? அவர் பெற்றுள்ள கல்வியா? எது ஒருவரை நன்கு வளர்ந்தவர், உயர்ந்தவர் என அடையாளப்படுத்தும் காரணி? அவரிடம் இருந்துள்ள பணம், செல்வம், பகட்டா?! இவை எதுவுமில்லை! இஸ்லாம் ஒவ்வொரு தனி மனிதரையும் கூட வளர்ச்சி பெற்றவராக, வளர்ச்சி காண்பவராகவே அடையாளப்படுத்துகிறது. இஸ்லாமின் வெற்றிகளில் இதுவும் ஒன்று. ஆம் எதிரும் புதிருமாக இரண்டு மூமின்கள் சந்தித்தால் கூறப்படும் சலாம் அலைக்கும், வ அலைக்கும் சலாம் என்று பரிமாறப்படும் சொல்லாடல் சக்திமிக்கது இரண்டு உயர்திணைகளான மனிதர்கள் ஓருயிராக மாறும் இடம் அந்தச் சந்திப்பு.
பகைமை கூட சில நாட்கள்தான் பாராட்டப்பட வேண்டும் என்ற அறிவுரை உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் விதிகளாகவே உள்ளது அற்புதம்.
     இவ்வாறு சக மனிதரோடு எவ்வாறு பழகுவது என்கிற பாங்கை இஸ்லாம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மார்க்கத்தின் மேன்மை தரும் பண்புகள். இதையெல்லாம் நுணுக்கமாக அறிந்து வாழ்வின் சகலத்திலும் அதை நடைமுறைப்படுத்தவும் இஸ்லாம் வற்புறுத்துகிறது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் முட்போர்வை போர்த்தப்பட்ட பலாக்கனி போன்றது இஸ்லாம். பழம் கனிந்து அதன் உள்ளே பொதிந்துள்ள சுளைகளின் இனிமையை இஸ்லாமிய நடைமுறை வாழ்க்கையில் பலர் அனுபவிப்பதைக் காணலாம்.
ஆனால் சக மனிதர்கள் நம் சமூகத்தோடு பழகுவதில் ஏதேனும் வார்த்தைகள் (தடித்தால்) கடிந்தால் சிக்கல் சூழ்கிறது.
இப்படித்தான் கற்றறிந்த மேதை, கல்வியாளர் ஜமீருத்தீன் ஷாவை கல்வித் தகுதிகளுக்காக பாகிஸ்தான் லாகூரில் உள்ள பல்கலைக் கழகமொன்றுக்கு அழைத்தனர்.
         ஜமீருத்தீன் ஷா அலிகர் பல்கலையின் துணை வேந்தர், அவர் விழாவில் பேசும்போது :
‘பெண்கள் உள்ள இடத்தில் அவர்களை விட நான்கு மடங்கு ஆண்கள் கூடுவார்கள்’ அதனால்தான் அலிகர் பல்கலைக் கழக நூலகத்திற்குள் கடந்த 58 ஆண்டுகளாக பெண்களை அனுமதிப்பதில்லை என்றார். இந்தப் பேச்சு சகல பாகிஸ்தான் ஊடகங்களிலும் வெளியானவுடனே அதைப் பார்த்த சட்டம் பயிலும் மாணவி ஒருவர் இந்தியாவில் ஜமீருத்தீன் ஷா மீது பெண்ணுரிமைக்கு எதிரானவர் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார். நீதிமன்றம் உடனே விசாரித்து மாணவிகளையும் நூலகத்திற்குள் அனுமதிக்க உத்தரவிட்டது. துனை வேந்தர் சற்று மட்டுப்படுத்திப் பேசியிருந்தால் சிக்கல் எழாது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது பா.ஜ.கவின் ஹெஜ்.ராஜா “மோடியை விமர்சிப்பதை வை.கோ. நிறுத்திக் கொள்ள வேண்டும். கூட்டணிக்குள் இருந்தவாறே கடுமையாக விமர்சிப்பதை எங்களால் ஏற்க இயலாது, தொடர்ந்து விமர்சித்தால், அவர் வீடு திரும்பமாட்டார்” என சகிப்புத்தன்மையற்ற பேச்சைப் பேசவும் எதிர் விமர்சனங்கள் கடும் கண்டனங்களாக எழுந்தன. வை.கோ. பழுத்த அனுபவமுள்ள பாராளுமன்றவாதி, ஆணித்தரமான அவரின் கம்பீரக் குரலால் 25 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயே ‘மைடியர் சன்’ என வாஞ்சையோடு வை.கோ.வை அழைக்கும் அளவுக்கு பலரிடம் நட்பு பாராட்டும் பண்பு நலன் உள்ளவர். சுயமரியாதைக்காரர். அத்தகையவரே மோடியை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விமர்சிக்கும் நிலைக்கு போகக் காரணம் மோடிதான். நமக்குக் கிடைத்த தகவல்படி பிரதமரை சந்திக்க கடந்த ஆறுமாதமாக முயற்சித்தும் சில சக்திகள் அந்த சந்திப்பை நிகழ்த்தவிடாமல் தடுக்கின்றன. அந்தக் கோபத்தில்தான் வை.கோ. பிரதமரை விமர்சித்தார்.
        நாளுக்கு நாள் வை.கோ. வினுடைய விமர்சனத்தின் விளைவாக கூட்டனிக் கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்திக்க முட்டுக்கட்டை போடப்படும் விவகாரம் வெளியே தெரிந்தால் ரசபாசமாகிவிடும் என்பதால் பா.ஜ.கவின் பகிரங்க உத்தியான திசை திருப்பும் செயலையே ராஜாவும் செய்தார் என்பது போல் டெல்லி தகவல் கூறுகிறது. இதை உணர்ந்துதான் வை.கோ. வும் இந்தப் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம் என்று கூறியவர். கூட்டனியில் முதலில் சேர்ந்த அவரே ஆறே மாதங்களில் முதலாவதாக வெளியேரியவராகவும் ஆகிவிட்டார்.
இங்கும் பழகும் பாங்கில் தவறான சொல் பிரயோகமே முதன்மையாக உள்ளது.
     உ.பி. சாமியாரினி எம்.பி. “ராமனுக்கு பிறந்தவர்கள், பிறக்காதவர்கள் என சர்ச்சைக்குரிய பேச்சைப் பேசி வாங்கிக் கொண்டார்.”
     பிரவீன் தொகாடியா 82% உள்ள இந்துக்களின் எண்ணிக்கையை 100% ஆக்கப் போகிறோம் என்று கூற நாடாளுமன்றமும், மக்களவையும் முற்றாக முடங்கியது. தேர்தலுக்கு முன்பு என்னென்ன வாக்குறுதிகள் வழங்கினார்களோ அது பற்றி மக்கள் பரவலாக முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர். மக்களை தங்கள் விவகாரத்தைப் பற்றி யோசிக்க விட்டாலோ, பேச விட்டாலோ ஆபத்து என்பதால் ஒட்டுமொத்த நினைப்பையும் திசை மாற்றி விட மத மாற்றம் என திசை திருப்பல் நாடகத்திற்கு துணிந்துள்ளனர்.
சாத்தான்கள் என்றும் வேதம் ஓதாது!
க. குணசேகரன்.