முகநூல் (Facebook)

facebook-front 1796837b

முகநூல்(Facebook)-உலகில் அதிகம் வாசிக்கப்படும் நூல்.இணையம் தொடர்பான குற்றங்களில் முதலிடம் வகிப்பதும் முகநூல்தான்.இந்தியர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பது கூட சந்தேகம்தான்,ஆனால் எல்லோருக்கும் முகநூல்(Facebook) கணக்கு இருப்பது அவசியமாகிவிட்டது.
4 வயது குழந்தை முதல் 100 வயது மூதாட்டி வரை எல்லோரும் முகநூலில் ஆர்வமாக இணைவதற்கு பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முகநூல் பயன்பாட்டில் இந்தியர்களாகிய நாம் மிக முக்கிய பங்கு வகிக்கிறோம்.
முகநூல் (Facebook) 2004-ம் ஆண்டு மார்க் ஜூகன்பர்க் என்பவரால் அமெரிக்காவில் அவரது கல்லூரித் தோழர்களோடு கலந்துரையாடுவதற்காக துவங்கப்பட்டது. இன்று உலக மக்கள் தொகையில் 3ல் 1 பங்கு மக்களை அது சென்றடைந்திருக்கிறது.அதற்கு சில நியாயமான காரணங்களும் உள்ளன.அவை:
1. ஒரு மாதத்திற்கு 450 கோடி பகிர்வுகள் (Contents) பகிரப்படுகின்றன.சராசரியாக நாள்தோறும் ஒரு புதிய புத்தகம்,புகைப்படம்,நிகழ்வு தொடர்பாக 15 கோடி பகிர்வுகள் நடைபெறுகிறது.
2. மாதத்திற்கு 15 இலட்சம் எண்ணிக்கையிலான உள்ளூர் வியாபாரம் (Local Business) முகநூல் மூலம் நடைபெறுகிறது.
3. 53 கோடி Fan Following உருவாக்கப்படுகிறது.அதாவது ஒரு புதிய புத்தகம் வெளியிடப்பட்டால் அதற்கான ஒரு பக்கம் (Page) திறக்கப்பட்டு அதில் அந்த புத்தகம் தொடர்பான அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.
4. முகநூலில் பகிரப்படும் ஒரு செய்தி ஒரு நாளைக்குள் (24 மணி நேரம்) 300 கோடி மக்களை சென்றடைகிறது.கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்திலும்,இப்போது ஏற்பட்ட வர்தா புயலிலும் முகநூலின் பங்கு அளப்பரியது.
முகநூலில் உள்ள பகிரப்படும் விஷயங்களை 5 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. Family (குடும்பம்): குடும்பம் தொடர்பான புகைப்படங்கள்,வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
2. Friends (நண்பர்கள்):முகநூல் ஊருவாக்கப்பட்டதே புதிய நட்பு வட்டத்தை உருவாக்கத்தான். அதனால் நட்பு சார்ந்த பதிவுகள் அதிகம் பகிரப்படுகின்றன.பல பழைய நண்பர்கள் Facebook மூலம் இணைந்தது நாம் அறிந்ததே.
3. Memories (நினைவுகள்) : நினைவிற்கான உள்ள விஷயங்கள்.உதாரணமாக பிறந்த நாள்,திருமண நாள்,புதிதாக வீடு,பொருட்கள் வாங்கிய நாள் ஆகியவை.
4. News and Current Events (செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள்): இன்று எந்த செய்தியும் தொலைக்காட்சியில் வருவதற்கு முன் முகநூலில் வந்துவிடுகிறது.அதனால் எல்லா தொலைக்காட்சிகளும் முகநூல் பக்கம் வைத்திருக்கின்றன.
5. Entertainment (பொழுதுபோக்கு அம்சங்கள்): புதிதாக வெளிவந்துள்ள புத்தகம்,விளையாட்டு போன்றவை இதில் அடங்கும். இன்று பலரும் புதிதாக பொருட்கள் வாங்கும் முன் அது சார்ந்த பதிவுகளை (Reviews) பார்த்த பின்புதான் வாங்குகின்றனர்.
இவை முகநூல் பற்றிய சுவாரஸ்யமான விவரங்கள். இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் முகநூலை மிகச் சரியாகவும்,பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.
தொடர்புக்கு : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.