இளம் இஸ்லாமிய பெண் அறிவியல் மேதை!

662B10D1996EA27C629AC165F223DBB2சித்தர்கள் சில விசயங்களை தெளிவாகக் கூறமாட்டார்கள். ரகசியம் காப்பார்கள். மனிதர்கள் மீதான அவநம்பிக்கைதான் காரணம். ஆக்கமும் அழிவும் ஓரிடம்தான் என்பார்கள் மறைவாக.
உலகம் தோன்றியது

தொடங்கி இன்று பூமியின் எடை எதுவும் மாறவில்லை. எத்தனையோ உலோக செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தாலும் பூமியின் எடை மாறாததற்குக் காரணம் பூமியின் மீது அன்றாடம் படியும் புழுதிமண், 80 ஆயிரம் மின்னல் கீற்று (தினசரி) விழுகின்றன. ஒரு புறம் கோடை என்றால் அதற்குச் சமமாக பூமியின் அடுத்த பக்கம் கனமழை. கடல் நீர் இன்று வரை வற்றாமல் உள்ளது.
உலகில் மனிதருக்கு வேண்டிய அனைத்தும் உள்ளது. ஆக்கம், நோய், உணவு என அனைத்தையும் இறைவன் வழங்கியுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனாலும் 20 ஆம் நூற்றாண்டில் தாபர் ட்யூபாண்ட் என்ற சாத்தான் நிறுவனம். இயற்கையான பொருட்கள் அனைத்திற்கும் மாற்றாக நைலான், பாலியெஸ்டர். பாலி புரோப்லின் என்ற பிளாஸ்டிக் மூலப் பொருளை வணிகப்படுத்தியது. தலைவாறும் சீப்பு, முகம் கழுவும் சோப்பு டப்பா எனத் தொடங்கி மிதவைப் படகு, வீட்டுக் கூறை என வளர்ந்து பிளாஸ்டிக்கில் வீடுகள் கூட கட்டத் தொடங்கி விட்டனர். இவையெல்லாம் ஆக்கம்தான். இந்த பிளாஸ்டிக் அழிவில்லாதது. இது உலகின் சுற்றுச் சூழலுக்கு சவாலானது. ஏனெனில் மண்ணில் புதையுண்டால் அது நீண்ட காலம் அழியாமல் இருப்பதோடு மண்ணையும் பாழாக்கும்.
பின்னர் இதனைப் பொடியாக்கி மறு சுழற்சிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். ஆனாலும் பிளாஸ்டிக் அழியவில்லை. உலகை மருள வைத்தது. பிளாஸ்டிக்கின் சாகாவரம் உலகின் அழிவுக்கு காரணமாகலாம் என அறிஞர்கள் அலறினர்.
உலக நாகரீகம் தழைத்த இடம் எகிப்து இங்குள்ள ஒரு இஸ்லாமிய இளம் பெண் மேதை நான் இருக்கிறேன் உலக அச்சுறுத்தலுக்கு வழி காண என்று கிளம்பி விட்டார்! அவர்தான் எகிப்தின் இளம் பெண் அஸ்ஸ ஃபயாத்.1Azza-Faiad-2-screenshot-CNN
அஸ்ஸ ஃபயாத் எகிப்திலுள்ள பெட்ரோலிய ஆய்வுப் பயிலகத்தில் பயின்று வந்த போது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கலாம் என்பதை தனக்குள் உருவகித்தார். இதை தன் ஆய்வு நிறுவனத்திற்குத் தெரிவித்தார். அவர்கள் இந்த இளம் பெண்ணின் ஆய்வு மன உறுதியை மதிக்கும் வண்ணம் ஆய்வக வசதி செய்து தந்தனர்.
அஸ்ஸ ஃபயாத் தன் ஆய்வில் முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை உருமாற்றி அதாவது பிளாஸ்டிக் குப்பைகளை அலுமினிய சிலிக்கேட்டாக மாற்றினார். அதிலிருந்து மீத்தேன், புரோமைன் வாயுக்களை பிரித்து பின்னர் இவற்றை எத்தனாலாக மாற்றுகிறார். இந்த எத்தனால்தான் பயோ ஃப்யூல் (Bio Fuil) என்றழைக்கப்படுகிறது.
பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் (பயோ ஃப்யூல்) கண்டறியும் சோதனைக்காக டன் கணக்கில் சோளம், அரிசி முதலான உணவுப் பொருட்களை அமெரிக்க விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விலைவாசியும் ஏறின. ஆனால் எகிப்து நாட்டு முஸ்லிம் பெண் உலகை அச்சுறுத்திய பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளைக் கண்டறிந்துள்ளார்.
அஸ்ஸ ஃபயாத்தின் கண்டுபிடிப்பு இப்போது காப்புரிமை பெற சென்றுள்ளது. முன்னதாக அவர் ஐரோப்பிய நாடுகள் அழைப்பு விடுத்த உலகின் இளம் அறிவியலாளர் போட்டியில் முதல் பரிசும் பெற்று யுனெஸ்கோவின் பாராட்டிலும் நனைந்து விட்டார்.
உலகில் பயன்பாட்டில் உள்ள 1000 த்திற்கும் மேற்பட்ட பொருட்களை முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்துள்ளனர். இப்போது உலகை அச்சுறுத்திய பிளாஸ்டிக் சாத்தானை விரட்டும் புதிய கண்டுபிடிப்பை அஸ்ஸ ஃபயாத் எனும் முஸ்லிம் இளம் பெண் கண்டு பிடித்துள்ளதால் உலக முஸ்லிம்களின் பார்வை புதிய கண்டுபிடிப்புகளின் பக்கம் திரும்பியுள்ளது. சமீபத்தில் மறைந்த மரியாதைக்குரிய அப்துல் கலாமும் இதைத்தான் நமக்குக் கூறினார்.
மக்கள் தேவை எதுவென அறிந்து அதற்கேற்ப நம் ஆய்வுகள் அமைந்தால் பயனுள்ளவற்றை முஸ்லிம் இளைஞர்களால் நிச்சயம் கண்டறிய இயலும்.
அஸ்ஸ ஃபயாத் உலகிற்கு ஃபாய்தாவாக உள்ளார். அழிவிலிருந்து ஆக்கத்தை கண்டுபிடித்து உலகை காத்து விட்டார். நாம் என்ன செய்யப் போகிறோம்.
க. குணசேகரன்.