ஆசிரியர்கள் – மணவர்கள்

advice for teachers to help prevent misbehavior in their classroom
பள்ளிக் கூடங்கள், பலிகூடங்கள் ஆகிவிட்டன குழந்தைகளை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளும் அதிகாரம் படைத்தவர்களாக இன்றைய கல்வி அமைப்பு ஆசிரியர்களை வைத்திருந்தது. நமது குழந்தைகளின் அறியிவில் யாவரையும் விட சிறந்தவை. திண்டிவனம் எனும் ஊரில் ஒரு கல்லூரி மாணவர் பாம்புக் கடிக்கு மாற்று மருந்து தயாரித்து அதை தனக்கே சுய சோதனை செய்து பார்த்து உயிர்விட்ட உண்மை நிகழ்வை “ஆயிஷா” என்ற எனது நூலில் நான் விதைத்திருந்தேன்.
இன்று அறிவு இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. கைபேசி போதும் அறிவுத்தேடல் நடத்த. சமீபத்தில் ஒரு புத்தகம் வாசித்தேன். தலைப்பே அதிர்ச்சி தந்தது. "என்னிடம் கூகுல் இருக்கும் போது எனக்கு ஆசிரியர் எதற்கு?" என்று.
ஒரு ஆசிரியர் தனது பாடம் சார்ந்த வல்லுனராக இருந்தால் மட்டும் போதாது. தனது சரியான வாழ்வின் மூலம் போதிப்பவரே ஆசிரியர். முதலில் இன்றைய ஆசிரியர் துடிப்பான, விழிப்பான குழந்தை உரிமைப் போராளியாக இருக்க வேண்டும். குழந்தை நலன்கள் குறித்து அறிந்த சிறப்பு வல்லுனர்களே வெற்றி பெற்ற ஆசிரியர்களாக இருக்க முடியும்.
குழந்தைகள் பள்ளிக்கு வருவது அறிவைத் தேடி மட்டுமே அல்ல. படைப்பாக்கத் திறன் வளர்ச்சியும் குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவை. கல்விக்கு தேர்வு மதிப்பெண்களை கடந்து பிறதேவைகளும் உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் அவலத்தை உணர்ந்து கிளர்ந்தெழுதல், ஆபத்தில் உதவுதல், அநியாயத்தைப் பார்த்து நமக்கேன் வம்பு என கடந்து போகாமல் தட்டிக் கேட்பது... போன்ற மதிப்பெண்கள் கடந்த மதிப்பீடுகளும் மதிக்கப்பட வேண்டும்.
வகுப்பறையில் ஆசிரியரை விட இன்று மாணவர்களே அறிவில் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்பவராக ஆசிரியர் இருக்கிறாரா என்பது முக்கியம்.
உலக அளவில் கல்வி என்பதே நல உதவியாக உள்ளது. அரசுகளின் நல உதவிகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று சேர்ப்பதில் தனது கடமையை உணர்ந்தவராக அவர் இருக்க வேண்டும்.
தற்போது எப்படிப்பட்ட கல்வி உள்ளது என்று பாருங்கள். நம் கல்வியை அரசுகள் விலை கொடுத்து வாங்கும் ஒன்றாக வைத்துள்ளன. நமது பாரம்பரியம் அறுபட்டு ஆங்கிலேய மயமாகி எனக்குள் உங்களுக்குள் இருக்கும் சுயத்தை முற்றிலும் சிதைத்து ஒரு ஐரோப்பியனைப் போல நாடகமாடுவதையே வாழ்க்கையாக்கி கட்டமைக்கும் பாசாங்கான முரட்டு பயிற்சி என்பதை தவிர வேறு என்ன?
ஆயிஷா நடராஜன்.