இளைய சமூகமே! வாருங்கள்..

apj-abdulkalam2 072715104104மரணம் என்னை எப்போதுமே அச்சுறுத்திய தில்லை எல்லோர்ரும் ஒரு நாள் போய்ச் சேரவேண்டியவர்கள் தானே...!” என்று சொன்னதோடு மட்டுமின்றி மரணத்தை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மறுமை வாழ்வுக்கான பயணத்தை தொடங்கி

இருக்கிறார் ஆவுல் ஃபக்கீர் ஜைனுல் ஆபிதீன் “அப்துல் கலாம்.”
இளைஞர்களே! கனவு காணுங்கள் என்ற தாரக மந்திரம். பூட்டிக் கிடந்த பல இளைஞர்களின் இதயக் கதவுகளை ‘சுய முன்னேற்றம்’ எனும் திறவுகோலால் திறந்த மந்திரச் சாவி. வார்த்தைகளை உதிர்த்து விட்டு உலகைப் படைத்த உயர்ந்தவனான அல்லாஹ்விடம் சென்றிருக்கிறது.
இந்திய தேசத்தின் பதினோராவது குடியரசுத் தலைவராக பணியாற்றி, அல்ல சேவை செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பெருமைக்குறிய பெருமகனார்.
தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள இராமேஸ்வரத்தில் ஒரு ஏழை படகோட்டியின் மகனாகப் பிறந்து சைக்கிளில் விடு வீடாகச் சென்று நியூஸ் பேப்பர் போட்ட ஒரு கடின உழைப்பாளியின் உயர்வு, கடின உழைப்பு, விடா முயற்சி இரண்டும் இருந்தால் ஏழையாலும் சாதிக்க முடியும் என்பதை உரத்துச் சொன்ன உஅய்ர் பண்பாளர்.
இந்திய அரசியலில் உயர் பதவிகளில் பொறுப்பு வகித்து சுத்தமான கரங்களுக்குச் சொந்தக்காரர் எனும் பேறு பெற்ற பெருமைக்குறியவர்.
எத்தனையோ பதவிகளில் இருந்தும் கை நீட்டி குற்றம் சொல்ல முடியாத அறிவியல் விஞ்ஞானி.இந்திய தேசத்தின் முதல் குடிமகன் எனும் பேருபெற்றாலும் குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் சகஜமாக பழகி “உங்களாலும் உயர முடியும்” எனும் தன்னம்பிக்கை வரிகளை உதிர்த்து விட்டுச் சென்றதால் இன்று மாணவ சமுதாயம் கண் கலங்கி நிற்கிறது.
இந்தியாவை 2020 க்குள் வல்லரசாக்க வேண்டும் என்பது அபுல் கலாமின் ஆசை மட்டுமல்ல...! இந்திய மக்களின் மனங்களில் உறைந்து, உணர்விழந்து கிடக்கும் கனவுகளை நிஜமாக்க அரசியல் தலைவர்களும், மாணவ சமூகமும், அறிஞர்களும் அறிவு சிந்தனையோடு களமிறங்குவதற்கான தேதி குறிக்கப்பட்டு விட்டது.
போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு குறைந்த கனத்தில் உலோக கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேஸ்மேக்கர் போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.
நமது நாடு ஏழ்மையானதுஅல்ல; நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்,. அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுய சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும், இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த கலாம் காலம் சென்று விட்டார்.
உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அதே சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
காலத்தின் மணல் பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க் அவிரும்பினால் உனது இழுத்து இழுத்து நடக்காதே!
கனவு என்பது உங்கள் தூக்கத்தில் வருவது அல்ல! உங்களைத் தூங்க விடாமல் செய்வது போன்ற கலாமின் வரிகளை கனவுகளோடு நிறுத்தி விடாதீர்கள்!
இளைய சமூகமே! வாருங்கள் கலாமின் “கனவுகளை நிஜமாக்குவோம்” எனும் வைர வரிகளுக்கு புத்துயிர் கொடுக்க தயாரகுங்கள்.
மொத்தத்தில் ஆவுல் ஃபக்கீர் ஜைனுல் ஆபிதீன் “அப்துல் கலாம்” மாணவர்களுக்கு பாடம் நட்த்திய ஆசிரியர் மட்டுமல்ல...! நாட்டிற்கும், மக்களுக்கும் பாடமாய் வாழ்ந்து சென்றவர்.
எங்கள் பாசத்திற்கும், அன்பிற்குறிய எங்கள் இறைவா! கோடான கோடி மக்களின் மனங்களில் மாண்பாளராய் வாழ வைத்தாய் இனி அவருக்கு உனது பொருத்தத்தை வழங்குவாயா...
அக்னிச் சிறகுகளாய் வாழ்ந்து மறைந்த அபுல் கலாம் உனது அழைப்பினை ஏற்று பயணமாகி வரும் அவரது செயல்களை அங்கீகரித்து அவரின் குற்றங்களை மன்னித்து உயர்ந்த சுவனபதியை வழங்குவாயாக... அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்கள் உறவினர்கள் அனைத்து மக்களுக்கும் ஆதரவாய் நீ இருக்க வேண்டும் என்று மனமுருகி பிரார்த்திக்கிறோம். ஏற்றுக் கொள்வாய் என்ற உயர்ந்த நம்பிக்கையில்...

அல்ஹாஃபிழ் முனைவர்; எம்.ஃக்கீர் இஸ்மாயீல் பிலாலி