இன அழிப்பின் நேரடி சாட்சியங்கள்

மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு சாட்சியான ரோஹிங்கியா சிறுவர்கள்

ஒன்பது வயதான அப்துல் அஸீஸ், அவன் பார்த்த காட்சிகள் அவனை சிறு பிராய தோற்றத்திலிருந்து மாற்றி வெறித்த பார்வையுடன் கடுமையான தோற்றத்திற்கு மாற்றியுள்ளது. ஆறு வயதான அவனது சகோதரன் ஷாஹித் அவனுடன் இருக்கிறான். அவர்களது பெற்றோர்கள் ?
ஆகஸ்ட் 30 இராணுவ உடையணிந்த மியான்மர் ராணுவ மிருகங்கள் ரோஹிங்கிய மாகாணத்தை வெறி கொண்டு தாக்கியது. 9 வயதான அப்துல் அஸீஸ் தம்பி ஷாஹிதை கையில் பிடித்துக் கொண்டு பக்கத்திலிருந்து ஆற்றில் குதித்து தப்பிக்க நீந்திக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களுடன் நீந்திக் கொண்டிருந்த சிலரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

நீரில் நீந்திக் கொண்டிருந்த இரு சிறுவர்களின் கண் முன்னே அவர்களது தந்தை முஃபீஸ்(35) தாய் ராபு (30) சகோதரர்கள் ஜன்னதுல்லாஹ் (10) ஷாபுல்லாஹ் (5) தங்கை மும்தாஜ் (3) ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருகில் எரிந்து கொண்டிருந்து நெருப்பு இவர்களது வீட்டையும் தீப்பிழம்பாக்கி எரித்து சாம்பலாக்கியது. (இடம் : குட்டுபலோங் அகதிகள் முகாம், செப் 25, 2017 அன்று மனித உரிமை கண்கானிப்பகத்துக்கு (பிஸிகீ கிஸீணீstணீsவீணீ ஜிணீஹ்றீஷீக்ஷீ-லிவீஸீபீ எடுத்த போட்டோ)
இன அழபபன நரட சடசயஙகள1அதே முகாமில் இருக்கும் 10 வயதான அலி ராணுவத்தால் அவனது கண்முனே பெற்றோர்களும், சகோதரர்களும் மியான்மர் ராணுவத்தால் எரிக்கப்பட்ட காட்சியை பார்த்ததிலிருந்து பேசுவதை மறந்து விட்டான்.
மக்களை காப்பாற்றுவதற்கு உருவாக்கப்பட்ட ராணுவத்தினரின் வன்கொடுமை செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான குழந்தைகளை கொல்லப்பட்டுள்ளனர்.
ஹிழிமிசிணிதி கணக்குப்படி மியன்மரிலிருந்து தப்பிப் பிழைத்து வந்துள்ள 480, 000 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
அவர்கள் பார்த்த, அனுபவித்த ரணங்களால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களது இப்போதைய அடிப்படைத் தேவை உணவு, சுத்தமான குடிநீர், மனநல ஆலோசனை, கல்வி. இவற்றின் மூலம் இவர்களது எதிர்காலம் மாறும் வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டு ஐ.நா. சபை அவசர கோரிக்கை வைத்துள்ளது.

மியான்மர் இராணுவம் ராகின் மாநிலத்திலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றுகிறது, குடிமக்களைக் கொல்கிறது, அவர்களின் வாழ்விடங்களை எரித்து இனப் படுகொலையை நடத்தி வருகிறது என்று ஐ.நா. கூறியுள்ளது. வடமேற்கு மியான்மரில் இருந்து கடந்த இரு வாரங்களுக்குள் 400,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹசீனா ( 20 வயது, ரோஹிங்கியா மாநிலம் துலா தோலி கிராமம்) சொல்கிறார் :

ஆகஸ்ட் கடைசியில் மியான்மர் இராணுவப் படையினர் வெறி கொண்டு ஊருக்குள் நுழைந்த போது கிராம மக்கள் ஓடினார்கள், ஆனால் சிலர் நதிக் கரையில் இராணுவத்தினரிடம் சிக்கினர். எனது கண் முன்னால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்னையும் மற்ற பல பெண்களை வலுக்கட்டாயமாக நீரில் நிர்க வைத்த இராணுவத்தினர் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எரிப்பதற்கு குழி தோண்டினர். அந்த நேரத்தில் என்னுடைய கைக் குழந்தையை எனது சால்வைக்குள் மறைக்க முயன்றேன். ஒரு இராணுவ வெறிநாய் அதை பார்த்து விட்டு என்னிடமிருந்து குழந்தையை பிடுங்கி குழந்தையை நெருப்பில் தூக்கிப் போட்டான்.
கொஞ்ச நேரத்திற்குப் பின் என்னையும், எனது மாமியார், அண்ணி மற்றும் மூன்று உறவினர்கள், குழந்தைகளையும் அருகில் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பெண்களிடம் வல்லுறவுக்கு முயன்றனர். எனது மாமியார் அவர்களை கடித்து அவர்களை எதிர்த்து நின்று மரணித்தார். நானும் எனது அண்ணியும் அடித்து துன்புறுத்தப்பட்டதால் மயக்கமுற்றோம்.
நாங்கள் கண் விழித்துப் பார்த்த போது வீடு பூட்டப்பட்டு எரிக்க்கப்ட்டிருந்தது. நானும், அண்ணியும் கடுமையான தீக்காயங்களுடன் மோசமாக காயங்களுடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்து பங்களாதேஷ் வந்து சேர்ந்தோம்.
ஹசீனாவின் அண்ணியின் தலையின் பின்புறம் இருந்த ஆழமான வெட்டுக்காயத்தை காட்டினார். அது மருத்துவர்களால் தையலிடப்பட்டு இருந்தது. தன்னை புகைப்படம் எடுத்து உலகத்துக்கு தங்களின் நிலையை வெளிப்படுத்தும்படி ஹசீனா கேட்டுக் கொண்டார். அதற்கும் தைரியம் வேண்டும். அது அவரிடம் இருந்தது.
பீட்டர் பெக்கெர்ட், மனித உரிமைகள் கண்காணிப்பு அவசரநிலை இயக்குநர்