தேவை துணிச்சல் அல்ல! நேர்மை!

1000 indiaa

8.11.2016 அன்று இரவு 8 மணி அளவில் இந்தியாவின் பிரதம மந்திரி இன்று இரவு 12 மணி முதல் 500,1000 ரூபாய் நோட்டுகள் அதன் சட்டமதிப்பை இழக்கும் என்று அறிவிக்கிறார். அதன் பொருள் இனிமேல் 500,1000 எண்களைக் கொண்ட ரூபாய் நோட்டுகள் வெறும் பேப்பர்களே! அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதுதான். அதற்கு மாற்று ஏற்பாடாக புதிய 2000 - 500 ரூபாய் நோட்டுக்கள் அடுத்த இரண்டு நாட்களில் புழக்கத்தில் விடப்படும். வங்கிகளிலும் இன்னும் மருத்துவமனை பெட்ரோல் பேங்க் போன்ற இடங்களிலும் குறிப்பிட்ட நாட்கள் வரை செல்லாத நோட்டுகளை பயன்படுத்தலாம் என்றார். இது அதிரடி நடவடிக்கை துணிச்சலான செயல் என்று சிலரால் வர்ணிக்கப்படுகிறது. இதை துணிச்சல் என்ற ஒற்றை வார்த்தையால் சுருக்கி விட முடியாது.
இந்த அறிவிப்பின் மூலம் புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய்களில் 86.3 சதவீத மதிப்புள்ள 14,18,000 கோடி 500, 1000 நோட்டுகள் செல்லாதவையாக ஆக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ. கணக்குப் படியே 80 சதவீதத்தினர் வேலை வாய்ப்பு பெறும் 86.6 ரொக்கப் பண வியாபாரம் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 க்கு மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். இதை துணிச்சல் என்று எப்படி சொல்ல முடியும்.
நம்முடைய மூதாதையர் பயன்படுத்திய தங்க வௌஙிளி, செப்பு நாணயங்கள் அவற்றுக்கான மதிப்பைத் கொண்டிருந்தன. அதாவது, ஒரு மன்னன் பொற்காசு செல்லாது என்று அறிவித்தால் கூட அக்காசில் தங்கத்தின் எடை அதன் மதிப்பிற்கேற்ப இருந்தது. அதை உருக்கி தங்கமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், நாணயங்கள் மதிப்புமிக்க செல்வங்கள்! வெறும் பேப்பர்கள் அல்ல!
அன்று பணம் எனும் செல்வம் மக்களிடத்திலும் இருந்தது, அரசு அதிகாரத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. இப்போதுள்ள பணம் எனும் சொத்து வெறும் பேப்பர். அதன் முழு கட்டுப்பாடும் அரசாங்கத்தின் பிடியில்தான் உள்ளது.
நம் கையில் பத்தோ ஆயிரமோ எண்களைக் கொண்ட நோட்டுகள் இருந்தால் அது மத்தியஅரசு உத்தரவாதத்தின் பெயரில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கும் ஒரு பத்திரம். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் நிஹிகிஸிகிழிஜிணிணிஞி ஙிசீ ஜிபிணி சிணிழிஜிஸிகிலி நிளிக்ஷிணிஸிழிவிணிழிஜி என்று மேலே எழுதப்பட்டு கீழே மி றிஸிளிவிமிஷிணி ஜிளி றிகிசீ ஜிபிணி ஙிணிகிஸிணிஸி ஜிபிணி ஷிஹிவி ளிதி ஜிணிழி ஸிஹிறிணிணிஷி என்ற உத்தரவாதத்துக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கவர்னர் கையெழுத்திட்டிருப்பார்.
சட்ட அங்கீகாரம் (லிமீரீணீறீ ஜிமீஸீபீமீக்ஷீ) பெற்ற பணத்தின் பரிவர்த்தனையை தடை செய்யும் போது அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது அரசின் கடமை, பொறுப்பு. அதை இதுவரை சரிவர செய்யாத மத்திய பா.ஜ.க. அரசு நமது உரிமையை ஒரேயடியாக முடக்கி இருக்கிறது. ஒரே அறிப்பின் மூலம் நமது ஒட்டுமொத்த உழைப்பும் பேப்பர்களாக மாறி இருக்கிறது அல்லது நமது பணத்துக்காக நாம் அலைய விடப்பட்டிருக்கிறோம். காரணம் கறுப்புப் பணம்.
2011 ஆம் ஆண்டு வெளிநாட்டில் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறி நாடு முழுவதும் யாத்திரை சென்றார் பா.ஜ.கவின் அத்வானி. இப்போது ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா அரசு தேர்தல் நேரத்தில் நாங்கள் கறுப்புப் பணத்தை ஒழிப்போம். வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவோம். அதை ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வீதம் கொடுப்போம் என்று சொல்லியே தேர்தலில் வெற்றி பெற்றது.
கறுப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது பா.ஜ.க.வின் வாதம். ஆனால் கறுப்பு பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லி 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று உள்நாட்டில் அறிவிக்கிறார் பா.ஜ.க. அரசின் பிரதமர்.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்படிருக்கும் கறுப்பு பணத்தின் நிலை என்ன? அது எப்போது இந்தியாவிற்குள் 500 1000 நோட்டுகளாக திரும்பியது? 94 சதவீத கறுப்புப் பணம் முதலீடாக, தங்கமாக நிலமாக இருக்க ரூபாய் நோட்டுகளை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும்?
இந்தியாவில் 1946 இல் 1000, 10000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகு 1954 இல்தான் 1000, 5000, 10000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. 1978 இல் 1000, 10000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு 1987 இல்தான் 500 ரூபாய் நோட்டும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு 2000ஆம் ஆண்டில் 1000 ரூபாய் நோட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதிக மதிப்பு கொண்ட நோட்டுகள்தான் கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்படிருக்கிறது என்றவர்கள் இப்போது இடைவெளியே விடாமல் 2000 ரூபாயை உடனே வெளியிட்டது ஏன்? இதில் எந்தக் கேள்விக்கும் பதில் கிடையாது. கிடைக்காது. ஒரே பதில் தேச நலனுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்.
தன் இனம் தன் மொழி தன் மதம் தன் தேசம் என தீவிரமாகப் பேசும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தாங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதை எப்போதுமே ஏற்றுக் கொள்வதில்லை. அதற்காக தங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் மக்களை இரு துருவங்களாக நிறுத்தி வைப்பார்கள். தங்களுடைய செயல்பாடுகளுக்கு புனிதப் போர்வை போர்த்துவார்கள். அதை கேள்வி கேட்பவர்களை தேச விரோதி என மக்கள் வாயாலேயே முத்திரை குத்த வைப்பார்கள்.
கறுப்புப் பணத்திற்கு எதிரான, கள்ள நோட்டுகளை பரவ விடும் பயங்கரவாதிகளுக்கு எதிரான துல்லியமான தாக்குதல். ஒது ஒரு புனிதப் போர். இதில் சாமான்யர்களே படை வீரர்கள் என்ற அவர்களின் வார்த்தைகளை கவனியுங்கள்.
பணம் வைத்திருப்போர் மீது சிலருக்கு இருக்கும் பொறாமையும் வெறுப்பும் - தேச நலன் என்ற புனிதச் சொல்லாடல் மூலமும் 500, 1000 நோட்டுக்கள் தடையை ஆதரித்தும் எதிர்த்தும் மக்கள் இரு பிரிவாக நிற்கிறார்கள். இதை பயன்படுத்தி பாசிச அதிகாரம் தனக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ளும். இதுதான் வலதுசாரிகளின் - பாசிசவாதிகளின் அடிப்படை யுக்தி. இதை புரிந்து கொள்ளாதவரை மக்கள் நலன் பேணும் எந்த செயலையும் முன்னெடுக்க முடியாது.
வங்கி ஊழியர்கள் 12 உட்பட 70 க்கும் மேற்பாடோரின் மரணமும், சிறு குறு தொழில்கள் நசிவும், கிராமப்புற மக்களின் கண்ணீரும் தேச நலன் என்ற ஒற்றை வார்த்தையால் புறந்தள்ளப்படுகிறது.
எது தேச நலன்? 500 1000 தடையை வரவேற்ற கறுப்புக் கோடீஸ்வரர்கள் யாரும் ஏடிஎம் வரிசையில் நிற்கவில்லை ஏன்? பணத்தை மாற்ற பாடுபட்டதாகத் தெரியவில்லை. சிரமம் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தால் பரவாயில்லை! 20 % பேர் சந்தோஷமாக வாழ 80 % மக்கள் அவர்களே உழைத்து சம்பாதித்த பணத்துக்காக ஏன் ரோட்டில் நிற்க வேண்டும்? வாடி வதங்கி ஏன் சாக வேண்டும்?
உண்மையில் கறுப்புப் பணம் என்றால் என்ன?
கறுப்புப் பணம் கறுப்பாக இருக்கும் இருக்கும் என நினைப்பது எப்படி கேலிக்குரியதோ அது போலத்தான் கற்றுப்புப் பணம் கட்டுக் கட்டாக அடுக்கி பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என எண்ணுவதும். பிளாக்மனி பணமாகத்தான் இருக்கும் என்பது சினிமாவும் பிற ஊடகங்களும் உருவாக்கிய பொது புத்தி.
உண்மையில் கறுப்புப் பணம் ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை அல்ல. அவை ‘இயங்கி’ க் கொண்டிருப்பவை (யீறீஷீஷ்வீஸீரீ). அதாவது பணத்தைப் பதுக்கி வைப்பதால் லாபம் சேராது. அது புழக்கத்தில் இருக்கும் போதே லாபத்தை அள்ளும். பதுக்கி வைப்பவர்களுக்குப் பெயர் ‘கஞ்சர்கள்’. லாபம் சம்பாதிப்பவர்களின் பெயர் ‘முதலாளிகள்’. அந்த வகையில் “கருப்பு நடவடிக்கைகளில்” ஈடுபடுவோர் முதலாளிகள்தானே ஒழிய கஞ்சர்கள் அல்ல. உள்நாட்டில் இருப்பதை விட கணிசமான அளவு ‘கறுப்புச் செயல்பாடுகள்” வெளிநாட்டிலிருக்கும் வங்கிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றன.
இரண்டாம் உலகப் போரால் உண்டான பேரிழப்பை ஈடு செய்ய உருவான புதிய பொருளாதாரக் கொள்கை “வளர்ச்சி” என்னும் சொல்லாடல் மூலம் மொத்த உலகையும் வசீகரிக்க ஆரம்பித்தது. அதற்காக உலகில் எந்த நாட்டிலும் யார் வேண்டுமானாலும் வணிகம் செய்யலாம் என்ற தாராளவாத பொருளாதாரத் திட்டங்கள் தீட்டப்பட்டு உலகெங்கிலும் பல தனியார் பெரு நிறுவனங்கள் வணிகம் செய்யத் தொடங்கின.
1990 க்குப் பிறகு உலகக் கம்பெனிகளின் திறந்த வெளிச் சந்தையாக இந்தியா மாறியது. யார் வேண்டுமானாலும் இந்தியாவில் வந்து வணிகம் செய்யலாம் எந்த தடையும் கிடையாது என்ற நிலை உருவானது.
1997-ல் 5.7 லட்சம் கோடி டாலராக (சுமார் ரூ 300 லட்சம் கோடி) இருந்த உலக கோடீசுவரர்களின் செல்வம் 2009-ல் 32.8 லட்சம் கோடி டாலராக (சுமார் ரூ 1900 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.
கறுப்புப் பண முதலைகளுக்காகவே உலகெங்கும் பல ‘வரியில்லா சொர்க்கங்கள்’ இருக்கின்றன. அந்த நாடுகளில் எந்த பரிவர்த்தனைக்கும் வரி கட்டத் தேவையில்லை. வங்கிகளும் வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை ரகசியமாகப் பராமரிக்கின்றன. கறுப்புப் பணம் அங்குதான் முதலீடாகிறது” என்கிறார் இந்திய வங்கி அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் நாகராஜன். நாமறிந்த சுவிஸ் வங்கி தவிர உலகில் 155 கறுப்பு வங்கிகள் உண்டு. இந்த வங்கிகளில் இந்தியர்களுக்கு பெரும் வரவு-செலவு உண்டு. வெறும் 54 ஆயிரம் பேர் வசிக்கும் கேமன் தீவுகளில் 80 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து இந்தியாவிற்குள் முதலீடு செய்யப்படுகிறது.
லஞ்சமாக ஊழலாக கள்ளத் தனமாக பெறப்படும் பெரும் தொகைகள் - கறுப்புப் பணம், ஒன்று வியாபார சரக்குகளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இரண்டாவது அணு உலை மற்றும் மின்சார உற்பத்தி ஆலைகளுக்கான கருவிகளாக இறக்குமதியாகிறது. இப்படித்தான் இந்தியாவிலிருந்து வெளியேறும் கறுப்புப் பணம் வெளிநாடுகளில் இருந்து முதலீடாக இந்தியாவிற்குள் வௌஙிளையாக வருகிறது என்கிறார் ஹைதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நரசிம்ம ரெட்டி. வெளிநாட்டு முதலீடுகள் எங்கிருந்து வருகிறது யாருடைய பணம் என்று கேட்டு வாங்கும் துணிச்சல் இல்லாதவர்கள். நாம் சம்பாதிக்கும் பத்தாயிரத்துக்கும் இருபதாயிரத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் என்கிறார்கள்.
உள்நாட்டில் கறுப்புப்பணம் இல்லவே இல்லையா என்று கேட்கலாம். ஆங்காங்கே ரொக்கமாக இருக்கக்கூடிய உள்நாட்டில் புழங்கும் கள்ள நோட்டுகளின் தொகை 4 கோடி என்றும், இந்திய சந்தையில் புழக்கத்தில் உள்ள கறுப்புப் பணம் 70.000 கோடி என்றும் சொல்கிறது ஆர்.பி.ஐ. ஆனால் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பொருளாதாரத்தின் தொகை 80 லட்சம் கோடி. ஒரு வாதத்துக்கு தற்போதைய நடவடிக்கையால் ஒருவேளை கறுப்புப் பணம் முடக்கப்படும் என்றே வைத்துக்கொண்டாலும், அது ஒரு நுனிதான். அதற்காக மக்கள் இவ்வளவு சிரமங்களைத் தாங்க வேண்டுமா?
முதலில் கறுப்புப் பணம், கள்ளப் பணத்தை ஒழிக்க 500, 1000 நோட்டுகள் செல்லாது என்றவர்கள் இப்போது நாட்டில் வருமான வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அனைவரையும் வரி செலுத்துவோராக மாற்றத்தான் இந்த நடவடிக்கை என்கிறார்கள். பின்பு பணமில்லா வர்த்தகம் தான் இலக்கு என்கிறார்கள். பொய்யிலே ஊறிப் போனவர்களிடம் இப்படி மாறி மாறி பேசுவதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
நிலம் வாங்கினால் வரி, நகை வாங்கினால் வரி, வாகனங்கள் வாங்கினால் வரி, வீடு வாங்கினால் வரி, விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி, வீட்டு வரி, தண்ணீர் வரி, ரோட்டு வரி, சேவை வரி இவையெல்லாம் வெளிப்படையான வரிகள். இதைத் தவிர அறிவிக்கப்படாமல் வசூலிக்கபடும் மறைமுக வரி இந்த வரிகளை கட்டுகிறவன் யார்? சம்பளம் பெறுகிறவர்கள், சுயமாக தொழில் செய்கிறவர்கள்தான்.
வணிகம், தொழில் செய்வோர் முறையாகக் கணக்குக் காட்டவில்லை என்றால், அவர்களது நிறுவனங்களை வருமான வரித்துறையால் எந்த நேரத்திலும் சோதிக்க முடியும். அமுலாக்கத் துறை என்ற தனிப் பிரிவு இப்பணியைச் செய்து முடிக்க முடியும். அப்படி நிர்வாகத்தை சரி செய்யாமல் 500 / 1000 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து என்ன சாதித்து விட முடியும்?
தனியார்மயம் தாராளமயம் உலகமயம் ஆகியவை அமல்படுத்தப்பட்ட 1991 முதல் முதலாளிகளுக்கு நேர்முக வரிகள் படிப்படியாக குறைக்கப்பட்ட பிறகுதான் வரி ஏய்ப்பும், கறுப்புப் பண வெளியேற்றமும் அதிகரித்தன என்கிறார் குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிட்டி என்ற நிறுவன ஆய்வாளர் தேவ்கர்.
ஆண்டுதோறும் உருவாக்கப்படும் கறுப்பு பணத்திற்கு கார்ப்பரேட் முதலாளிகளும், நிறுவனங்களும் முறையாக வரி கட்டினாலே குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ 7.5 லட்சம் கோடி ரூபாய் வசூலாகும் என்றும், அது ஆண்டு தோறும் வசூலாகும் மொத்த வரிப்பணத்தை (ரூ.6.4 லட்சம் கோடி) விட அதிகம் என்றும் கூறுகிறார் ‘இந்தியாவின் கறுப்பு பொருளாதாரம்’ என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார். பெரு நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்க வழியில்லாதவர்கள் நோக்கியா, வோடாஃபோன் கம்பெனிகளிடம் வரியை கேட்டு வாங்க முடியாதவர்கள் 30 சதவீதத்திற்கு மேல் வரி கட்டும் பொதுமக்களை வரி கட்டவில்லை என்கிறார்கள். கறுப்புப் பணம், கள்ள நோட்டு, வரி ஏய்ப்பு, பணமில்லா வர்த்தகம் என இவர்கள் வார்த்தைகளில் விளையாடுகிறார்கள்.
இவர்களின் இலக்கு சிறுவியாபாரிகளை ஒழித்து சிறுவணிகத்தை அழிப்பது. இனிமேல் எது வாங்கினாலும் பிக் பஜார், ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்களில் வாங்கு அதற்கு பணம் தேவையில்லை. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் போதும் என்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை ஏன் கையில் வைத்திருக்கிறீர்கள் வங்கிக் கணக்கில் கொண்டு போய் போடுங்கள் அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு என்கிறார்கள். எந்த சர்வாதிகாரியும் சொன்னதில்லை நீ சம்பாதிப்பதை என்னிடம் கொடு. உனக்குத் தேவையானதை என்னிடம் வாங்கிக் கொள் என்று. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் இதை சொல்கிறார். அந்த உரிமையை அவருக்குத் தந்தது யார்?
வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி நீங்களும், நானும், வங்கிக்கு இதுவரை வந்து சேர்ந்துள்ள பணம் 8 லட்சம் கோடிக்கு மேல். பிரதமர் இப்போது அறிவிக்கிறார் வங்கிகளில் வந்து சேர்ந்துள்ள பணம் முதலீட்டுக்கு வழங்கப்படும் என்று. ஊர் சொத்தை திரட்டி கொள்ளையர்களின் வாயில் போடத்தான் இந்த அறிவிப்பு.
2008 ஆம் ஆண்டில் அமெரிக்க பெருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தது. கிரீஸ் நாடு திவாலாகிக் கொண்டிருக்கிறது. 2008 களில் உலகின் பல நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்தது ஏன்? வங்கிகள் வழங்கிய கடன்களால்தான்!
நாட்டின் பொருளாதாரம் முழுவதும் வங்களின் கைகளுக்கு போனதன் பின்னால் வங்கிகள் வீழ்ச்சியை சந்திக்கும் போது நாடு திவாலாகும் நிலைக்குப் போனதுதான் நாம் வாழும் காலத்தின் வரலாறு. இந்தியாவையும் அந்த பட்டியலில் சேர்க்க அரும்பாடுபட்டு வருகிறது ஆளும் மத்திய பா.ஜக. அரசு.
கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் கள்ளப்பணத்தை அழிக்க வேண்டும் என்பது செய்ய வேண்டிய அவசியமான காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. செய்யப்பட வேண்டிய வழிமுறைகளில் தெளிவும் நிதானமும் நேர்மையும் இருக்க வேண்டும். மக்களிடம் புரையோடிப்போயுள்ள பேராசையை ஒழிக்காமல் லஞ்சத்தையும் ஊழலையும் வரி ஏய்ப்பையும் ஒரு காலத்திலிலும் ஒழிக்க முடியாது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தாமல் பணப்பதுக்கலையும் கறுப்புப் பண முதலீட்டையும் இல்லாமலாக்க இயலாது.
500 1000 நோட்டுகள் செல்லாதவை என்ற அறிவிப்பு ஒரு படத்தில் வரும் ஆக்ஷன் காட்சி மட்டுமே! அது முடிவல்ல!
அதற்குத் அடிப்படைத் தேவை துணிச்சலில்லை. நேர்மை.