பசு மாடும் பண்டைய கலாச்சாரமும்

thequint2F2015-102Fc9461528-4d71-44f8-b66e-10bd873139b22FCow bas relief in Mamallapuram

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் டி.என்.ஜா புனிதப் பசுவைப் பற்றிய ஆய்வுகளை நூலாக வெளியிட்டுள்ளார். அந்நூலின் பெயர் ஙிணிணிதி மிழி மிழிஞிமிகி ஞிமிணிஜிகிஸிசீ  சிளிழிஞிமிஜிமிளிழிஷி இந்திய உணவு முறைகளில் மாட்டிறைச்சி.

இந்திய வேதங்கள், வரலாற்று நூல்கள் என ஆய்வு செய்து நூலை எழுதியுள்ள பேராசிரியர் நூலை வெளியிடுவதற்கு முன்பாகவே தொலைபேசி வழியாக எச்சரிக்கப்பட்டார். துணிச்சல் காரரான பேராசிரியர் “ஒரு கலாச்சார யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்வியாளர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்த விவகாரத்தில் பங்காற்றுவதற்கான வாய்ப்பும் அவசியமும் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

பேராசிரியர் தமது நூலுக்கு எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்துத்தான் களத்தில் இறங்கினார். ஆனால் நெருப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தம் தொண்டர்களிடம் நூல்களை பறிமுதல் செய்து நெருப்பிட்டு கொளுத்துமாறு ஆணையிட்டனர். அதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியும் களத்தில் இறங்கி இருக்கிறது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். ரவாத் மத்திய உள்துறை அமைச்சரிடம் தடை விதிக்க வற்புறுத்தியுள்ளார்.

தடை விதித்தால் மட்டும் போதுமா? நூலை எழுதியவரையும் அதை வெளியிட்ட சி.பி. பதிப்பகத்தாரையும் கைது செய்து வழக்குத் தொடர வேண்டும் என ஆர்.எஸ். ரவாத் கோரியுள்ளார்.       

பேராசிரியர் டி.என்.ஜா ஆய்வுகளில் இறைச்சியுண்டவர்களின் பட்டியலில் பிராமணர் மட்டுமல்ல சமணரும் பவுத்தரும் வருகின்றனர்.

சமண மதத்தை நிறுவிய மகாவீரரும் இறைச்சி உண்டவரே என பேராசிரியர் ஆதாரத்துடன் கூற கொதித்துப் போன ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஜைன சங்கத்தினர் நீதிமன்ற தடையாணை கோரியுள்ளனர்.

மதங்களை வளர்க்க புலால் உண்ணாமையை முன்னெடுத்தபோதுதான் பிற்காலத்தில் மும்மத முதன்மையாளர்களுக்கு இறைச்சி விலக்கப்பட்டுள்ளது.

புத்தர்காலத்தில் பலவகையான இறைச்சியும் உணவாக இருந்துள்ளது. புத்தரே பன்றிக் கறி உண்டதால்தான்வயிற்றுப் போக்கு வந்து மரணித்ததாக வரலாறு கூறுகிறது.

இலங்கையில் வாழும் சிங்கள மக்களும் பவுத்தர்கள்தான் அவர்களோ  கொல்லாமை கடைபிடிக்காமல் எல்லா வகையான இறைச்சிகளையும் உண்டு வருகின்றனர்.

பேராசிரியர் பல பண்டைய நூல்களைத்தான் ஆதாரமாக வைத்துள்ளார். “என் நூலுக்கு தடை கோரும்போது நான் எனது நூலுக்கு ஆதாரமாக அவர்களின் வேதங்களையும் உபநிஷத்துகளையும் சூத்திரங்களையும் மேலும் காப்பியங்களையும் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவேன்.

அப்போது இவர்கள் என்ன செய்வார்கள்?” என்னிடம் ஆதார நூல்கள் குவிந்து கிடக்கிறன. அவர்களிடம் குருட்டுத்தனமான நம்பிக்கைகள்தான் குப்பை மேடாக உள்ளன” எனக் கூறும் பேராசிரியர் பீகாரைச் சேர்ந்த ஆச்சாரமான மைதிலி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது..

‘பசு பாதுகாப்பு இயக்கம்’ என தயானந்த சரஸ்வதியால் பதொன்பதாம் நூற்றாண்டில் ஓர் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் பசு ஒரு புனிதப் பிராணியாக போற்றப்படவில்லை. அது தொழுவத்தில் இருந்தது. தொழப்படவில்லை.

பசுவை பலிப் பிராணியாக பிராமணர்கள் கொண்டாடியதை நமது மணிமேகலை கதைகதையாக கூறுகிறது.

சோழ நாட்டுப் பார்ப்பணர் ஒருவர் ஆபுத்திரன் எனும் அனாதைச் சிறுவனை வளர்த்து வந்தார். ஆபுத்திரன் ஏற்கனவே ஒரு பவுத்தத தெருவிலே வாசம் செய்தவன். அவனுக்கு பவுத்த நெறிகள் பலவும் தெரியும்.

வளர்ப்புத் தந்தையான வைதீகப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்ய பசு ஒன்றைக் கொண்டு வந்து தோட்டத்தில் கட்டி வைத்தார். பிராமணர்களிடம் அப்போது கொல்லாமையும் புலால் உண்ணாமையும் வரவில்லை. பவுத்தரிடமும் சமணரிடமும் வந்திருந்தது. எனவே பவுத்த நெறி அறிந்த ஆபுத்திரன் அநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து காட்டிற்கு ஓட்டிவிட்டான்.

பிறகு உண்மையறிந்த பார்ப்பனர் ஆபுத்திரனை வீட்டை விட்டும் விரட்டி விட்டனர். ஆபுத்திரன் ஆதரவற்றவன் ஆனான். எனவே அவன் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். பார்ப்பனர் யாரும் ஆபுத்திரனுக்கு பிச்சை போடவில்லை. கொலை வேள்வி நிறைவேறி பசுக் கறியை பெறாமல் போனதற்கு ஆபுத்திரன்தான் காரணம் என்பதால் பார்ப்பனர்கள் பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் போட்டனர். ஆபுத்திரன் பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான். (மணிமேகலை : 13 ஆம் கதை)

பேராசிரியர் டி.என்.ஜா வடக்கத்திய நூல்களிலிருந்து ஆதாரங்களைக் கூறும் போது நாம் தெற்கத்திய நூல்களிலிருந்து ஆதாரங்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளோம். 

அடுத்து மேலும் ஒரு ‘மணிமேகலை’க் காப்பியக் காட்சி தொடர்கிறது.

கௌசிகன் எனும் வைதீகப் பார்ப்பனர் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தார். ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் கௌசிகன் வயிற்றைக் குத்திக் கிழித்துவிட்டது. கொலை வேள்விக்காக அப்பசுவைக் கொண்டு வந்திருப்பான் போலும்.

கௌசிகன் அருகிலிருந்த சமணப் பள்ளிக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறான். சமணர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வி செய்வோரையும் வெறுத்தவர். ஆதலின் அவற்றுக்கு மூல காரணமானவனுக்கு உதவி செய்ய உடன்படவில்லை. அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.  (மணிமேகலை : 5 ஆம் கதை)

அக்காலத்தில் சமணர்கள் ஆன்மீகப் பணியோடு கல்விப் பணியும் மருத்துவப் பணியும் செய்து வந்தார்கள் என்பது குரிப்பிடத்தக்கது.

அவர்கள் மக்களிடம் உணவுதானம் மட்டும் பெற்று வந்த வேளையில் பார்ப்பனர்கள் கோதானம் பூதானம் சுவர்ண தானம் பெற்று வந்தனர். இந்த மூவகை தானங்களாலேயே பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தார்கள். நஞ்சையும் புஞ்சையும் பெற்று தஞ்சை போன்ற பகுதிகளில் நிலக்கிழார் ஆனார்கள்.

வேர்களைத் தேடி நாம் பயணிக்கத் தொடங்கினால் மாட்டிறைச்சிக்கு எதிராக அட்டைக் கத்திகளைத் தூக்கிக் கொண்டு நிழல் யுத்தம் செய்வோர் அடங்கி விடுவர்.

சமணத்தையும் பவுத்தத்தையும் அழித்த கதையை அம்பலத்துக்கு கொண்டு வந்தால் நமக்கு எச்சரிக்கை கிடைக்கும். அவர்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவர். அதற்குரிய காலம் தொலைவில் இல்லை.

சமணர்கள் அல்லர் முஸ்லிம்கள், பவுத்தர்கள் அல்ல முஸ்லிம்கள் அவர்கள் அகில உலகத்தின் அங்கங்கள், மானுடச் சங்கமம்!

 தாழை மதியவன்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் டி.என்.ஜா புனிதப் பசுவைப் பற்றி ஆய்வுகளை நூலாக வெளியிட்டுள்ளார். அந்நூலின் பெயர் ஙிணிணிதி மிழி மிழிஞிமிகி ஞிமிணிஜிகிஸிசீ  சிளிழிஞிமிஜிமிளிழிஷி இந்திய உணவு முறைகளில் மாட்டிறைச்சி.

இந்திய வேதங்கள், வரலாற்று நூல்கள் என ஆய்வு செய்து நூலை எழுதியுள்ள பேராசிரியர் நூலை வெளியிடுவதற்கு முன்பாகவே தொலைபேசி வழியாக எச்சரிக்கப்பட்டார். துணிச்சல் காரரான பேராசிரியர் ஒரு கலாச்சார யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்வியாளர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்த விவகாரத்தில் பங்காற்றுவதற்கான வாய்ப்பும் அவசியமும் ள்ளது.எனக் கூறியுள்ளார்.

பேராசிரியர் தமது நூலுக்கு எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்துத்தான் களத்தில் இறங்கினார். ஆனால் நெருப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தம் தொண்டர்களிடம் நூல்களை பறிமுதல் செய்து நெருப்பிட்டு கொளுத்துமாறு ஆணையிட்டனர். அதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியும் களத்தில் இறங்கி இருக்கிறது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். ரவாத் மத்திய உள்துறை அமைச்சரிடம் தடை விதிக்க வற்புறுத்தியுள்ளார்.

தடை விதித்தால் மட்டும் போதுமா? நூலை எழுதியவரையும் அதை வெளியிட்ட சி.பி. பதிப்பகத்தாரையும் கைது செய்து வழக்குத் தொடர வேண்டும் என ஆர்.எஸ். ரவாத் கோரியுள்ளார்.       

பேராசிரியர் டி.என்.ஜா ஆய்வுகளில் இறைச்சியுண்டவர்களின் பட்டியலில் பிராமணர் மட்டுமல்ல சமணரும் பவுத்தரும் வருகின்றனர்.

சம மதத்தை நிறுவிய மகாவீரரும் இறைச்சி உண்டவரே என பேராசிரியர் ஆதாரத்துடன் கூற கொதித்துப் போன ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஜைன சங்கத்தினர் நீதிமன்ற தடையாணை கோரியுள்ளனர்.

மதங்களை வளர்க்க புலால் உண்ணாமையை முன்னெடுத்தபோதுதான் பிற்காலத்தில் மும்மத முதன்மையாளர்களுக்கு இறைச்சி விலக்கப்பட்டுள்ளது.

புத்தர்காலத்தில் பலவகையான இறைச்சியும் உணவாக இருந்துள்ளது. புத்தரே பன்றிக் கறி உண்டதால்தான்வயிற்றுப் போக்கு வந்து மரணித்ததாக வரலாறு கூறுகிறது.

இலங்கையில் வாழும் சிங்கள மக்களும் பவுத்தர்கள்தான் அவர்களோ  கொல்லாமை கடைபிடிக்காமல் எல்லா வகையான இறைச்சிகளையும் உண்டு வருகின்றனர்.

பேராசிரியர் பல பண்டைய நூல்களைத்தான் ஆதாரமாக வைத்துள்ளார். என் நூலுக்கு தடை கோரும்போது நான் எனது நூலுக்கு ஆதாரமாக அவர்களின் வேதங்களையும் உபநிஷத்துகளையும் சூத்திரங்களையும் மேலும் காப்பியங்களையும் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவேன்.

அப்போது இவர்கள் என்ன செய்வார்கள்?” என்னிடம் ஆதார நூல்கள் குவிந்து கிடக்கிறன. அவர்களிடம் குருட்டுத்தனமான நம்பிக்கைகள்தான் குப்பை மேடாக உள்ளனஎனக் கூறும் பேராசிரியர் பீகாரைச் சேர்ந்த ஆச்சாரமான மைதிலி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது..

பசு பாதுகாப்பு இயக்கம்என தயானந்த சரஸ்வதியால் பதொன்பதாம் நூற்றாண்டில் ஓர் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் பசு ஒரு புனிதப் பிராணியாக போற்றப்படவில்லை. அது தொழுவத்தில் இருந்தது. தொழப்படவில்லை.

பசுவை பலிப் பிராணியாக பிராமணர்கள் கொண்டாடியதை நமது மணிமேகலை கதைகதையாக கூறுகிறது.

சோழ நாட்டுப் பார்ப்பணர் ஒருவர் ஆபுத்திரன் எனும் அனாதைச் சிறுவனை வளர்த்து வந்தார். ஆபுத்திரன் ஏற்கனவே ஒரு பவுத்தத தெருவிலே வாசம் செய்தவன். அவனுக்கு பவுத்த நெறிகள் பலவும் தெரியும்.

வளர்ப்புத் தந்தையான வைதீகப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்ய பசு ஒன்றைக் கொண்டு வந்து தோட்டத்தில் கட்டி வைத்தார். பிராணர்களிடம் அப்போது கொல்லாமையும் புலால் உண்ணாமையும் வரவில்லை. பவுத்தரிடமும் சமரிடமும் வந்திருந்தது. எனவே பவுத்த நெறி அறிந்த ஆபுத்திரன் அநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து காட்டிற்கு ஓட்டிவிட்டான்.

பிறகு உண்மையறிந்த பார்ப்பனர் ஆபுத்திரனை வீட்டை விட்டும் விரட்டி விட்டனர். ஆபுத்திரன் ஆதரவற்றவன் ஆனான். எனவே அவன் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். பார்ப்பனர் யாரும் ஆபுத்திரனுக்கு பிச்சை போடவில்லை. கொலை வேள்வி நிறைவேறி பசுக் கறியை பெறாமல் போனதற்கு ஆபுத்திரன்தான் காரணம் என்பதால் பார்ப்பனர்கள் பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் போட்டனர். ஆபுத்திரன் பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான். (மணிமேகலை : 13 ஆம் கதை)

பேராசிரியர் டி.என்.ஜா வடக்கத்திய நூல்களிலிருந்து ஆதாரங்களைக் கூறும் போது நாம் தெற்கத்திய நூல்களிலிருந்து ஆதாரங்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளோம். 

அடுத்து மேலும் ஒரு மணிமேகலைக் காப்பியக் காட்சி தொடர்கிறது.

கௌசிகன் எனும் வைதீகப் பார்ப்பனர் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தார். ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் கௌசிகன் வயிற்றைக் குத்திக் கிழித்துவிட்டது. கொலை வேள்விக்காக அப்பசுவைக் கொண்டு வந்திருப்பான் போலும்.

கௌசிகன் அருகிலிருந்த சமப் பள்ளிக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறான். சமர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வி செய்வோரையும் வெறுத்தவர். ஆதலின் அவற்றுக்கு மூல காரணமாவனுக்கு உதவி செய்ய உடன்படவில்லை. அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.  (மணிமேகலை : 5 ஆம் கதை)

அக்காலத்தில் சமர்கள் ஆன்மீகப் பணியோடு கல்விப் பணியும் மருத்துவப் பணியும் செய்து வந்தார்கள் என்பது குரிப்பிடத்தக்கது.