உங்களுக்கு இதயம் இருக்கிறதா?

   எனது படுக்கையில் இருந்தபடி இதையெல்லாம் நான் உங்களுக்கு எழுதும்போது என் கண்களில் நீர் பெருகுகிறது. ஆனால் வலியாலும் வேதனையாலும் கோபத்தாலும் பயத்தாலும் எழும் பயனற்ற கண்ணீர். ஐயோ, இதெல்லாம் நடக்க வேண்டுமா?
இப்போது இஸ்ரேலின் போர் இயந்திரம் தனது கொடூரமான சிம்பனியை இசைக்க ஆரம்பிக்கிறது; கரைகளில் இருக்கும் ராணுவப்

படகுகளிலிருந்து பீரங்கிகள் சரம்சரமாகக் குண்டுகளைத் துப்புகின்றன. படுகாயமடைந்து, உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய வந்துகொண்டிருப்பவர்களின் கூட்டத்தை இனியும் தாக்குப்பிடிக்க முடியாது. ஏற்கெனவே, ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறது இத்தனைக்கும் ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்குக் கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளமே வரவில்லை. இருந்தும், படுகாயமுற்றவர்களிடம் அக்கறை காட்டுவதிலும், இன்னாருக்கு இன்ன சிகிச்சை என்று தீர்மானிப்பதிலும், எப்படிப்பட்ட வீரர்கள் அவர்கள்! அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றையும் நிதானிக்க முயல்கிறார்கள் அவர்கள். பாலஸ்தீனர்களின் இந்த மனஉறுதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்து பணியாற்றியது எனக்கு வலிமையைத் தருகிறது. இருப்பினும், சில சமயம் எனக்கு ஓவென்று கத்தலாம் போன்று தோன்றும், யாரையாவது இறுக்கிக் கட்டியணைத்துக்கொள்ளத் தோன்றும், அழத் தோன்றும், ரத்தத்தில் தோய்ந்திருக்கும் குழந்தையொன்றின் சருமத்தையோ முடியையோ முகர்ந்து பார்க்கத் தோன்றும்!
இதயமும் அதிகாரமும் உள்ள யாரும், இந்த ஷிஃபா மருத்துவமனையை விட்டுச்செல்லும்போது ‘பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவேன்' என்ற முடிவை எடுக்காமல் இங்கிருந்து விடைபெற முடியாது.
ஆனால், இதயமற்றவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் பல்வேறு கணக்குகளைப் போட்டுப்பார்த்துவிட்டு, காஸா மேல் மற்றுமொரு தாக்குதலுக்குத் திட்டமிட்டுவிட்டார்கள். இதோ இரவு நெருங்குகிறது. இந்த இரவில் ரத்த ஆறு தொடர்ந்து ஓடியபடி இருக்கும். ஆம், மரண ஆயுதங்களை அவர்கள் முருக்கேற்றுவது எனக்குக் கேட்கிறது. தயவுசெய்து, உங்களால் முடிந்த ஏதாவது செய்யுங்கள். இது, நிச்சயம் தொடரக் கூடாது.
ஃபலஸ்தீனத்தின் மீதும் சீறும் எஃப்-16 ரக போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள்… இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை, அல்லது அமெரிக்காவால் வழங்கப்பட்டவை.
மிஸ்டர் ஒபாமா உங்களுக்கு இதயம் இருக்கிறதா?
- மேட்ஸ் கில்பெர்ட், நார்வே ஃபலஸ்தீனத்தில் சேவை செய்யும் மருத்துவர்.