உலகை அழிக்க வரும் 900 சாத்தான்களும், ஒரு மைக்ரோ சாஃப்ட் கிருமியும்!

Untitled-2இத்தாலியின் வெனிஸ் நகர வீதிகளில் காணும் இடமெல்லாம் இத்தாலி மார்பிள் கற்களால் விதவிதமான சிற்பங்களைக் காணலாம். மைக்கேல் ஏஞ்சலோவும், லியானார்டோ டாவின்சியும் தங்கள் சிந்தனையாலும் சிற்றுளிகளாலும் இவற்றை வடித்தனர்.
அதில் குனிந்து சிறுநீர் பீச்சும் சிறுவனின் சிலையும் ஒன்று. அழகிய அந்த சிறுவனின் சிலையை தன்னுடைய மைக்ரோ சாஃப்ட் லோகோவாக உருவாக்கி அந்த சிலைச் சிறுவனை தன்னுடைய அனிமேஷன் அற்புதத்தால் சம்பா நடனம் ஆட வைத்தவர் பில்கேட்ஸ்.
இக்காட்சியை உலகின் அனைத்து மூலைகளிலும் இயங்கும் கம்ப்யூட்டர்கள் காட்சிப்படுத்தின.
ஆப்பிள், ஐ.பி.ம். நிறுவனங்களை கம்ப்யூட்டர் வணிகத்தில் பின்னுக்குத் தள்ளி முன்னேறியவர் மைக்ரோ சஃப்ட்வேர் பில்கேட்ஸ். பில்கேட்ஸின் சஃப்ட்வேர் பயன்பாடு சகலரும் எளிமையாக உபயோகிக்கும் வகையில் அமைக்கபட்டிருந்தன. மைக்ரோ சஃப்ட்வேர் விண்டோஸ் பல சஃப்ட்வேர்களை பின்னுக்குத் தள்ளியது. மேலு மேலும் புதிய புதிய பயன்பாட்டாளர்களை ஈர்த்தது. பலரும் பணம் கொடுத்து பதிவிறக்கம் செய்ய சிலர் ஓசியில் விண்டோஸை பணம் தராமல் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
பில்கேட்ஸ் தனக்கு பணம் வராவிட்டாலும் உலகம் முழுவதும் கம்யூட்டர் வைத்திருப்போர் தன்னுடைய சஃப்ட்வேர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால் சஃப்ட்வேர் திருடர்களை அவர் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் ஆசியா, மற்றும் கிழக்காசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகளின் பிற சாஃப்ட்வேர் நிறுவனங்களின் விற்பனை சரிந்து உலகம் முழுவது பில் கேட்ஸின் மைக்ரோ சாஃப்ட்வேர் ஏகபோக விற்பனையானது. உலகம் மைக்ரோ சாஃப்டின் மீது அதீத ஆர்வம் கொண்டு பயன்படுத்தத் தொடங்கினார்கள். மைக்ரோ சஃப்ட்வேர்களை பயன்படுத்தியவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் போல விண்டோஸ் விரும்பிகளாக பில்கேட்ஸ் மாற்றிவிட்டார். அவர்களால் வேறு எந்த சஃப்ட்வேர்களையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து விண்டோஸ் எக்ஸ்பி எனும் எக்ஸ்ப்ளோரர்களை தற்போது விண்டோஸ் 8 வரை களம் இறக்கி விண்டோஸ் போதைக்கு அடிமையானவர்களால் பில்கேட்ஸ் தொடர்ந்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் நிலையாக நின்றார்.
பில்கேட்ஸ் மனம் புளிக்கும் அளவுக்கு பணம் அவரை இட்டுச் சென்றது. கூடவே ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர் மறைவு பில்கேட்ஸ் சங்கடப் படுத்தியது. சஃப்ட்வேர் வணிகத்தில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக விளங்கிய பில்கேட்ஸ். நம்ம ஊர் அசோகரைப் போல் ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெற்றதும் தன்னுடைய நிதி மூலதனத்தில் சுமார் 23 மில்லியன் டாலர்களைக் கொடுத்து உலகின் மண் வளத்தை சீரழிக்கும் மான்சாண்டோவின் 5 லட்சம் பங்குகளை வாங்கி விட்டார்.
உலகெங்கும் மைக்ரோ சஃப்ட் நிறுவனம் இலட்சக் கணக்கான சஃப்ட்வேர் பொறியாளர்களை படை வீரர்களாக கொண்டு அதிரடி யுத்தம் நடத்தி சஃப்ட்வேர் சாம்ராஜ்யம் நடந்தது. தற்போது அதேபாணியில் உணவு உற்பத்தி செய்து உலக மக்களின் பசியைப் போக்க இருப்பதாக பில்கேட்ஸ் கூறுகிறார். இதற்கு மான்சாண்டோவில் உள்ள 900 பயோ டெக்னாலஜி விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கும் மான்சாண்டோவின் மலட்டு விதைகளை இந்த மண்ணில் விதைத்து விபரீதம் உருவாக்க பில்கேட்ஸும் இணைந்து கொண்டார். ஏற்கனவே வரண்ட ஆஃப்பிரிக்க நிலத்தின் குடிமக்களை குறைந்த கூலிக்கு மான்சாண்டோ சுரண்டுவதை ஐக்கிய நாடுகளின் பெண்கள் குழந்தைகள் அமைப்பு கண்டித்துள்ளது. இந்த நிலையில்தான் அந்த மக்களை மேலும் கசக்கிப் பிழிய பில்கேட்ஸ் முன்வந்தார்.
பில்கேட்ஸ் தந்திரசாலி தன் வேலைகளை கச்சிதமாக முடிக்க தன் அறக்கட்டளை வழியே நிதி உதவிகளை கசிய விட்டு நீர் நிலைப்பகுதிகளில் வாழும் விவசாயிகளை தாஜா செய்யும் வேலைக்கு பலரை இறக்கியுள்ளார். விண்டோஸை இலவசமாக பதிவிறக்க செய்ய விட்டு மக்களை மயக்கியது போல நாளை விலையில்லா மான்சாண்டோ விதைகள் தந்து விவசாயிகளை ஒரு மயக்க நிலைக்கு ஆழ்த்த பில் கேட்ஸ் முடிவு செய்து விட்டார்.
நம்மூரிலும் சிலதுகள் பில்கேட்ஸ் அறக்கட்டளை உதவி என சொல்லித் திரிகின்றன.
மலட்டு விதைகள் பரவி உரிய உணவு இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளவும், இறக்குமதியை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திடவும் கார்ப்பரேட்டுகள் போடும் திட்டத்தின் வெளிப்பாடுதான் இது.
முதலாளித்துவம் தன்னுடைய பெரும் பணத்தை ஏழைகளை வஞ்சிக்கவும் அவர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்கள் சிந்தும் வியர்வையை தன்னுடைய இலாப வேட்டைக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சித்துக் கொண்டிருக்கும் பில்கேட்ஸ் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஐம்பூதங்கள் அழிவதைப் பற்றி கவலை இல்லை. இலாபம் மட்டுமே அவர்களுக்கு வெறியாக உள்ளது.
இப்போது ஏற்கனவே மான்சாண்டோவின் மலட்டு விதைகள் பல லட்சம் விவசாயிகளை தற்கொலை மூலம் காவு வாங்கியுள்ளது. பில்கேட்ஸின் மூலதனம் இந்த உலகிற்கு இன்னும் கூடுதலாக மலட்டு விதைகளை மான்சாண்டோவின் பண்ணை வயல்களில் உற்பத்தி செய்து உலகெங்கும் அந்த விஷ விதைகளை விநியோகம் செய்யத் திட்டமிடுவார்கள். இன்னும் சில விவசாயிகள் இதுவரை இந்த விதைகளை வாங்காமல் சுயமரியாதையோடு தங்கள் சொந்த விதைகளை விதைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். தன்னுடைய சஃப்ட்வேர்களை மட்டுமே உலகம் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படைவாத கொள்கையுள்ள பில்கேட்ஸ் மான்சாண்டோவின் இலவச விதைகளை தாராளமாக விநியோகிப்பதன் மூலம் விண்டோஸ் சஃப்ட்வேரை வழங்கி கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரை அடிமையாக்கியது போல் மான்சாண்டோவின் மலட்டு விதைகள் விண்டோஸ் போல உலகெங்கும் விளை நிலங்களை சீரழிக்கும்.
இனி உலகில் போர்கள் நடத்திட வழியில்லை. இன்று நாடுகள் பலவும் சமஆயுத பலத்தில் உள்ளன. எனவே அழிவிலிருந்து ஐரோப்பிய நாடுகளின் ஆக்கங்கள் வளர்ச்சி காண இன்றைய தேவை “பசிப் போர்.” உயிருடனும் நுகர்வு வெறியுடனும் மனிதர்கள் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பசியுடன் அவர்கள் சுழல வேண்டும். அப்போதுதான் தரம் பார்க்காமல் கிடைப்பதை உண்பார்கள். இந்த திட்டத்தின் அடிப்படையில் தான் மான்சாண்டோ உபரி உற்பத்தி விதை என்று பொய் சொல்லி வளரும் நாடுகளை ஏமாற்றி வருகிறது.
1960 களில் நம்மூர் சுவாமிநாதன்களும் இந்திய அரசையே ஏமாற்றி பசுமைப் புரட்சி என்ற போர்வையில் இங்கு உரம் பூச்சி மருந்துக் கொல்லிகளை இறக்கினர். இதன் பலன் பல மருத்துவமனைகள் நாடெங்கிலும் திறக்கப்பட்டு மருந்துக் கம்பெனிகள் செழித்தன.
மேலும் இனி வரும் காலத்தில் எப்படியாவது பிடி விதைகளை களமிறக்கி இந்திய மண்ணை ஆக்ரமிப்பு செய்ய உள்ளனர்.
இதற்காக மைக்ரோ சஃப்ட் கிருமியான பில்கேட்ஸுடன் மான்சாண்டோ பயோ டெக்னாலஜியின் சாத்தான்கள் 900 பேரும் களம் இறங்கி விட்டன.
உலகம் என்னவாகப் போகிறதோ...?
- க.குணசேகரன்