சகுணம் பார்க்காதே.

ஒரு நாட்டுல ஒரு அரசன் இருந்தான். அவன் ஒரு நாள் கீழ விழுந்து அவன் கை. கால் ரெண்டும் ஒடஞ்சிப்போச்சி. அப்ப அவனோட மந்திரிங்க என்ன ஆச்சி, எப்டி கீழ விழுந்தீங்கன்னு கேட்டாங்க.
அதுக்கு அந்த அரசன் சொன்னான் ; நான் காலையில எழுந்திருச்சி அப்டியே மேலயிருந்து இறங்கி வந்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு கால் வழுக்கி

விழுந்துட்டேன். கால் ஒடஞ்சிப்போச்சி அப்டின்னு சொன்னான்.
உடனே அந்த மந்திரிங்க அரசரே இன்னைக்கி முதல்ல எழுந்தவுடன நீங்க யாரப்பாத்தீங்கன்னு கேட்டாங்க.
ம்ம்ம் அரசன் யோசித்து விட்டுச் சொன்னான். நான் காலையில் எழுந்து மாடத்தி(மாடியி)லிருந்து வெளியே பார்த்தேன். அப்போ அங்க ஒரு சலவைத்தொழுலாளி தான் நின்னுகிட்டு இருந்தான். அவனத்தான் பாத்தேன் அப்டின்னு அந்த அரசன் சொன்னான்.
உடனே அந்த மந்திரிங்க ; அரசர் அவர்களே! நீங்க விழுந்ததுக்கு அவன் தான் காரணம். காலைல எழுந்தவுடன் முதமுதல்ல அவன் முகத்துல முழிச்சதனாலத்தான் நீங்க கீழ விழுந்துட்டீங்கன்னு சொன்னாங்க
உடனே அரசன், அந்த சலவைத்தொழிலாளியை இழுத்து வந்து அவனைத் தூக்குல போடுங்கன்னு சொன்னான்.
ஆனா தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அந்த சலவைத்தொழிலாளி கொஞ்சம் கூட கவலையில்லாம சிரிச்சிக்கிட்டு இருந்தான்.
அப்ப அரசனுக்கு குழப்பம் அரசன் சலவைத் தொழிலாளிகிட்டக் கேட்டான் ; ஏண்டா உனக்கு நான் தூக்கு தண்டன விதிச்சிருக்கேன். கொஞ்ச நேரத்துல நீ சாகப்போற ஆனா கொஞ்சம் கூட சாகப்போறோம்னு பயமே இல்லாம சிரிச்சிக்கிட்டு இருக்குறியே அப்டின்னு கேட்டான்.
அதுக்கு அவன் சொன்னான் ; அரசரே காலைல முதமுதல்ல ஏம் முகத்தப்பாத்ததுனாலத்தான் உங்க கால் போச்சின்னு சொல்றீங்க. ஆனா இன்னைக்கி காலைல நான் முதன் முதல்ல உங்களத்தான் பாத்தேன். உங்க முகத்துலதான் முழிச்சேன். அதுக்கு தண்டனையா இங்க என் தலையே போகப்போதேன்னு நினைச்சிதான் சிரிக்கிறேன் அரசரேன்னு சொன்னான்.

சலவைத் தொழிலாளி சொன்னது அரசன யோசிக்க வைச்சது. அதுக்கு பிறகுதான் அரசுனுக்கு புரிஞ்சுச்சு யாரு முகத்தப் பார்க்கிறதுனாலயும் நல்லதோ கெட்டதோ நடக்காது. எது நடக்கனும்னு இருக்கு அதுதான் நடக்கும். இது புரிஞ்சதும் அரசன் சலவைத் தொழிலாளிய தூக்குல போடாம விட்டுட்டான்.
இனிமே எப்போது இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன்னே தெரியல என்நேரமே சரியில்லன்னு புலம்பாதிங்க. எல்லாஹ் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது அல்லாஹ்விடமே நமக்கு நன்மை செய்யப் போதுமானவன்.
About these ads