எங்கே போனார்கள்?

Maulana Abul Kalam Azadமோடியின் அமைச்சரவை சாதனைகளைப் பார்த்தாலே அவர் ஆட்சியின் லட்சணம் தெரியவரும். குறிப்பாக மோடி நினைக்கும் வளர்ச்சியைப் பெற மனிதவளத்தை முறையாகப் பயன்படுத்திட திட்டமிடும் அமைச்சர் தேவை. ஆனால் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டவர், அழகானவர், சீதையாக நடித்தவர் என்ற ஒரே தகுதியில் ஒரு சீரியல் நடிகையை சீரியசான துறைக்கு அமைச்சராக்கினார். இதை நம் நாட்டு ஜாம்பவன் கல்வியாளர்கள் எவரும் கேள்வி கேட்கவில்லை.
மௌலான அபுல்கலாம் ஆசாத்தின் திட்டத்தால் உயர் கல்வி வளர்ச்சிக்கு உதவிட ஏற்படுத்தப்பட்ட பல்கலைக் கழக மானியக்குழு அதில் இடம் பெற்றிருந்த ஒரு சில மானமுள்ள கல்வியாளர்கள் மட்டும். அமைச்சரை எதிர்த்து குறிப்புகளை எழுதவும் அமைச்சர் நடிகை டென்ஷனாகி ஷுட்டிங்கை ரத்து செய்வது போல் யு.ஜி.சியை கலைக்கும் முடிவுக்கு வந்தார். அப்போதும் யாரும் வாய்பேசவில்லை.
இரண்டு முறை பாராளுமன்ற தேர்தலில் தன் விண்ணப்பத்தில் முன்னுக்குப்பின் முரணாக ஙி.sநீ, ஙி.சிஷீனீ என குளறுபடி செய்த ஆவணங்கள் அமைச்சரின் கல்வித் தகுதியை கேலி செய்தன. அதையும் எவரும் கேள்வி கேட்கவில்லை. தற்போது மத்திய உயர்கல்வி அமைச்சரின் கல்வித் தகுதி முரண்கள் நீதிமன்ற விசரனையில் உள்ளது. இப்போதும் எவரும் வாய் திறக்கவில்லை.
இந்தியாவில் 600 பல்கலைக்கழகம் 30,000 த்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் நிபுணர்கள், பிரபலமான கல்வியாளர்கல் என ஆயிரக் கணக்கில் உள்ளனர். அத்தனை பேரின் மனசாட்சியும் என்னவானது.
ஏன் பிரபலமான கல்வியாளர்கள் நேர்மையாளர்கள் இது குறித்துப் பேசவில்லை எல்லோர் மனமும் அழுக்கடைந்துள்ளது!
தங்கள் தவறுகள் மறைந்து விட தவறான தலைமையே சரியானது என்ற எண்ணம் போலும். அவர்களின் சிந்தனையே சீழ்பிடித்து விட்டதோ?
அமரர் ஜெயகாந்தன் கூறுவார். மக்களும் அவர்தம் மனமும் எவ்வாறோ? அவ்வாறே அவர்களுக்கு தலைமை ஏற்பவர்களும் அமைவார்கள் என்பார். இன்று நாடே அவ்வாறுதான் உள்ளது. நல்லவர்கள், வல்லவர்கள், நேர்மையாளர்கள், எங்கே போய்த் தொலைந்தார்கள்?